சென்னையில் வடகிழக்கு பருவமழை தீவிரம்; அடையாறு முகத்துவாரத்தில் ஸ்டாலின் மீண்டும் ஆய்வு
சென்னை: சென்னை அடையாறு முகத்துவாரத்தில் இன்று மீண்டும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஆற்றின் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் அகலப்படுத்தும் பணிகளை அவர் விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.வடகிழக்கு பருவமழை தீவிரமாகி உள்ள நிலையில், சென்னை அடையாறு முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்குள்ள மண் படுகைகள் தூர் வாரப்பட்டு அகலப்படுத்தப்படுகின்றன.இந்த பணிகளுக்காக கூடுதலாக, 12 பொக்லைன் இயந்திரங்களும், 4 ஜேசிபி இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இந் நிலையில், ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்.26) மீண்டும் நேரில் சென்று பார்வையிட்டார். சிறிது தூரம் நடந்து சென்று ஆய்வு நடத்திய அவர், முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.