உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொறியியல் படித்த போலீசாரை தேடும் கூடுதல் டி.ஜி.பி.,

பொறியியல் படித்த போலீசாரை தேடும் கூடுதல் டி.ஜி.பி.,

சென்னை : அதிநவீன தொழில்நுட்ப ரீதியான தடயவியல் பகுப்பாய்வு கருவிகளை கையாள, பொறியியல் படித்த போலீசாரை அனுப்புமாறு, மாநில சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சஞ்சய்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.போலீஸ் கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சென்னை, அசோக் நகரில், போலீஸ் பயிற்சி கல்லுாரியில், மாநில சைபர் கிரைம் குற்றப்பிரிவு செயல்படுகிறது. அங்குள்ள ஆய்வகத்திற்கு, 'ஆன்லைன்' வாயிலாக செய்யப்படும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பகுப்பாய்வு செய்ய, அதிநவீன தொழில்நுட்ப தடயவியல் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.இவற்றை கையாள, பி.இ., - பி.டெக்., - எம்சிஏ., - எம்.எஸ்சி., - ஐ.டி., மற்றும் கணினி அறிவியல் படித்துள்ள போலீசாரை, அயல் பணி என்ற அடிப்படையில் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுகுறித்து, வரும் 20ம் தேதிக்குள், மாநில சைபர் கிரைம் பிரிவுக்கு தகவல் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை