உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அ.தி.மு.க., கவுன்சிலர் நீக்கம்

 அ.தி.மு.க., கவுன்சிலர் நீக்கம்

கிருஷ்ணகிரி: தி.மு.க., கவுன்சிலர்கள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்த அ.தி.மு.க., கவுன்சிலர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். கிருஷ்ணகிரி நகராட்சி தி.மு.க., தலைவருக்கு எதிராக நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில், தி.மு.க., கவுன்சிலர்களுக்கு ஆதரவாக 9வது வார்டு, அ.தி.மு.க., கவுன்சிலர் நாகஜோதி ஓட்டளித்தார். இதனால், நகராட்சி தலைவர் பரிதா நவாப் பதவி பறிபோனது. இந்த ஓட்டெடுப்பில் பங்கேற்க கூடாது என, அ.தி.மு.க., மாவட்ட தலைமையின் உத்தரவை மீறி செயல்பட்ட நாகஜோதியை அக்கட்சியிலிருந்து நீக்கி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ