உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடுநிலை ஓட்டுகளை அ.தி.மு.க., இழக்கும்!

நடுநிலை ஓட்டுகளை அ.தி.மு.க., இழக்கும்!

கே.என்.ஸ்ரீதரன், பெங்களூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது' என்று, அ.தி.மு.க., பொதுக் குழுவில் மீண்டும் திட்டவட்டமாக பழனிசாமி அறிவித்து விட்டார். நடக்க இருப்பது லோக்சபா தேர்தல். மீண்டும் மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டுமா, கூடாதா என்பதை முன்னிறுத்தி தான் கட்சிகள் போட்டியிடுகின்றன.மோடியை எதிர்க்கும், 'இண்டியா' கூட்டணியில் தி.மு.க., அங்கம் வகிக்கிறது. ஆனால், அ.தி.மு.க.,வின் நிலையை இன்னும் பழனிசாமி விளக்கவில்லை.'பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருந்ததால் தான், சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்கவில்லை' என, அ.தி.மு.க., இரண்டாம் கட்ட தலைவர்கள் ஏற்கனவே பேசியதுதான், கூட்டணி முறிவுக்கு காரணம் என்றும் தெரிகிறது.மத்தியில் இருக்கும் பா.ஜ., அரசு, சிறுபான்மை மக்களுக்கு எதிராக அப்படி என்ன செய்து விட்டது என்பதை, பழனிசாமி விளக்க வேண்டும். கணிசமான அளவில், முஸ்லிம்கள் இருக்கும் உத்தர பிரதேசத்தில், இரண்டாவது முறையாக பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.சிறுபான்மையினருக்கு பெரிய ஆபத்து வந்து விட்டது போல, எல்லா கூட்டத்திலும், 'உங்களுக்கு அரணாக அ.தி.மு.க., இருக்கும்' என்று பழனிசாமி பேசுவது வேடிக்கையாக உள்ளது. கட்சிக்காரர்கள் மட்டும் ஓட்டளித்து எந்த வேட்பாளர்களும் வெற்றி பெறுவதில்லை; பொது மக்களும் ஓட்டளிக்க வேண்டும்.அப்படித்தான் தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை பெற்று, எம்.ஜி.ஆர்., ஆட்சியில் இருந்தார். அவர் இருந்த வரை, 13 ஆண்டுகள் தி.மு.க.,வால் ஆட்சிக்கு வர முடியவில்லை. தி.மு.க., போல, அ.தி.மு.க., இனவாதம், பிரிவினை வாதம் மற்றும் ஹிந்து மத எதிர்ப்பு பிரசாரம் செய்யாவிட்டாலும், அப்படி பிரசாரம் செய்யும் எந்த அமைப்பையும் கண்டித்து அறிக்கை விட்டதில்லை.பா.ஜ.,வின் தமிழக தலைவராக அண்ணாமலை வந்த பின், படித்தவர்கள், இளைஞர்கள், ஊழலற்ற ஆட்சியை விரும்பும் மக்கள், அவரின் பக்கம் வர துவங்கி விட்டனர். தமிழகத்தில், சத்தமின்றி ஒரு மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, கிடைக்க வாய்ப்பில்லாத சிறுபான்மையினர் ஓட்டுகளுக்கு ஆசைப்பட்டு, கட்சி சார்பற்ற நடுநிலையான மக்களின் ஓட்டுகளை இழக்கப் போகிறது, அ.தி.மு.க., என்பது தான் உண்மை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Vijay D Ratnam
ஜன 03, 2024 17:53

அதிமுக தன் எதிர்கால நலன் கருதி, தனித்து நின்று தன் வாக்கு சதவிகிதத்தை உயர்த்தி கொள்ளவேண்டும். ஜெயித்தாலும் தோற்றாலும் ஒன்றும் ஆவப்போவதில்லை. தமிழகத்தின் மிகப்பெரிய கட்சி அதிமுகதான் என்பதை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும். குறிப்பாக கூட இருந்தே குழிபறிக்கும் பாமகவை அதிமுக பக்கம் அண்டவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கவேண்டும். திமுக கட்சி உடன்பிறப்புகளின் குடும்ப வாக்குகள், விசிக, மதிமுக, கான்.க்ராஸ், கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் குடும்ப வாக்குகள் திமுக கூட்டணிக்கு த்ரூ பாக்கெட் ஆகிவிடும். திமுகவை பொறுத்தவரை எங்களுக்கு ஒட்டு போடுங்கள் என்று மைனாரிட்டி மக்களிடம் போய் ஒட்டு கேட்கவேண்டிய அவசியமே இல்லை. அதுக்கெல்லாம் ஏஜென்ட் இருக்கிறார்கள். தேர்தலுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை தொழுகையில் பூசைகளில் பள்ளிவாசல்களில் பாதிரியார்களால் உத்தரவிடப்பட்டு இஸ்லாமிய கிருஸ்தவ மற்றும் க்ரிப்டோ-க்ருஸ்தவ வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் திமுக கூட்டணிக்கு வந்து விடும். திமுகவின் நிரந்தர அல்லக்கை என்று அன்போடு அழைக்கப்படும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் குடும்ப வாக்குகள் பல்க்காக திமுக கூட்டணிக்கு சேதாரம் இல்லாமல் வந்து விடும். என்னதான் லஞ்சம், ஊழல், வாரிசு அரசியல், தத்தி தலைமை, கமிஷன், க்ரேப்க்ஷன் என்று நாறினாலும் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் திமுகவுக்கு ஒட்டு போடும் உயிரினங்கள் இவர்கள். இதுக்கு மேல கட்டுமர கம்பெனியில் ஃபைனான்ஸ் பெற்று ஹிந்து வாக்குகளை மட்டும் டேமேஜ் செய்ய மைனாரிட்டி வாக்குகளை தொட்டுக்கூட பார்க்க முடியாத சைமன் செபஸ்டியன் கம்பெனி இருக்கிறது. இதுக்கு மேல திமுகவின் வெற்றி மந்திரமான ஓட்டுக்கு ரெண்டாயிரம் உறுதி. சில இடங்களில் ஐந்தாயிரம் ரூபாய் முதல் பத்தாயிரம் வரை கன்பார்ம். பொறவு குடம், குக்கர், குந்தாணி, மூக்குத்தி சப்ளை செவ்வனே நடக்கும். அதுக்குமேல குறைந்தது நான்கைந்து முறையாவது இந்த பிரியாணி, குவாட்டர், கறிசோறு, வாட்டர் பாட்டில் விருந்து உண்டு. டஃப் காம்பெடிஷன். இதுக்கு மேல அதிமுக வெற்றி பெற்றாக வேண்டும். அதிமுக செய்த ஒரே நல்ல காரியம் என்றால் அது இந்த ஏழரை வருஷம் ஏழரையா காலை சுற்றிய பாஜக சகவாசத்தை சுத்தமாக அத்து விட்டதுதான். பொதுவாக எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டை இலை, அண்ணா உருவம் பொரித்த அதிமுக கொடி இவை நான்கும் தமிழக வாக்காளர்கள் மனதுக்கு நெருக்கமான எவர்க்ரீன் சக்ஸஸ் பிராண்ட். அதிமுக ஐந்து இடங்களை பெற்றால் கூட தொண்டர்களுக்கு ஆனந்தம். பத்து இடங்களை பெற்றால் பேரானந்தம். திமுக இந்த லட்சணத்தில் ஆட்சியை தொடர்ந்தால் இருபது இடங்கள் கூட சாத்தியம். போட்டி வழக்கம்போல் அதிமுகவுக்கும் திமுகாவுக்கும்தான். பாஜக வளர்ந்து இருக்கிறது. பாஜக கூட்டணி பாதிக்கு பாதி இடங்களிலும் டெபாசிட் உறுதியாக கிடைக்கும். வழக்கம் போல ஈழம், தொப்புள்கொடி, அப்பத்தா, அண்ணி சமைச்சு போட்ட ஆமைக்கறி என்று பினாத்தி சைமன் நாற்பதிலும் டெபாசிட் இழப்பார். இருந்தாலும் சேதாரத்துக்கு செய்கூலி வருவதால் ஹாப்பி அண்ணாச்சி.


Velan Iyengaar
ஜன 03, 2024 20:37

இவ்வ்ளோ எழுதிவிட்டு சைமன விட அதிகம் பிஜேபி வாங்கும் என்று எழுதி இத்தனை காரியத்தையும் ஒரே காமடியாகிவிட்டீர் இதுக்கு மேலே வேற என்னத்த சொல்ல ஆனாலும் பாமக மேலே ஏன் இவ்ளோ காண்டு?? அப்புறம் ஐந்து இடங்களை அதிமுக வெல்லுமாம் அது வேற ரக காமெடி தேர்தலுக்கு முன்னாடி தவழ்ந்தபடியார் மேலே மிச்சர் இன்னும் என்ன என்ன அக்குறும்புகளை சொல்லி காலி செய்யப்போகிறார் என்று இப்போவே வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் ஒரு சாரார்


M Ramachandran
ஜன 03, 2024 16:50

கட்சி சிறுத்து விட்டது. பழனிச்சாம்மிக்கு மக்களை கவரும் திறமை பேச்சு வன்மை கிடையாது. திமுக எதிர்ப்பு அலை அப்போது கிடைய்த்தது.


Kadaparai Mani
ஜன 03, 2024 13:58

அதிமுக தமிழகத்தின் மிகப்பெரிய கட்சி .ஒரு கட்சிக்கு எதிராக சில பத்திரிகைகள் பல காட்சி ஊடகங்கள் செயல் படுவதை வைத்தே அந்த கட்சி செல்வாக்கு பெற்றது என்று அரசியல் நோக்கர்களுக்கு புரியும் .செல்வாக்கு இல்லாத கட்சி பற்றி யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் ..எடப்பாடி இவளவு சாதூர்யமாக செயல்படுவார் என்று சில அபிஸ்டுகள் எதிர்பார்க்கவில்லை .


karupanasamy
ஜன 03, 2024 16:48

பாராளுமன்ற தேர்தல் முடிவுகளால் மட்டுமே உண்மைநிலையை உணரமுடியும் அதுவரை உங்களைப்போல் அவரவர்களின் எதிர்பார்பாய் ஆதங்கமாக வெளிப்படுத்தலாம்.


Kalyanaraman
ஜன 03, 2024 13:43

மெயில் ஐடியை பிரசூரித்தால் உங்கள் இடத்தில் நாங்களும் எங்கள் கருத்துக்களை அனுப்புவோமே


கருத்து சுந்தரம்
ஜன 03, 2024 12:38

சிறுபான்மையினர் என்று கருதப்படுபவர்களை இந்த இரு கழகங்களிலிடமிருந்து தான் காப்பாற்ற வேண்டும்.


Anbuselvan
ஜன 03, 2024 12:29

திமுக+ வோட்டு சதவீதம் சுமார் 30 சதவிகிதம் ஆகும். இப்போதைய அதிமுகவில் வோட்டு சதவிகிதம் சுமார் 20 சதவிகிதம் ஆகும். மற்ற கட்சிகள் வோட்டு சதவிகிதம் 20 சதவிகிதம் (பாஜக நாம் தமிழர் கட்சி உள்பட). மீதி 30 சதவிகிதம் நடு நிலை வோட்டு. இதில் சுமார் 70 சதவிகிதம் BJP கூட்டணிக்கு போக மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளது. அதாவரது 21 சதவிகிதம். மீதி முப்பது சதவிகித நடுநிலை ஓட்டுகள் அதாவது ஒன்பது சதவிகித ஓட்டுகள் திமுக கூட்டணிக்கு போக வைய்ப்பு அதிகம். மொத்தத்தில் BJP கூட்டணி அதிமுக கூட்டணியை விட அதிக ஓட்டுக்கள் மற்றும் சீட்டுகள் பெற வாய்ப்பு உள்ளது.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 03, 2024 12:58

நீங்க சொல்றதுதான் சரி. அடுத்த தேர்தலில் வோட்டுக்கு 5000 திமுகவால மட்டும்தான் கொடுக்க முடியும்.


திகழ்ஓவியன்
ஜன 03, 2024 13:55

760000000000000000000000000000000000000000000000 கோடி ஒரு KM ரோடு போட 290 கோடி அப்போ அவன் எவ்வளவு கொடுக்கணும்


Velan Iyengaar
ஜன 03, 2024 20:39

அப்யசெல்வன் கணக்குல ரெண்டு பிஎச்டி செய்திருக்கிறார் என்பது இந்த கணக்கில் ஒருந்து தெளிவாக தெரிந்துகொள்ள்ளலாம்


செந்தமிழ் கார்த்திக்
ஜன 03, 2024 12:19

இப்படி கட்டுரை என்ற பெயரில் கதறி அழுதவர் யார் என்றால் ஒரு BJ-party ஆதரவாளர். முதல்ல நீங்க டெபாசிட் வாங்குங்க, அப்பறம் வெற்றி பற்றி எல்லாம் பேசலாம்.


Velan Iyengaar
ஜன 03, 2024 20:40

BJ -பார்ட்டி ரொம்போ நல்ல இருக்கு இனி இதை உபயோகப்படுத்திக்கலாமா அன்பரே?? அந்த கட்சியே இதே வேலையா தான் எல்லோரும் திரியிறாங்க .....


MADHAVAN
ஜன 03, 2024 12:14

மத்தில தொங்குபாராளுமன்றம் தான் வரும், அப்போ தமிழகத்தில் திமுக நாற்பது எம்பி வச்சுட்டு கெத்துக்கட்டும், அப்போ தெரியும் உங்க பிஜேபி ன் ஊழல் எதிர்ப்பு,


MADHAVAN
ஜன 03, 2024 12:11

ஸ்ரீதரன், உனக்கு ஏன் எரியுது, அதிமுகவு கு தெரியும்,அது அவுங்கப்பாடு, நீ உங்க பிஜேபி கட்சி நோட்டாவை தாண்டுமான்னு பாரு,


Chandramoulli
ஜன 03, 2024 11:18

DMK allaince is very strong. DMK alliance is abnormal money power and govt staff supports, Great advantage main stream TV channel industry is supporting DMK alliance. ADMK is getting 3 seats and BJP wont get any seat. BJP will increase their voting percentage substantially. DMK gets 36 MP seats. After the 2024 election infighting will starts within BJP functionaries . Two groups will emerge after the 2024 elections in BJP. Big headache for Annamalai after the elections.


Venkat, UAE
ஜன 03, 2024 12:41

நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கனவு காணலாம். யாரும் தடுக்க முடியாது.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ