உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.400 கோடி ஊழல்; அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அ.தி.மு.க., புகார்

ரூ.400 கோடி ஊழல்; அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அ.தி.மு.க., புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் ரூ.400 கோடி ஊழல் செய்ததாக அ.தி.மு.க., சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, ஜாமினில் வெளியே வந்தார். வந்த உடனே, மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் மீண்டும் அவர் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zz6nx7n6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ரூ.400 கோடி ஊழல் செய்ததாக அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில இணை செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.2021 முதல் 2023ம் ஆண்டு வரையில் 45,800 மின்மாற்றிகள் வாங்குவதற்கு, ரூ.1,182 கோடி மதிப்பில் 10 டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில், டெண்டர் விதிகளை முறையாக பின்பற்றாததால், அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அப்பாவி
நவ 15, 2024 22:39

ஒரு வருஷமா ஜெயில்ல இருந்தாரே அப்போவெல்லாம் என்ன செஞ்சுக்கிட்டிருந்தீங்க? ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாம போய் வெளியே வந்து அமைச்சராயிட்டாரு.


Shanmugam Annamalai
நவ 15, 2024 16:39

நம்ம ரிஷிவந்தியம் ச.ம.உ திருவாளர் கார்த்திகேயன் 2000 கோடிக்கு மேல் அவரது தொகுதியில் உள்ள கிராமங்களில் உபிக்களை வைத்து அக்கிரமம் செய்து சொத்து சேர்த்துள்ளார் செந்தில் பாலாஜி 400 கோடி தானே ஊழல் செய்துள்ளார்


Rengaraj
நவ 15, 2024 16:21

இந்த மின்மாற்றி டெண்டர் ஊழல் பற்றி சமூகவலைத்தளங்களில் எப்பவோ வந்தாச்சு. அறப்போர் இயக்கம் எப்போவோ சொல்லியாச்சு . இப்பவரைக்கும் ஒன்னும் நடக்கலை. அப்போல்லாம் சும்மா இருந்துட்டு இப்போ வந்து புகார் குடுக்கறாங்களாம் . பங்காளிகள் ஒத்தருக்கொருதர் சொல்லிவச்சு வேலைபார்க்கறாங்க. மக்களும் இவங்களை நம்பி திரும்ப ஆட்சியை இவங்களுக்கு கொடுக்கணுமாம். அம்மா மட்டும் எதிர்கட்சியா இருந்தாங்கன்னா பங்காளிகள் இப்படியா இருந்திருப்பாங்க ?


Dhurvesh
நவ 15, 2024 12:14

டெண்டர் விதிகளை முறையாக பின்பற்றாததால், அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே தானே மோடி 76500000000000000000000000000000000000 கோடி இழப்பு ன்று CAG சொன்னது


ராஜவேல்,வத்தலக்குண்டு
நவ 15, 2024 14:08

செ.பாலாஜி 400 கோடி ஊழல் பண்ணியதாக திமுகவின் பங்காளி கட்சியான அதிமுக தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் மனுவை கொடுத்துள்ளார்களாம். திமுகவின் இந்த ஊழலை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கை தொடுக்க மாட்டார்களாம் ஆனால் பங்காளி கட்சியோட போலீஸ்கிட்டயே பங்காளி கட்சியை பற்றி புகார் கொடுப்பார்களாம் லஞ்ச ஒழிப்புதுறையும் உடனே விசாரனை பண்ணி செந்தில் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்களாம் இது எப்படி இருக்கு செம காமெடியா இருக்குல்ல!


Barakat Ali
நவ 15, 2024 11:24

இப்படி துக்ளக்கார் புகார் சொல்லித்தான் தனது கஸ்டடிக்கு செபாவைக் கொண்டு வந்தார் .... அதே டெக்னீக்கை நீங்களும் காப்பியடிக்கலாமா ????


Saran
நவ 15, 2024 11:17

Most corrupted people : DMK and ADMK But still the people vote for them, it is really a joke…. uncivilized population


MADHAVAN
நவ 15, 2024 11:06

கூவத்தூரில் கும்மாளம் போட்ட கோமாளிகளுக்கு என்ன யோக்கியதை இருக்கு


MADHAVAN
நவ 15, 2024 11:06

ஜெயலலிதா ஒரு ஊழல் குற்றவாளி நல்ல வேலை இறந்து போயிடுச்சு, இல்லாட்டி ஜெயிலில் இருந்து ஊதுபத்தி ஒருத்தி இருக்கும் , சசிக்கலா ஒரு சிறை கைதி, அதிமுக ல இருக்குற எல்லோரும் பலகோடி சுருட்டுன ஆளுங்கதான், கூவத்தூரில் கும்மாளம் போட்ட கோமாளிகளுக்கு என்ன யோக்கியதை இருக்கு ?


Ramki
நவ 15, 2024 10:33

செந்தில் மைண்ட் வாய்ஸ் - "20,000 கோடி 30,000 கோடின்னு அடிச்சிக்கிட்டு இருக்கேன், சில்லறை தனமா 400 கோடினு அசிங்கபத்திகிட்டு"


ராமகிருஷ்ணன்
நவ 15, 2024 10:06

நல்லது. 10 ரூபாய் பாலாஜி திமுக ஆட்சியில் செய்த ஊழல்களை தைரியமாக சொல்லும் நீங்கள் அதே பாலாஜி அதிமுக ஆட்சியில் செய்த ஊழல்களையும் சொல்ல வேண்டியது தானே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை