உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சினிமாவில் நடிப்பது மட்டும் அரசியலுக்கு போதுமானதல்ல: மதுரை ஆதீனம்

சினிமாவில் நடிப்பது மட்டும் அரசியலுக்கு போதுமானதல்ல: மதுரை ஆதீனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: ''சினிமாவில் நடிப்பது மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு. மக்களுக்காக தொண்டு செய்வது தான் அரசியல்,'' என, மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம் கஞ்சனுாரில், மதுரை ஆதீனம் 293வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் அளித்த பேட்டி: ரம்ஜான் பண்டிகைக்கு தமிழக அரசு மூலம் அரிசி உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றன. அதை செய்யும் அரசு, ஹிந்து கோவில்களுக்கும் திருவிழாக்களின் போது, கூழ் ஊற்றுவதற்கு அரிசி உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும். எல்லோருக்கும் பொதுவான அரசு, பண்டிகைகளில் மதம் பார்த்து செயல்படக் கூடாது.வரும் 2028ம் கும்பகோணத்தில் மகாமக பெருவிழா கொண்டாடப்படும். அதை, அரசு மிகப் பெரிய அளவில் முன்னெடுக்க வேண்டும். அதற்கான முன்னேற்பாடுகளை இப்போதிலிருந்தே திட்டமிட்டு செய்ய வேண்டும்.அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை உள்ளது. அப்படிப்பட்ட சூழல் மாற வேண்டும். கடுமையாக உழைத்து, யாரெல்லாம் மக்கள் பணியாற்றி உள்ளனரோ, அவர்களே அரசியலுக்கு வர வேண்டும். அப்போதுதான், மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து, அவர்கள் மக்கள் பணியாற்றுவர்.சினிமாவில் நடிப்பது மட்டும் அரசியலுக்கு போதும் என நினைத்து, நடிகர்கள் பலரும் அரசியலுக்கு வர நினைக்கின்றனர். அது தவறு. அரசியலுக்கு சினிமா தேவையில்லை. மக்களுக்கு தொண்டாற்றும் மனநிலைதான் முக்கியம். யாரையும் மனதில் வைத்து இதைக் குறிப்பிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

நரேந்திர பாரதி
ஏப் 03, 2025 03:58

ஜோசப் விஜய் படத்துல மட்டும் தான் விபூதி பூசி நடிப்பார்....மத்தபடி திராவிடியா கும்பலுடன் சேர்ந்து மக்களுக்கு விபூதி அடிப்பார்


M Ramachandran
ஏப் 02, 2025 14:53

ஐயா ஜாக்கிரதை. கிருபானந்த வாரியார் அவர்கள் நிஜத்தை கூற போய் அவரை இந்த திராவிடம் பேசும் கும்பல் உயிர் பயம் காட்டியது


sridhar
ஏப் 02, 2025 14:15

ட்ராமாவிலும் நடிக்க வேண்டுமா


Indian
ஏப் 02, 2025 13:33

சரியாக கூறியுள்ளார் ஆதீனம் அவர்கள். வணக்கம் .


Mani . V
ஏப் 02, 2025 12:31

நீ ஆதீனத்து வேலையை மட்டும் பார். வேறு எதுவும் புடுங்க வேண்டாம். சரி நீ கோபாலபுர வாழ்நாள் கொத்தடிமைதானே, ஸ்டாலினும், உதயநிதியும் நடிகர்கள்தானே, திராணி இருந்தால் அவர்களிடம் சொல்லு பார்க்கலாம். நீ நிருபராக இருந்து என்ன தில்லு முள்ளு வேலை செய்து இந்த ஆதீன பதவிக்கு வந்தாய் என்று எங்களுக்குத் தெரியும்.


Ramesh Sargam
ஏப் 02, 2025 12:27

சரியாக கூறினார்.


Indian
ஏப் 02, 2025 13:34

வாழ்க்கையிலே முதல் முதல்ல சரியாக கருத்து கூறியதற்கு வாழ்த்துக்கள் ...


Jay
ஏப் 02, 2025 11:21

சுதந்திர நாட்டில் கருத்து கூறுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டுதான். மக்கள் சிந்தித்து திறமையான அரசியல்வாதியை தேர்ந்தெடுப்பார்கள் என்ற நிலை இருந்தால் நடிகர்கள் அரசியலுக்கு வர முடியாது. மக்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிப்பதற்கு பல ஆண்டுகள் இருக்கின்றன. திமக போன்ற கட்சிகள் மக்கள் சிந்திக்காதவாறு மீடியாக்களை கட்டுப்படுத்தி போலி நாடகம் நடத்தி ஆட்சியை பல ஆண்டுகள் இருக்காது.


Rajah
ஏப் 02, 2025 10:07

திராவிடர்கள் ஆட்சியைப் பிடிப்பதற்கு முக்கிய காரணம் சினிமாதான். திராவிடர்கள் ஆசிய பணக்கார்களாவதற்கும் சினிமாதான் காரணம்.


Rajarajan
ஏப் 02, 2025 10:04

இது உங்க பதவிக்கு தேவையில்லாத கருத்து ஸ்வாமி. நீங்க தி.மு.க. வோட ஊதுகுழலா இருந்தா, பதவியை ராஜினாமா பண்ணிட்டு, அரசியல் பேசுங்க. இந்த மாதிரி பேசி சிக்கல் ஏற்படுத்தறதுனாலதான், ஒருத்தர் முன்னயே பராசக்தி படத்துல, ஒரு வசனம் எழுதினார்.


கல்யாணராமன்
ஏப் 02, 2025 09:53

ஆதீனத்தில் திருமுறை உள்ளிட்ட சைவ சித்தத்தில் நன்கு படித்தவர்கள் மட்டுமே பங்கு பெறும் வகையில் தேர்தல் நடத்தி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதீனகர்தா தேர்வு செய்யப்பட வேண்டும். தங்களுக்கு வேண்டியவர்களை ஆதினகர்த்தாவாக தேர்வு செய்யும் முறைக்கு முடிவு கட்ட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை