உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனியார் நிறுவனங்களை போல ஆவினில் மோசடியில் ஈடுபடலாமா? அன்புமணி விளாசல்

தனியார் நிறுவனங்களை போல ஆவினில் மோசடியில் ஈடுபடலாமா? அன்புமணி விளாசல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆவின் பச்சை பாக்கெட் பாலின் பெயரை மாற்றி, லிட்டருக்கு ரூ.11 உயர்த்தி விற்பது பகல் கொள்ளை என்றும், கிரீன் மேஜிக் பிளஸ் பால் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கிரீன் மேஜிக் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் பச்சை பாக்கெட் பாலில் உள்ள அதே 4.5% கொழுப்புச் சத்து, அதே 9% கொழுப்பு அல்லாத திடப்பொருள்கள் (Solids Not Fat -SNF) கொண்ட பாலை ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் என்ற பெயரில் திருச்சி மண்டலத்தில் ஆவின் அறிமுகம் செய்துள்ளது. கிரீன் மேஜிக் ஒரு லிட்டர் ரூ.44க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 900 மிலி ரூ.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாலின் விலையை மறைமுகமாக உயர்த்தும் ஆவின் நிறுவனத்தின் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கது.ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, அளவும் குறைக்கப்பட்டுள்ளது. கிரீன் மேஜிக் 500 மி.லி., பாக்கெட்டுகளில் ரூ.22க்கு விற்கப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 450 மி.லி., பாக்கெட்டுகளில்ரூ.25-க்கு விற்கப்படும். அப்படிப் பார்த்தால் கிரீன் மேஜிக் பிளஸ் பாலின் விலை லிட்டர் ரூ.55 ஆகும். இது கிரீன் மேஜிக் பாலின் விலையை விட லிட்டருக்கு ரூ.11 அதிகம் ஆகும். ஆவின் கிரீன் மேஜிக் பாலில் உள்ள கொழுப்பு மற்றும் கொழுப்பு இல்லாத சத்துகளுக்கும், ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலில் உள்ள சத்துகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. பால் பாக்கெட்டுகளின் கலரை மாற்றி பிளஸ் என்ற வார்த்தையை கூடுதலாக சேர்ப்பதற்காக ரூ.11 அதிகம் வசூலிப்பது பகல் கொள்ளையாகும்.ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் கூடுதல் வகையாக மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தால், அதை விருப்பம் உள்ளவர்கள் மட்டும் வாங்கிக் கொள்ளட்டும் என்று கண்டுகொள்ளாமல் இருந்து விடலாம். ஆனால், தமிழகம் முழுவதும் இந்த வகை பாலை அறிமுகம் செய்து விட்டு, லிட்டர் ரூ.44க்கு விற்கப்படும் கிரீன் மேஜிக் பாலை நிறுத்தி விடுவது தான் ஆவின் நிறுவனத்தின் திட்டம் ஆகும். இதன் மூலம் ஆவின் பச்சை பாக்கெட் பாலை நுகர்வோர் வேறு பெயரில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். விலை உயர்வை விட கண்டிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், விலை உயர்வு அதிகமாக தெரியக்கூடாது என்பதற்காக ஓர் பாக்கெட்டின் விலையை ரூ.3 உயர்த்தி விட்டு, பாலின் அளவை 50 மி.லி., குறைத்திருப்பது தான். இது வணிக அறம் அல்ல. வழக்கமாக தனியார் நிறுவனங்கள் தான் விலை உயர்வை மக்கள் கண்டுபிடிக்காமல் இருப்பதற்கான அளவைக் குறைக்கும் மோசடியில் ஈடுபடும். தனியார் நிறுவனங்கள் கையாளும் அதே மோசடியை அரசு நிறுவனமான ஆவின் நிறுவனமும் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்பட்டது. ஆனால், அதற்கு பிந்தைய மூன்றாண்டுகளில் மூன்றாவது முறையாக பால் விலை உயர்த்தப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி ஆரஞ்சு வண்ண உறையில் விற்கப்படும் நிறை கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு ஆவின் பச்சைப் பாலுக்கு மாற்றாக அதே விலையில் 3.5% என்ற குறைந்த கொழுப்புச் சத்து கொண்ட ஆவின் டிலைட் பாலை அறிமுகம் செய்து மறைமுக விலை உயர்வை அரசு திணித்தது. பா.ம.க.உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பால் அப்போது ஆவின் பச்சைப் பாலின் விற்பனை கைவிடப்படவிருந்தது தடுத்து நிறுத்தப்பட்டது. இப்போது ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் என்ற பெயரில் ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.11 உயர்த்தப்படுகிறது.அரசுத்துறை நிறுவனமான ஆவின் அதிக லாபம் ஈட்டுவதற்காக அநீதியான வழிமுறைகளை பின்பற்றக் கூடாது. அதிக விலை கொண்ட ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ஒரு லிட்டர் ரூ.44 என்ற விலையில் விற்பனை செய்யப்படும், ஆவின் கிரீன் மேஜிக் பாலை நிறுத்தாமல், இப்போது வினியோகிக்கப்படுவதைப் போன்றே தொடர்ந்து விற்பனை செய்ய வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

அப்புசாமி
அக் 18, 2024 17:34

எல்லாமே திருட்டு திராவிடம் தான். தனியாராவது அரசு நிறுவனமாவது?


mindum vasantham
அக் 18, 2024 16:15

பால் வளத்துறை ஆபாச வீடியோ வெளியாகியது ஸ்டாலின் பார்த்து ரசித்தாரே தவிர நடவடிக்கை எடுக்கவில்லை


வைகுண்டேஸ்வரன்
அக் 18, 2024 15:58

அதாவது தனியார் நிறுவனங்கள் மோசடி செய்கின்றனர் என்கிறார்.


வைகுண்டேஸ்வரன்
அக் 18, 2024 15:44

இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் பால் விலை குறைவு. சில மாநிலத்தில் விலைகள் குஜராத் தில் லிட்டர் ரூ.66. கேரளா வில் ரூ. 56. உ. பி. யில் ரூ. 60.


raja
அக் 18, 2024 16:04

ஆனா மழை வெள்ளம் வந்தால் மற்ற மாநிலங்களை காட்டிலும் மூன்று மடங்காக விலை ஏற்றி கொள்ளை அடிக்கும் திருட்டு மாடல் அரசு....


ஆரூர் ரங்
அக் 18, 2024 16:28

இதையே மத்திய அரசு செய்திருந்தால்? வேற வாயி?


Smba
அக் 18, 2024 14:56

1000 ரூபாயும் ஓசி பஸ்சும் கண்ன மறைக்குது இந்த அறிக்கை யெல்லாம் எடுபடாது


Raj Kamal
அக் 18, 2024 16:04

தமிழ்நாட்ட தாண்டி எங்கேயாவது போய் பால் விலையை கேளுங்கள். அப்போதுதான் புரியும் தமிழ்நாட்டில் நாம் எவ்வளுவு குறைவாக பால் விலையை வைத்துள்ளோம் என்று. மட்டுமில்லாமல், பஸ் டிக்கட் விலையும் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் தான் மிக மிக குறைவு. இது இப்பொது மட்டுமில்லை எப்போதும் இதுதான் இங்கு நிலைமை.


raja
அக் 18, 2024 19:35

அட கொத்தடிமையே ,இதே போல் மத்திய அரசு பெட்ரோல் விலை குறைத்த பொழுது வாட் வரியை குறைக்காமல் மற்ற மாநிலத்தை விட அதிகமாக விடியல் திருட்டு மாடல் அரசு விற்கிறதே,அத சொல்ல மாட்டாயே...


Raj Kamal
அக் 24, 2024 10:59

ராஜா கொத்தடிமை போலும் தான் கொத்தடிமையாகையால் பார்ப்பவர்கள் அனைவரையும் அவ்வாறே நினைக்க தோன்றுகிறது. இதற்க்கு ஒன்றும் செய்யமுடியாது.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 18, 2024 14:15

விலையை குறைப்போம் என்று சொன்னோம் குறைத்தோம். விலையை ஏற்றமாட்டோம் என்று எங்கும் நாங்கள் சொல்லவில்லை. நாங்கள் சொல்வதை செய்வோம் சொல்லாததையும் செய்வோம்.


Narayanan Sa
அக் 18, 2024 14:12

திமுக என்றாலே பொய் புரட்டு பித்தலாட்டம் என்பது எல்லோருக்கும் தெரியும்.


raja
அக் 18, 2024 13:58

தனியார் நிறுவனத்தை தாண்டிய ஒன்கொள் கொள்ளைக்காரர்களிடம் மாநிலம் சிக்கி கொண்டு உள்ள பொது இது மட்டும் எம்மாத்திரம்...


வைகுண்டேஸ்வரன்
அக் 18, 2024 17:16

இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் பால் விலை குறைவு. சில மாநிலத்தில் விலைகள் குஜராத் தில் லிட்டர் ரூ.66. கேரளா வில் ரூ. 56. உ. பி. யில் ரூ. 60. இதெல்லாம் தெரிஞ்சுக்காமல், ஒன்கொள் என்று கிணற்றுத் தவளை மாதிரி தினமும் புலம்பிண்டிருங்கோ. பொது அறிவை வளர்த்துக்கற எண்ணமே இல்லை போல.


raja
அக் 18, 2024 18:16

இதே போல் மத்திய அரசு பெட்ரோல் விலை குறைத்த பொழுது வாட் வரியை குறைக்காமல் மற்ற மாநிலத்தை விட அதிகமாக விற்கிறதே கேடுகெட்ட விடியல் திருட்டு மாடல் அரசு அத சொல்ல மாட்டாயே..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை