உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக சட்டசபையில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்

தமிழக சட்டசபையில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்

சென்னை: தமிழக சட்டசபையில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழக சட்டசபை கூட்டத்தில் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளசாராய பலி தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏ.,க்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக கோஷங்கள் எழுப்பினர். அதனைத்தொடர்ந்து வெளிநடப்பு செய்தனர். அவை நடவடிக்கைக்கு வேண்டுமென்றே இடையூறு செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யுமாறு அமைச்சர் நேரு தீர்மானம் கொண்டு வந்தார். இதனை முதல்வர் ஸ்டாலின் வழிமொழிந்தபோது கூட்டத்தொடர் முழுவதும் என்பதில் இருந்து சற்று மாறுபட்டு ஒரு நாள் மட்டும் சஸ்பெண்ட் செய்யுமாறு வலியுறுத்தினார். இதனையடுத்து சபாநாயகர் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசுகையில்: கள்ளக்குறிச்சியில் நடந்த விஷ சாராய பலி தொடர்பாக ஒரு நபர் கமிஷன் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பலர் கைது செய்யப்பட்டுள்னளர். இன்னும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பலியானவர்களின் குழந்தைகளின் கல்விச்செலவு, எதிர்கால பிரச்னைகளை அரசே ஏற்று கொண்டுள்ளது. கலெக்டர், எஸ்.பி., நீக்கப்பட்டுள்ளனர். மது பிரிவு ஏடிஜிபி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். கள்ளச்சாராய பலி தொடர்பாக தீவிரமாக விசாரிக்கபட்டு வரும்போது எதிர்க்கட்சி தலைவர் சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்துகிறார். ஆர்பாட்டம் நடத்துகின்றனர். அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை. முன்னாள் முதல்வர் மீது சில குற்றச்சாட்டுகள் அடிப்படையில் சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என திமுக வலியுறுத்தியது. இதனை கோர்ட்டும் சொன்னபோது அவர் ஏற்கவில்லை. அந்த விசாரணைக்கு தடை உத்தரவு வாங்கிய வீராதிவீரர் தான் இவர். அப்படிப்பட்டவர் இன்று சிபிஐ விசாரணை வேண்டும் என பேசுகிறார். ஆகையால் சிபிஐ விசாரணை குறித்து சபாநாயகரே முடிவு செய்யலாம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

அம்பி ஐயர்
ஜூன் 25, 2024 21:06

இதையே திமுகவினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தால் ஒரே அமளி ஆர்ப்பாட்டம்... சாலை மறியல் என எல்லாம் செய்து RSB ஊடகங்களின் துணையோடு பரபரப்பு செய்திருப்பார்கள்.... இது ஏதோ கண்துடைப்புக்காக வெளி நடப்புச் செய்தது மாதிரி இருக்கு.... மிக்சர் பழனிச்சாமி.....


M Ramachandran
ஜூன் 25, 2024 13:17

அட்டேய் என்னப்பா பங்களிக்குள் புகைச்சல். பழனியும் ஸ்டாலினும் தனியறையில் பேசி தீர்த்து கொள்வார்கள்.


Kasimani Baskaran
ஜூன் 25, 2024 11:28

இனி தமிழக எம்பிக்களையும் இதே போல நடத்தலாம்


ராமகிருஷ்ணன்
ஜூன் 25, 2024 11:16

நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன். நீ அழுகிற மாதிரி அழு, என்ன சரிதானே. எல்லாம் நாடகம். இரண்டு கும்பலும் ஒழிந்தால் தான் நாடு உருப்படும்


கனோஜ் ஆங்ரே
ஜூன் 25, 2024 12:29

///இரண்டு கும்பலும் ஒழிந்தால் தான் நாடு உருப்படும்/// அது நடக்காது ராசா... அதுக்கு வாய்ப்பே இல்ல ராசா...? முரட்டுமீசை வச்சிட்டு ஆம்பிளையா வந்தாலும், இது நடக்காது ராசா...?


Velan
ஜூன் 25, 2024 10:59

சாபநாயகர் முடிவு செய்வார எண்ண முடிவு செய்வார். என்பது. ஊர் அறிந்த விசயம்


சசிக்குமார் திருப்பூர்
ஜூன் 25, 2024 10:55

நீங்கள் கூடத்தான் ஒவ்வொரு முறையும் கவர்னர் இடம் புகார் அளித்தார். இப்போது கவர்னர் வேண்டாம் என்று கூறும் அதி புத்திசாலி உள்ள விடியலே


Rathinasabapathi Ramasamy
ஜூன் 25, 2024 11:35

அட அறிவு கொழுந்து ஒரு கவர்னர் பதவி வேண்டாம் என்று முதலில் இருந்து சொல்லி கொண்டுதான் உள்ளது. அந்த பதவி இருக்கும் வரை அதற்க்கு உண்டான மரியாதை கொடுத்துதான் ஆகவேண்டும் அறிவுகொழுந்து.


Karuthu kirukkan
ஜூன் 25, 2024 10:52

அப்ப, அப்பாவே சொந்தமா சிந்திச்சு சொல்லிருவாரா சிபிஐ வேண்டாம்மென்று ..ஐயோ ,ஐயோ


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 25, 2024 10:38

திமுக கூடத்தான் தேசவிரோத காங்கிரசுடன், லாலு, முலாயம் கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு ஜனநாயகத்துக்கு எதிராக மக்களவையை முடக்குகிறது.. ஒவ்வொரு முறையும் இவர்களை மக்களவைச் சபாநாயகர் சஸ்பெண்டா செய்கிறார் ????


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 25, 2024 10:35

சபையை நடத்தவிடாமல் நடந்துகொண்டால் சஸ்பெண்ட் செய்யலாம்.. கண்டித்து முழக்கமிட்டால் சஸ்பெண்ட் செய்வது அதிகார மமதையின் உச்சம் ......


Narayanan
ஜூன் 25, 2024 10:35

சபாநாயகர் உங்களின் வேலைக்காரன். அவர் நீங்கள் சொன்னதைத்தான் செய்வார். என்னமோ அவர் சுதந்திரமாக, நடுநிலையாக வேலை செய்வதுபோல் சொல்கிறீர்கள். உங்களால் அதிமுகவினரை வெளியேற்றிவிடலாம். சுதந்திரமாக நீங்கள் இருக்கலாம். அதிமுகவினர் உங்களின் ராஜினாமா பற்றி மட்டும் பேசி அமளி செய்யவேண்டும். இதில் பேசிக்கொண்டு இருக்க எந்த விஷயமும் இல்லை. பொறுப்பேற்று ராஜினாமா செய்யவேண்டும் . சட்டமன்றம் கலைக்கப்படவேண்டும் .தமிழ்நாட்டு தேர்தல் ஆணையர் உடனடியாக மாற்றப்படவேண்டும் . வருவாய்த்துறை தேர்தல் ஆணையர் வீட்டில் சோதனை மேற்கொள்ளவேண்டும் .


மேலும் செய்திகள்