உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.முக., சின்னம் கொடியை பயன்படுத்த பன்னீர் செல்வத்துக்கு தடை: உயர்நீதிமன்றம்

அ.தி.முக., சின்னம் கொடியை பயன்படுத்த பன்னீர் செல்வத்துக்கு தடை: உயர்நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அ.தி.முக., சின்னம் கொடி, லெட்டர்பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ்., பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அ.தி.மு.க., கொடி, சின்னம், பெயரை பயன்படுத்தக் கூடாது எனவும், விசாரணை முடியும் வரை இடைக்கால தடை விதிக்கவும் கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், கட்சி பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u80bn3o8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதை எதிர்த்து, பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது. இதையடுத்து, பிரதான மனு, நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களுக்கு பின், இந்த வழக்கில் இன்று(மார்ச் 18) சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அ.தி.மு.க., சின்னம், கொடி, லெட்டர்பேட் ஆகியவற்றை பன்னீர் செல்வம் பயன்படுத்தக்கூடாது என்ற தடையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Raja Vardhini
மார் 19, 2024 08:47

இந்த நபருக்கு வேறு வேலையே இல்லையா? இந்த ஆள் செய்யும் மனுக்களை பெரும் அபராதத்துடன் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்ய வேண்டும்... சொந்த ஊரில் செல்லாகாசு. சொந்த ஊர் மக்களுக்கு கிணற்றின் குடிநீர் மறுத்த கேவலமான அரசியல்வாதி.... திமுக கைக்கூலி....


தாமரை மலர்கிறது
மார் 18, 2024 22:54

எடப்பாடி பயன்படுத்த தடைவித்திருக்க வேண்டும். ஹை கோர்ட் செய்யாவிட்டாலும், தேர்தல் கமிஷன் கண்டிப்பாக செய்யும். எடப்பாடிக்கு மண்டிபோட்டு அழும் குழந்தை சின்னம் தான் கொடுக்கப்படும்.


Anantharaman Srinivasan
மார் 18, 2024 22:26

உன்னாலே நான் கெட்டேன். என்னாலே நீ கெட்டாய். இருவருக்கும் உபயோகமின்றி இரட்டை லை வாடப்போகுது.


Vijay D Ratnam
மார் 18, 2024 21:50

கூடவிருந்து குழி பறிக்கும் துரோகிகளை, கட்சியை கைப்பற்றி குடும்ப சொத்தாக்க நினைத்தவர்களை அதிமுக சரியான நேரத்தில் கட்சியை விட்டு தூக்கி எரியும். ஆர்.எம்.வீரப்பன், அறந்தாங்கி திருநாவுக்கரசர், டிடிவினகரன், சசிகலா இப்போது ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகான எல்லா இடையூறுகளும் அதிமுகவை விட்டு விலகிவிட்டது. அதிமுகவை தங்கள் இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கலாம் என்று நினைத்த பாஜகவுக்கும் சரியான நேரத்தில் வகையாக ஆப்பு அடித்தார் எடப்பாடி பழனிசாமி.


Siddhanatha Boobathi
மார் 18, 2024 19:53

பாரதிய ஜனதா கொடுக்கவிருக்கும் இரண்டு முதல் நான்கு தொகுதிகளுக்கு பதிலாக பழைய அதிமுகவிலேயே அவை தலைவராக நீடித்திருக்கலாம் அங்கு இவரது கோட்டாக கண்டிப்பாக 5 தொகுதிகள் ஆவது கொடுத்திருப்பார்கள். பாரதிய ஜனதாவை நம்பினால் கைவிடப்படுவார்கள்


Raja Vardhini
மார் 18, 2024 18:27

ethanai murai mithipattaalum panneerukku soodu soranai kidaiyaathu...


முருகன்
மார் 18, 2024 16:43

உண்ட வீட்டுக்கு துரோகம் செய்யும் ... தேவையா


Godfather_Senior
மார் 18, 2024 16:24

இருக்கவே இருக்கு தேர்தல் கமிஷன் அது இரண்டு பிரிவுகளையும் இரட்டை இல்லை உபயோகிக்கக்கூடாது என்று தடை விதிக்க வாய்ப்புண்டு


S.L.Narasimman
மார் 18, 2024 16:06

எத்தனை முறை ... திருந்துவதாக இல்லை .


Selvakumar Krishna
மார் 18, 2024 16:03

சிறப்பு, இனிப்பு பிணைப்பு தொகை பறிபோவது உறுதி ஆகிவிட்டது


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை