உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  செங்கோட்டையனை சந்தித்த அ.தி.மு.க., மாஜி நீக்கம்

 செங்கோட்டையனை சந்தித்த அ.தி.மு.க., மாஜி நீக்கம்

சென்னை: சேலம் மாவட்டம் ஓமலுார், பல்பாக்கியைச் சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணனை, சேலத்தில் உள்ள அவரது வீட்டில், த.வெ.க., தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், 10 நாட்களுக்கு முன் சந்தித்தார். இதையடுத்து, கிருஷ்ணன் த.வெ.க.,வில் இணைந்ததாக தகவல் பரவியது. இந்நிலையில், அவரை கட்சியிலிருந்து பழனிசாமி நேற்று நீக்கியுள்ளார். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: அ.தி.மு.க., கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாகவும், கட்சி கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயரும் களங்கமும் ஏற்படும் வகையில் செயல்பட்ட சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் பல்பாக்கி கிருஷ்ணன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7oom25z4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Krishna
டிச 29, 2025 06:41

ADMK is Sinking Ship & Cannot Win Even If All its Rebelled-Expelled Leaders ReUnite. EPS who played Fiddle to DMK till Recently for protecting his Illegal Assets will be Out of Relevance. Its because of Opposition to DMK, they may get More Votes


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை