உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமூகநீதிக்கு எதிரான செயலை உடனே கைவிடுங்க: அரசுக்கு அறிவுரை சொல்கிறார் ராமதாஸ்

சமூகநீதிக்கு எதிரான செயலை உடனே கைவிடுங்க: அரசுக்கு அறிவுரை சொல்கிறார் ராமதாஸ்

சென்னை: 'மத்திய அரசில் இணை செயலாளர்களை நேரடியாக நியமிப்பது சமூகநீதிக்கு எதிரானது. உடனடியாக கைவிட வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை: மத்திய அரசு நிர்வாகத்தில் இணை செயலாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலையிலான 45 அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்வதற்கான விளம்பர அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் உயர்பதவிகளுக்கு தகுதியான ஆட்களை நியமிப்பதற்காக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.

பதவி உயர்வு

மத்திய அரசின் உயர்பதவிகளில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை நேரடியாக நியமிக்கும் முறையில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படாது. அதனால், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு இந்த பதவிகள் கிடைக்காத நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி, ஏற்கனவே பல்வேறு நிலையிலான பணிகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்புகளும் பாதிக்கப்படும். அரசு நிர்வாகத்தின் உயர்பதவிகளில் வல்லுனர்களை நேரடியாக நியமிக்கும் முறை முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் கொண்டு வந்தது என்று கூறி, அதை இன்றைய அரசு கடந்து செல்ல முடியாது.

சமூகநீதி

நீட் தேர்வு உள்ளிட்ட சமூக நீதிக்கு எதிரான பல திட்டங்கள் காங்கிரஸ் ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டன. ஆனால், அதையெல்லாம் இன்றைய அரசு அப்படியே பின்பற்ற வேண்டிய கட்டாயம் என்ன? சமூகநீதிக்கு எதிரான எந்த முடிவாக இருந்தாலும், அதை எந்த அரசு எடுத்திருந்தாலும் அதை ரத்து செய்வது தான் சமூகநீதி அரசுக்கு அழகாகும். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு சமூகநீதியில் அக்கறை இருந்தால், நேரடி நியமன முறையை கைவிட வேண்டும்.

இட ஒதுக்கீடு

45அதிகாரிகளை தேர்வாணையம் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முறையில் செய்யப்படும் நியமனம் வெளிப்படையாக இருக்காது. எனவே, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர், இயக்குனர்கள் உள்ளிட்ட நிலைகளில் தனியார் நிறுவன அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மாறாக, குடிமைப்பணிகளுக்கான அனைத்து நியமனங்களும் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி செய்யப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sathyanarayanan Sathyasekaren
ஆக 20, 2024 20:35

போங்க உங்க சமூகநீதி உருட்டுக்கள். உயர் பதவிகளுக்கு தகுதி, நேர்மை நிர்வாகத்திறமை, படிப்புஅறிவு எதுவம் தேவையில்லை, ஒரு ஜாதியில் பிறந்துஇருந்தால் போதுமா? இன்னும் 100 வருடங்கள் இடஒதுக்கீடு கொடுத்தாலும், கார்கே, 2 ஜி ராஜா போன்ற ஆட்கள் தவிர சாதாரண ஒருவன் முன்னே வர விட்டுவிடுவீர்களா? இட ஒதுக்கீடு பிட்சை எடுக்க வெட்கப்படுங்கள்.


saravan
ஆக 20, 2024 16:58

அப்புறம் வன்னியர் இட துக்கீடு எதுக்கு...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை