உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., ஆட்சியில் தி.மு.க., செய்யாத அரசியலா ? கேள்விகளால் விளாசினார் இ.பி.எஸ்.,

அ.தி.மு.க., ஆட்சியில் தி.மு.க., செய்யாத அரசியலா ? கேள்விகளால் விளாசினார் இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: 'மக்களை காக்க வேண்டியது அரசின் கடமை. அ.தி.மு.க., ஆட்சியின் போது தி.மு.க., அரசியல் செய்ய வில்லையா?' என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பினார்.சேலத்தில் இ.பி.எஸ்., நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விமான சாகச நிகழ்ச்சியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இது தான் உயிரிழப்பிற்கு காரணம். மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மக்களை காக்க வேண்டியது அரசின் கடமை.அ.தி.மு.க., ஆட்சியின் போது, எதிர்க்கட்சியான தி.மு.க., அரசியல் செய்ய வில்லையா? விமான சாகச நிகழ்ச்சிக்கு முதல்வர் தான் அழைப்பு விடுத்தார். அவர் தான் பொறுப்பு. அரசின் அழைப்பை நம்பி வந்த மக்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாதது அரசின் தவறு.

அடிப்படை வசதிகள்

தமிழக அரசின் செயலற்றத் தன்மையால் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் கூடும்போது, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரவில்லை. எத்தனை பேர் நிகழ்ச்சியில் பங்கேற்பர் என்பதை அரசும், உளவுத்துறையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சாக்குபோக்கு கூறி தப்பிப்பது சரியல்ல. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Raghavan
அக் 13, 2024 19:23

அமுக்கி வாசிக்காவிட்டால் கொடநாடு வழக்கை நீதிபதிகள் உடனே எடுத்து விஜாரனை தான். மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி என்றல் எடப்பாடிக்கு நான்கு பக்கமும் இடி. ஒருபக்கம் ஆளும் திராவிட மாடல் கொடநாடு வழக்கு, மறுபக்கம் ஓபிஸ், தினகரன், சசிகலா மற்றோருபுரம் பிஜேபி நடுவில் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் வேறு. பாவம் அவர் என்ன செய்வார்.


venugopal s
அக் 07, 2024 17:27

அடடா, எதிர்க்கட்சிகள் எல்லாம் அரசியல் செய்யத்தான் ஆளுங்கட்சியை கேள்வி கேட்கின்றன என்ற உண்மையை இப்படி போட்டு உடைத்து விட்டாரே!


Kadaparai Mani
அக் 07, 2024 17:13

அதிமுக நடத்தும் போராட்டங்களை பல பத்திரிகைகள் வெளி இடுவதில்லை .காட்சி ஊடகங்கள் வெளி இடுவதில்லை .இரண்டுவாரங்களுக்கு முன்னாள் அதிமுக மகளிர் அணி போராட்டத்தை பல ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன .


s sambath kumar
அக் 07, 2024 15:16

அது தனியார் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி. அதற்க்கு அரசு எப்படி பொறுப்பு ஏற்கவேண்டும். இப்போ, அவர் ஜெயிலில் இருக்கிறார். இங்கே நடந்ததுக்கு யாரை ஜெயிலில் வைக்கலாம்? சின்ன மீனையா அல்லது பெரிய மீனையா? பதில் வராது உங்களிடமிருந்து இதற்க்கு.


Narayanan
அக் 07, 2024 14:53

திமுக அரசியல் செய்தது அதிமுக ஆட்சியின் போது . ஆனால் திமுக குரல் கொடுத்தால் பின் வாங்கினீர்கள் ஆயின் அவர்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் உங்களின் சப்தம் எதிகட்சி நிலையில் இல்லையே . இன்று நீங்கள் பேரமைதி காத்து நிற்கிறீர்கள் . சொத்து வரி ஏற்றம் , மின்சார கட்டண ஏற்றம் பேருந்து கட்டண ஏற்றம். அத்தியாவசிய பொருள்களின் விலை ஏற்றம் . இப்படி பல . உங்களால் எதையாவது தடுக்க முடிந்ததா ? உங்களின் நோக்கம் தலைமை பதவியை பிடிப்பது ஒன்றே குறிக்கோளாக கொண்டு வாழ்கிறீர்கள் .


ஆரூர் ரங்
அக் 07, 2024 14:14

பங்காளிய ஜாக்கிரதையா விமர்சனம் பண்ணியிருக்கேன். கோச்சுக்கிட்டு கொடநாடு கேசை சீரியசா நடத்த வேண்டாமுன்னு கேட்டுக்கறேன்.


வைகுண்டேஸ்வரன்
அக் 07, 2024 13:45

நிகழ்ச்சியை காலை 11 to மதியம் 2 மணி வரை என்பதற்கு பதிலாக மாலை 4 மணிக்கு வைத்திருக்கலாம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 07, 2024 14:04

ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன் .... அந்நேரத்தில் வைத்தால் மட்டும் சிறப்பு அனுமதி / விடுப்பு எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் வரமாட்டார்களா ???? நீங்கள் இப்படி எழுதுவதற்குப் பதிலாக வந்தவர்கள் நீரேற்ற சேர்ப்பான்களை - எலெக்ட்ரால் பவுடர் போன்றவை - எடுத்துக்கொண்டு வந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கலாம் ....


வைகுண்டேஸ்வரன்
அக் 07, 2024 13:43

உ. பி. யில் போலே பாபா நிகழ்ச்சியில் 120 பேர் இறந்த போது யாராவது இவ்வளவு கூப்பாடு போட்டீர்களா? அந்த முதல்வர் தான் பொறுப்பு என்றீர்களா?? அப்போ இணை அமைச்சர் முருகன் மீன் புடிக்க போயிருந்தாரோ??


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 07, 2024 13:59

உ பி பீமாரு மாநிலங்களில் ஒன்று ..... நமது மாநிலம் முன்னேறிய மாநிலம் ..... இவையெல்லாம் திமுகவினர் சொன்னதுதான் .... மிக முக்கியமான ஒன்று .... குஜராத் கலவரம் நடந்தபொழுது மத்திய பாஜக கூட்டணி அரசுக்கு உங்கள் கலைஞர் முட்டுக் கொடுக்கவில்லையா ???? ஏன் அப்போதே ஆதரவை விலக்கிக் கொள்ளாமல் சுப்பிரமணியம் சுவாமி டீ பார்ட்டி வைத்தபொழுது அங்கே காங்கிரசுடன் திமுக தோளோடு தோள் சேர்ந்தது ????


Ganesun Iyer
அக் 07, 2024 13:41

பலாபழத்தில் பல்லுப்படாத அறிக்கை....


கல்யாணராமன்
அக் 07, 2024 13:39

"ஆக, இந்த சம்பவித்திற்கு பொறுபெற்று முதலமைச்சராக இருக்க கூடிய எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும்" இப்படித்தான் ஒவ்வொரு முறையும் ஸ்டாலின் அப்போது சொல்லிக்கொண்டு இருந்தார். ஜெயலலிதா, ஓ பி எஸ் மற்றும் எடப்பாடி முதல்வர்கள் பொறுப்பில் இருந்த போது அவர்களை விளிக்கும் போது முதல்வர் என்று சொல்லாமல் முதல்வராக இருக்க கூடிய என்ற வார்த்தையை பயன்படுத்துவார் இப்போது மத்திய அரசை ஒன்றிய அரசு என்று புதிய நாமகரணம் சூட்டி அழைப்பது போல். முதல்வர் பதவி என்னமோ திமுகவிற்கு மட்டும்தான் தாரை வார்க்க பட்டது போல் ஒரு நினைப்பு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை