உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சேலத்தில் அ.தி.மு.க., பிரமுகர் கொலை: தி.மு.க., பிரமுகர் கைது

சேலத்தில் அ.தி.மு.க., பிரமுகர் கொலை: தி.மு.க., பிரமுகர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: சேலத்தில் அ.தி.மு.க., பிரமுகர் சண்முகம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, தி.மு.க.,வை சேர்ந்த சதீஷ் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அ.தி.மு.க., பிரமுகர் சண்முகம். இவர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோயில் தெரு பகுதியில், மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சேலத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=srm8p81f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர் 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத் தலைவராக பதவி வகித்துள்ளார். கொலை தொடர்பாக, 5 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று (ஜூலை 04) தி.மு.க.,வை சேர்ந்த சதீஷ் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இ.பி.எஸ்., கண்டனம்

கொலை சம்பவம் தொடர்பாக, எக்ஸ் சமூகவலைதளத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதியில், அ.தி.மு.க., பிரமுகர் சண்முகம் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது.தினசரி கொலை, கொள்ளை நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது என்று பலமுறை நான் கூறியபோதும், இந்த திமுக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.இச்சம்பவத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதுடன், இக்கொலைக் குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தமிழ்வேள்
ஜூலை 05, 2024 20:22

சிலோன் தமிழின் போல ராணுவத்தின் கரங்களில் செம்மையாக வாங்கி கட்டினால் ஒழிய தமிழக டுமீலன் திருந்த மாட்டான்...நாலு அல்ல நாற்பது தலைமுறைக்கு மறக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்ட வேண்டும்...


Nagamanickam Parasuraman
ஜூலை 04, 2024 19:23

என்ன அக்கிரமங்கள் நடந்தாலும் மானங்கெட்ட மக்கல் திமுகாவுக்குத்தான் ஓட்டுபோடுவார்கள் ,திருந்தவேய மாமாட்டர்கள்


Ramesh
ஜூலை 04, 2024 15:16

எது எப்படி இருந்தாலும் நாங்கள் திமுகவிற்கு தான் ஓட்டு போடுவோம். அவர்கள் தான் கட்டிங், பிரியாணி, 200 ரூபாய் என்கிற பல திட்டங்களால் எங்களை வாழ வைக்கின்றனர்.


Palanisamy Sekar
ஜூலை 04, 2024 14:43

ஒரு நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை இன்றைய ஆளும் தரப்பில் இருப்பதால். சட்டம் ஒழுங்கு ஊரே சிரிக்குது. எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை பாலியல் தொல்லை போதை என்று நாட்டையே குட்டிச்சுவர் ஆக்கிவிட்டது திமுக. திமுகவை அகற்றாமல் போனால் நாடு நாசமாகிவிடும். இவ்வளவுக்கும் காரணமே எடப்பாடிதான். திமுகவுக்கு மறைமுகமாக உதவிக் கொண்டுள்ளார். தன்மீதுள்ள கொடநாடு கொலைவழக்கு விசாரணை தள்ளிப்போட திமுகவுடன் செய்துகொண்ட கள்ள கூட்டணிதான் காரணம். இப்போது கண்டனம் தெரிவிப்பது என்பது கண்துடைப்புதான்


Krishnamurthy Venkatesan
ஜூலை 04, 2024 14:15

எதிர்கட்சிகள் ஓன்று சேர்ந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஆதாரத்துடன் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் மனு அனுப்பலாம்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 04, 2024 14:00

ஆட்சியில இருக்குற கட்சி ............


மேலும் செய்திகள்







புதிய வீடியோ