மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
3 hour(s) ago | 13
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
10 hour(s) ago | 3
ஆத்தூர் : சேலம் மாவட்டம் தலைவாசல் சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் மும்முடி அருகே சென்று கொண்டிருந்த வேன் எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வேன் டிரைவர் மற்றும் பாபு லால் (60), ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. வேனில் பயணம் செய்தனர்கள் ஈரோட்டிலிருந்து புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்ததாகவும், நான்கு வழிச்சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், ஒருபகுதி மட்டும் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையறியாத வேன் டிரைவர் மண் கொட்டியிருந்த சாலை வழியாக வேன் ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
3 hour(s) ago | 13
8 hour(s) ago | 1
10 hour(s) ago | 3