உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயகாந்த் வீட்டில் நடிகர் விஜய்: பிரேமலதாவை சந்தித்தார்

விஜயகாந்த் வீட்டில் நடிகர் விஜய்: பிரேமலதாவை சந்தித்தார்

சென்னை: மறைந்த தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்றார் நடிகர் விஜய்.நடிகர் விஜய் ‛‛தமிழக வெற்றிக்கழகம்'' என்ற கட்சியை துவக்கியுள்ளார். இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்று தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதாவை சந்தித்து பேசினார். அவருடன் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரி்ப்பாளர் அர்ச்சனா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.நடிகர் விஜய் நடித்து வெளியாக உள்ள கோட் படத்தில் நடிகர் விஜய்காந்த், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதுஇதையடுத்து இன்று நடிகர் விஜய், விஜயகாந்த் வீட்டிற்கு சென்று பிரேமலதாவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

முருகன்
ஆக 19, 2024 23:05

கேப்டன் மகனுடன் ஒரு படம் நடிக்க வேண்டும் கேப்டன் உங்களுக்கு உதவியது மாதிரி


Ramesh Sargam
ஆக 19, 2024 21:15

விஜய்யின் தூண்டிலில் விஜயகாந்த் கட்சியில் உள்ள மீனவர்கள் கட்சி உறுப்பினர்கள் சிக்குவார்களா..? சிக்கிட்டாங்க என்று கேள்விப்பட்டேன்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி