உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலினின் சாதுர்யத்தை பாராட்டலாம்!

ஸ்டாலினின் சாதுர்யத்தை பாராட்டலாம்!

என். மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு, லோக்சபா தேர்தலில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்திருக்கும் முறையை பார்க்கும் போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் சாதுர்யத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.முதலில், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா இரண்டு தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளார். 'மூன்று தொகுதிகள் கட்டாயம் வேண்டும்' என்று அடம் பிடித்த வி.சி., தலைவரின் கோரிக்கையை ஏற்காமல், இரண்டு தொகுதிகளை மட்டும் ஒதுக்கீடு செய்து, திருமாவளவனை தன் வழிக்கு கொண்டு வந்து விட்டார்.கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இரண்டு தொகுதிகளை தந்த ஸ்டாலின், ம.தி.மு.க., தலைவர் வைகோவுக்கு மட்டும் ஒரே ஒரு தொகுதியை ஒதுக்கி அவரை ஆப் செய்து விட்டார். அவர் கேட்ட ராஜ்யசபா எம்.பி., பதவியையும் தராமல், 'பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்றும் சொல்லி விட்டார்.ஒரு காலத்தில் தி.மு.க.,வின் போர் வாள் என்ற புகழோடு இருந்த வைகோவுக்கு கேட்ட தொகுதிகள் கிடைக்காமல், ஒரே ஒரு தொகுதியை மட்டும் மறுப்பு ஏதும் சொல்லாமல் வாங்கிக் கொள்ளும் துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது.வைகோவின் இன்றைய பரிதாப நிலையை பார்க்கும் போது, ஒரு திரைப்படத்தில் காமெடி நடிகர் விவேக் பேசிய, 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' என்ற டயலாக் தான் நினைவுக்கு வருகிறது.நல்லவேளை ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கீடு செய்த அந்த ஒரே ஒரு தொகுதியிலும் தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று ஸ்டாலின் கட்டாயப்படுத்தாமல் விட்டாரே... அதை நினைத்து, வைகோ ஆறுதல் அடைய வேண்டியது தான்.எல்லாவற்றுக்கும் மேலாக, மூன்று தொகுதிகள் தர வேண்டும் என போராடிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமலுக்கு, ஒரு சீட் கூட ஒதுக்காமல், ராஜ்யசபா சீட் என்ற வாக்குறுதி தந்து வளைத்தது, ஸ்டாலின் ராஜதந்திரத்துக்கு சிறந்த உதாரணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை