உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயி மீதான குண்டர் சட்டம் ரத்து

விவசாயி மீதான குண்டர் சட்டம் ரத்து

சென்னை:திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா 'சிப்காட்' விரிவாக்கத்திற்கு எதிராக போராடிய விவசாயி அருள் ஆறுமுகம் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை அரசு ரத்து செய்துள்ளது.போராட்டத்தை ஒடுக்கும் வகையில் 19 விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஏழு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து ஆறு பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திப்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி அருள் ஆறுமுகம் 45 மீது போடப்பட்ட குண்டர் சட்டம் மட்டும் ரத்து செய்யப்படவில்லை. இதை எதிர்த்து அவரது மனைவி நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் அருள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உள்துறை செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ