உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகை சமந்தா 2வது திருமணம்

நடிகை சமந்தா 2வது திருமணம்

கோவை: நடிகை சமந்தா - இயக்குநர் ராஜ் நிடிமோரு திருமணம், கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று நடந்தது. அஞ்சான், தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர், சமந்தா, 38. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை, 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமாக, 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். நடிகர் நாக சைதன்யா, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த, நடிகை சோபிதா துலிபலாவை திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே, ஏற்கனவே விவாகரத்து பெற்ற, இயக்குநர் ராஜ் நிடிமோரு, 50, என்பவரை நடிகை சமந்தா காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவின. நேற்று காலை கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள, லிங்க பைரவி தேவி சன்னிதியில், இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். திருமண நிகழ்ச்சியில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என, 30 பேர் வரை பங்கேற்றனர். பிணைப்பு ஏற்படுத்தும் 'பூத சுத்தி விவாஹா' சமந்தா - ராஜ் நிடிமோரு ஜோடிக்கு, பூதசுத்தி விவாஹா முறையில் திருமணம் நடந்தது. 'பூத சுத்தி விவாஹா' திருமண முறை, தம்பதியர் இடையில் ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும், யோக விஞ்ஞானத்துடன் வழங்கப்படுகிறது. இந்த செயல்முறையின் மூலம், பஞ்சபூதங்கள் சுத்திகரிக்கப்பட்டு, இருவருக்குமான திருமண உறவு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. தம்பதியர் தங்கள் எண்ணம், உணர்ச்சி மற்றும் உடல் தாண்டிய சங்கமத்தை உணர்வதற்கான சாத்தியத்தை, பூதசுத்தி விவாஹா வழங்குவதாக, ஈஷா யோகா மையம் சார்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை