உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, 87, பெங்களூரில் நேற்று(ஜூலை 14) காலமானார். அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இன்று(ஜூலை 15) உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்த சரோஜா தேவி 16 வயதில் சினிமாவில் நடிக்க தொடங்கினார். கன்னடத்தில் ஹொன்னப்ப பாகவதரின், மஹாகவி காளிதாஸ் என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பின் தமிழ் திரையுலகுக்கு வந்த இவர், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன் உட்பட பல நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்துள்ள இவர் ஏறக்குறைய 200 படங்கள் நடித்துள்ளார்.'கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி' என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சரோஜா தேவி. பெங்களூரின் மல்லேஸ்வரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த அவர், வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை 8:30 மணியளவில் காலமானார். அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் என, பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடகா முதல்வர் சித்தராமையா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று காலை 11:30 மணி வரை, அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

அரசு மரியாதை

பின்னர் சரோஜா தேவியின் சொந்த ஊரான ராம்நகர், சென்னப்பட்டணாவின், தஷாவரா கிராமத்திற்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் எடுத்து செல்லப்பட்டது. வழிநெடுக ரசிகர்கள் பலர் அவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் தஷாவரா கிராமத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பின்னர் ஒக்கலிகர் சம்பிரதாயப்படி சரோஜாதேவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் கலந்து கொண்டார். மேலும் திரையுலகை சேர்ந்த ராக்லைன் வெங்கடேஷ், ஜெயமாலா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

கண்கள் தானம்

சரோஜா தேவி திரைமறைவில் பல பொது சேவைகள் செய்தவர். தன் கண்களை தானம் செய்துள்ளார். நேற்று மருத்துவ குழுவினர் அவரது கண்களை தானமாக பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Sankar Sankar
ஜூலை 16, 2025 16:30

ஷி ஐஸ் பெஸ்ட் ஆக்டர்


Manikantan S
ஜூலை 16, 2025 10:42

சூப்பர் கண் தானம் செய்தார் supper


Nagarajan A
ஜூலை 15, 2025 23:21

கிரேட் அக்ட்ரெஸ்ஸஸ் RIP


Nagarajan A
ஜூலை 15, 2025 23:20

Great and ever green in tamil cini field I pray almighty to give RIP in its feet


Lakshmi Narayan
ஜூலை 15, 2025 22:11

Om shanthi


MUTHUKUMAR C
ஜூலை 15, 2025 21:19

காலத்தால் மறக்க முடியாத ஒரு சிறந்த நடிகை, கண் தானம் செய்து இன்னொருவருக்கு கண் பார்வை கொடுத்த மனித கடவுள்.


Oviya Vijay
ஜூலை 15, 2025 18:41

நேரில் சென்று அஞ்சலி செலுத்த வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி... திரையில் பலமுறை வியந்து மகிழ்ந்து பார்த்த அந்த அழகிய அமைதியான முகத்தைக் கடைசியாக ஒரு முறை நேரில் காணக் கிடைத்த பாக்கியத்தை எண்ணி... உள்ளம் பூரிப்படைகிறேன்... ஏற்கனவே ஒருமுறை அவர் உயிருடன் இருந்த போது, நடிகை வைஜெயந்தி மாலா அவர்களின் நாட்டிய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அவரைப் பார்த்ததையும் இந்த சமயத்தில் நினைவில் கொள்கிறேன்... காலம் கடந்தும் அனைவராலும் நினைவில் கொள்ளப்படுவார்... தன் நடிப்பால் வசீகரத்தால் பலரையும் பரவசப் படுத்திய அந்த அழகான ஆத்மா சாந்தி கொள்ளட்டும்...


என்றும் இந்தியன்
ஜூலை 15, 2025 16:57

சரோஜாதேவி கண்தானம் to Narayana Nethralayas Dr. Rajkumar Eye Bank — a decision she made five years ago."Only corneas have been taken, both her corneas are in good condition...."


D.Ambujavalli
ஜூலை 15, 2025 16:41

நடிகை என்பதற்கு மேலாக, சமூக உணர்வுடன் கண் தானம் செய்தது பாராட்டத் தக்க து ஓம் saanthim


Tiruchanur
ஜூலை 15, 2025 14:34

கண் தானம் செய்தார். பரந்த மனசு. ஓம் ஷாந்தி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை