உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உலக நாயகன் பட்டத்தை துறந்தார் கமல்!

உலக நாயகன் பட்டத்தை துறந்தார் கமல்!

சென்னை: 'தன்னை யாரும் உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம்; கமல், கமலஹாசன் அல்லது KH என்று அழைத்தால் போதுமானது' என ரசிகர்கள், திரைதுறையினர், கட்சியினருக்கு நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:

என் மீது கொண்ட அன்பினால் 'உலக நாயகன்' உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன்; உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன். உங்களின் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வும் உண்டு.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l7agzxe9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சினிமாக் கலை, எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது. அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான். பிற கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது; அனைவராலுமானது. திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது.கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது.

கமல், KH என்று அழையுங்கள்!

அதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது. மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக் குறைவும் வந்து விடாத வண்ணம் அவற்றைத் துறப்பது என்பதே அது.எனவே, என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன்.

சக மனிதன் ஸ்தானம்

இத்தனை காலமாக நீங்கள் என் மேல் காட்டி வரும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன். சக மனிதன் என்கிற ஸ்தானத்திலிருந்தும், சினிமாவை நேசிக்கிற நம் அனைவரிலும் ஒருவனாகவே நான் இருக்க வேண்டும் என்கிற என் எண்ணத்தில் இருந்தும் இந்த வேண்டுகோள் வெளிப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு கமல் கூறியுள்ளார். ஏற்கனவே தன்னை தல என்று அழைக்காதீர்கள் என நடிகர் அஜித் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 66 )

Venkatesh
நவ 16, 2024 23:48

அவர் மிகப்பெரிய அறிவாளி.... தன்னை உருவி நாயகன் என்று அழைத்தால் பெருமை கொள்வார்.


Rajan
நவ 15, 2024 11:28

கமல் தான் உலக நாயகன். இதை விமர்சிக்க எவருக்கும் அதிகாரம் கிடையாது.


கல்யாணராமன் சு.
நவ 16, 2024 15:22

ஒருவேளை "உலக்கை நாயகன்" அப்படின்னு சொன்னா கோபப்படுவீங்களா ?


Iniyan
நவ 13, 2024 00:52

இவரே பட்டம் கொடுதுப்பாரு இவரே அதை துறப்பாரு.. நல்ல நடிகன்... இன்னும் இந்த கூத்தாடி பயல்களை நம்பும் மக்கள் முட்டாள்கள்


Vijay D Ratnam
நவ 12, 2024 15:33

இந்திய சினிமாவின் ஐகான். நான்கு முறை தேசிய விருது பெற்ற கமல்ஹாசனுக்கு இந்த உலக நாயகன், ஆழ்வார்பேட்டை ஆண்டவா போன்ற பட்டங்கள் தேவையில்லை. அதுபோல அரசியலும் தேவையில்லை. நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர், பாடகர், பாடலாசிரியர், நடனக்கலைஞர், எடிட்டிங் என்று சினிமாவின் பல துறைகளில் உச்சம் தொட்ட கமல்ஹாசன் அரசியலில் இறங்கி என்ன சாதித்தார். சினிமாவில் ஹீரோ, வில்லன், காமெடியன் என்று கலக்கிய கமல் அரசியலில் காமெடியன் ஆகி போய்விட்டார். அதிலும் சீமான் அளவுக்கு சூப்பர் காமெடியன் ஆகவும் இல்லை. வேணாம் கமல்சார் காலை கழுவிகிட்டு மேலே வாங்க.


கல்யாணராமன் சு.
நவ 16, 2024 15:27

அவர் அரசியலில் இருந்தெல்லாம் வெளியே வரமாட்டார் . ... பட்டத்தை வேண்டுமென்றால் துறப்பார் .. MP பதவி ஆசையை சத்தியத்துக்கும் துறக்க மாட்டார் . ....


Smba
நவ 12, 2024 07:01

இனி மாதம் மும்மாரி தான்


krishna
நவ 11, 2024 23:01

AAMAM ULAGA NAAYAGAN AVARUKKU PIDIKKA VILLAI.


பச்சை தமிழன்
நவ 11, 2024 22:13

எனக்கென்னமோ சந்தேகமாக இருக்கிறது...இந்த அதிமேதாவி கமல் ...இந்த பட்டத்தை துறக்க கூடிய ஆள் இல்லை. ஒருவேளை நம் மன்னரும், இளவரசரும் இல்லையில்லை துணை மன்னரும் ராஜ்யசபா சீட் வேண்டும் என்றால் இந்த உலக நாயகன் பட்டத்தை துறந்தால் மட்டுமே அந்த பதவி கொடுக்கப்படும் என்று மிரட்டி இருப்பார்களோ என்னவோ..இல்லை தம்மை விட திறமையான அதி புத்திசாலிகள் இருப்பதை ஒப்புக்கொண்டு வயதாகி விட்டதால் தலை கணத்தை இறக்கி வைத்து விட்டாரோ என்னவோ...விஜய் துப்பாக்கியை SK கையில் கொடுத்த மாதிரி உலக நாயகன் பட்டத்தை SK இடம் கொடுக்க போகிறாரோ


Ananthanarayanan Aa
நவ 11, 2024 20:45

அப்பாடா நம்ம தமிழ் நாட்டின் கஜானா முழுவதும் நிரம்பி வழிகிறது. போங்கடா


sankar
நவ 11, 2024 19:52

தியாகி நம்பர் 2


vbs manian
நவ 11, 2024 19:23

கழக தொடர்பை எப்போது து றப்பார்.


புதிய வீடியோ