உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகை பிந்து கோஷ் காலமானார்

நடிகை பிந்து கோஷ் காலமானார்

சென்னை: வயது மூப்பின் காரணமாக உடல்நலப் பிரச்னையில் அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகை பிந்து கோஷ்,76, காலமானார்80 காலகட்டத்தில் மனோரமா, கோவை சரளா போல காமெடியில் கலக்கியவர் நடிகை பிந்து கோஷ். முன்னணி நடிகர்கள் பலரின் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவருக்கு தற்போது 76 வயதாகிறது. வயது மூப்பின் காரணமாக கடந்த சில வருடங்களாக உடல்நலப் பிரச்னையை எதிர்கொண்டுவந்தார்.அவருக்கு உடலில் பல்வேறு பிரச்னைகள் இருக்கும் நிலையில் மருத்துவ செலவு மற்றும் சாப்பாட்டு செலவுக்கு கூட பணம் இல்லாமல் அவர் கஷ்டப்படுவதாக பல பேட்டிகளில் பேசியிருந்தார். அவரின் நிலையை தெரிந்து கொண்ட நடிகர் விஷால், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் கேபிஒய் பாலா, நடிகை ஷகீலா உள்ளிட்டோர் பிந்து கோஷூக்கு உதவி செய்தனர்.இந்த நிலையில், இன்று மதியம் 2 மணியளவில் அவர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனை அவரது மகன்கள் உறுதிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Subramanian
மார் 17, 2025 07:39

ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி


vadivelu
மார் 17, 2025 02:43

ஏதாவது ஏர்போர்ட்டில் எவன் ஹிந்தி பேசறான் என்று பார்த்து கொண்டு இருப்பார்கள். எங்கெல்லாம் இந்து கோவில்களுக்கு சுண்ணாம்பு அடிக்கிறார்கள் கமெண்டை அடிக்காலாம் என்று சுற்றி கொண்டும் இருக்கலாம்.


Premanathan Sambandam
மார் 16, 2025 21:38

வருந்துகிறோம் சக மனுஷிக்கு ஆழ்ந்த இரங்கல்


தமிழன்
மார் 16, 2025 19:47

உயிரோடு இருக்கும் போது எட்டி கூட பார்க்காத உலகம் செத்தால் அனுதாப குரல் பாடுது இதுதான் உலகம் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்


saravan
மார் 16, 2025 19:02

உதவாக்கரை உச்ச கட்ட நடிகர், நடிகைகள் எங்கே போனார்கள்...


HoneyBee
மார் 16, 2025 20:15

கேரவான்ல குடிச்சிட்டு கும்மி அடிச்சிக்கிட்டு இருப்பாங்க


Kumar Kumzi
மார் 16, 2025 18:55

ஆழ்ந்த இரங்கல்கள் உங்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்


N.Purushothaman
மார் 16, 2025 18:40

ஆழ்ந்த இரங்கல்கள் ...ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லவனிடம் பிரார்த்தனைகள் ...


raghavan
மார் 16, 2025 18:38

மகன்கள் உறுதிப்படுத்தினர்? எதை? மகன்கள் இருந்தும் அடுத்தவரிடம் கையேந்தியதையா?? கொடுமையான உலகம்.


சிவம்
மார் 16, 2025 19:16

correct. சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படும் நிலைக்கு யார் காரணம். தறுதலைகள். அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.


R. SUKUMAR CHEZHIAN
மார் 16, 2025 18:19

ஓம் சாந்தி


Oru Indiyan
மார் 16, 2025 17:19

அழகு நிரந்தரம் இல்லை மனிதா. வயது ஆக.. நாம் வெறும் எலும்பு கூடு தான். இந்த தற்காலிக அழகு பற்றி பலர் சொல்லியும் பலர் இந்த அழகிற்காக கொலை கொள்ளை சம்பவங்கள் தினமும் ஆயிரம் உலகமெங்கும்.


Ray
மார் 16, 2025 18:31

இது அழகு பற்றிய பிரச்சினையல்ல உடல்நலம் பற்றியது. அழகு இளமை மட்டுமல்ல உடல்நலம் எல்லாமே அநித்தியம். நிரந்தரமல்ல. மாற்றம் ஒன்றே நிரந்தரம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை