உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.வி.சண்முகம் வழக்கு தீர்ப்பு தள்ளிவைப்பு

சி.வி.சண்முகம் வழக்கு தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை:அவதுாறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுக்களின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.தமிழகத்தில் கஞ்சா புழக்கம், மதுபான விற்பனை குறித்து, அரசையும், முதல்வரையும் விமர்சித்து, முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா அ.தி.முக.,- - எம்.பி.,யுமான சி.வி.சண்முகம் பேசியிருந்தார். இதையடுத்து, முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவித்ததாக, சண்முகத்துக்கு எதிராக நான்கு அவதுாறு வழக்குகளை, விழுப்புரம் நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்தது.இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில், சண்முகம் மனுக்கள் தாக்கல் செய்தார். இம்மனுக்கள், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தன. சண்முகம் தரப்பில், முன்னாள் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதாடினர். இருதரப்பு வாதங்களுக்கு பின், மனுக்களின் உத்தரவை தேதி குறிப்பிடாமல், நீதிபதி தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ