உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணிக்கான கட்சிகளை முடிவு செய்ய இபிஎஸ்க்கு அதிகாரம்; அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

கூட்டணிக்கான கட்சிகளை முடிவு செய்ய இபிஎஸ்க்கு அதிகாரம்; அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கூட்டணிக்கான கட்சிகளை முடிவு செய்ய இபிஎஸ்க்கு அதிகாரம் அளித்து உட்பட அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=krgseeyw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு, தற்காலிக அவை தலைவர் கே.பி.முனுசாமி தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் 3 ஆயிரம் பேர், சிறப்பு அழைப்பாளர் உட்பட மொத்தம் 5 ஆயிரம் பங்கேற்று உள்ளனர்.சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில் வேறு கட்சிகள் இணையவில்லை. அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்குமாறு குரல் கொடுத்த செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரும் விஜய் கட்சியில் இணைந்து விட்டார்.இந்த பரபரப்பான சூழலில் கூடியுள்ள பொதுக்குழு கூட்டத்தில், அ.தி.மு.க., தலைமையில் மெகா கூட்டணி அமைய, பிரிந்தவர்களை இணைப்பது குறித்து முடிவு எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, அ.தி.மு.க., மட்டுமல்ல, தே.ஜ., கூட்டணி மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:* தமிழகத்தில் கூட்டணிக்கு அதிமுகவே தலைமை தாங்கும் என்று தீர்மானம் நிறைவேற்றம்.* வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜ கூட்டணி சேர்ந்து போட்டியிட அங்கீகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றம்.* கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.* மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதில் திமுக அரசு தோல்வியடைந்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.* வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றம்.* நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம்.* முதலீட்டில் ஆமை வேகம், குறையும் முதலீடுகள், தமிழக மக்களை ஏமாற்றி, போலி புள்ளி விவரங்களை அள்ளி வீசும் முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.* தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக சிறுமிகள், இளம் பெண்கள், வயதான பெண்கள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.* தமிழக மக்களை தொடர்ந்து கடனாளிகளாக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.* பாதுகாப்பற்ற நிலையில் தமிழகத்தை வைத்திருக்கும் நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.* நீட் உளிட்ட திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.* மதுரை மேயர் ராஜினாமா செய்யும் அளவிற்கு ஊழல் நடைபெற்றிருப்பதற்கு கண்டம் தெரிவித்து தீர்மானம்.* பட்டியலினத்தை இழிவு செய்தும், ஒடுக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பதும் திமுக ஆட்சியில் நடந்து கொண்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.* உப்பிலிப்பாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை தமிழகத்திலேயே மிக நீளமான பாலத்தை, அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்தை ஸ்டிக்கர் ஒட்டி, திமுக அரசு கொண்டு வந்ததாக திறப்பு விழா நடத்தி இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.* நீதித்துறை மீதான ஆட்சியாளர்களின் மிரட்டல்களை கைவிடவேண்டும். நீதித்துறையில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது. நீதித்துறைக்கே சவால்விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனநிலையை கண்டித்து தீர்மானம்.* கூட்டணிக்கான கட்சிகளை முடிவு செய்ய இபிஎஸ்க்கு அதிகாரம் அளித்தும், இபிஎஸ்-ஐ மீண்டும் முதல்வர் ஆக்க சூளுரைப்போம் என வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Rengaraj
டிச 10, 2025 13:52

கட்சியை பற்றிய பல்வேறு ஹேஷ்யங்கள், வெளியேற்றப்பட்ட ஒரு தலைவரின் பின்னால் செல்லலாமா என்ற ரீதியில் இருக்கும் ஒரு சில நிர்வாகிகள், கட்சியின் தற்போதைய பொதுச்செயலாளரை பற்றிய எதிர்க்கட்சியின் விமர்சனங்கள், கூட்டணிக் கணக்குகளை மனதில் வைத்து அரசியல் ரீதியாக பொதுமக்களின் எதிர்பார்ப்பு, இவருடன் இணையலாமா, வேண்டாமா என்ற சந்தேகத்தில் இருக்கும் பிற கட்சிகளின் நிலைப்பாடு இவற்றிற்கு நடுவே தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியின் பொதுக்குழு கூடி எந்தவித சண்டையும் போடாமல் கூட்டணி தொடர்பாக அந்த தலைவருக்கு எல்லாவிதத்திலும் அதிகாரம் கொடுக்கிறது என்றால் அவர் கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்று பொருளாகிறது. இதற்கு பின்னால் அவரின் தலைமை பண்பும் சாமர்த்தியமும் புலனாகிறது. ஒன்றுபட்ட அண்ணாதிமுகவே வெற்றிக்கு வழிவகுக்கும் என்று இருந்தாலும் கட்சியில் இருந்துகொண்டே கட்சியின் வளர்ச்சிக்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அடையாளம் கண்டு கட்சியை விட்டே விரட்ட வேண்டும் என்பதே சரியான முடிவு. அண்ணாதிமுக தொண்டர்கள் ஒரு தலைமையின் கீழ் இருந்து கருத்துவேறுபாடுகளை மறந்து ஆட்சியில் அமர்வதற்கு தேவையான வகையில் கட்சியின் அமோகமான வெற்றிக்கு பாடுபடவேண்டும்.


M Ramachandran
டிச 10, 2025 13:10

ஜால்றா சத்தம் நல்லாவே கேடக்குது


duruvasar
டிச 10, 2025 14:26

என்ன முயன்றாலும் எட்டிப்பிடிக்க முடியாது


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 10, 2025 12:45

கட்சியில் அனைவரையும் டிஸ்மிஸ் செய்யும் அதிகாரமும் ஈபிஸ் க்கே வழங்கி அடுத்த தீர்மானம்


V K
டிச 10, 2025 12:31

ஓ அப்படியா


Madras Madra
டிச 10, 2025 12:29

2024 பாராளுமன்ற தேர்தல் கூட்டணி ரிப்பீட்


vidhu
டிச 10, 2025 12:28

11 ஆவது தீர்மானம் அதிமுக என்ற கட்சி காணாமல் போக வழி வகுப்பது. பிரிந்து போனவர்களை ஒன்று சேர்க்கவிட்டால், 11ஆவது கண்டிப்பா நடக்கும். எத்தனை தொகுதிகளில் டெபாசிட் போகுதுனு பாக்கலாம்


முருகன்
டிச 10, 2025 13:06

சேர்ந்தாலும் தோல்வி தான் கிடைக்கும் அதிமுக என்ற கட்சியை இபிஸ் முடிந்து பல நாட்கள் ஆகிறது


திகழ்ஓவியன்
டிச 10, 2025 12:12

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி".. அதிரடி வியூகத்துடன் களமிறங்கும் திமுக பாவம் எடப்பாடி பீசப்பி இடம் வீழ்ந்து கிடக்கிறார்


vivek
டிச 10, 2025 12:31

காங்கிரஸ் பிச்சிட்டு போக போகுது...திமுக கதி...


திகழ்ஓவியன்
டிச 10, 2025 12:52

ஏம்ப்பா பழைய பஞ்சாங்கம் ::விஜயை சந்தித்ததால் தி.மு.க., கூட்டணியில் குழப்பம் இல்லை: பிரவீன் சக்கரவர்த்தி இது இதே பகுதியில் உள்ளது , தூது போனவன் அலறி ஓடி கொண்டு இருக்கான்


V K
டிச 10, 2025 12:12

எங்கே பரபரப்பு


ஜெகதீசன்
டிச 10, 2025 12:11

கணிசமான திமுக ஓட்டுகளை விஜய் பிரித்தால் மட்டுமே அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெற முடியும்


திகழ்ஓவியன்
டிச 10, 2025 12:54

இன்னும் விஜய் GROUND க்கு விளையாட வரவே இல்லை , ADMK க்கு 25-30 வரை SOLID வோட்டு வங்கி , DMK க்கு 25 % வோட்டு , அப்படி எனில் இருவரிடமும் 55 % வோட்டு , நோர்மல் ஆஹ் வோட்டு POLLING ஆவது 70 % அதிக பட்சம் அப்போ காங்கிரஸ் 2 % உள்ள பீசப்பி , 8 % உள்ள நாம் டம்பலர் , VCK , PMK ,DMDK இப்படி எல்லாம் போக இவருக்கு எத்துணை சதவீதம் தான் வரும் ஆகவே இவர் கிரௌண்ட் கு வந்தா தான் PLAYER தானா இல்லை WATER BOTTLE SUPPLIER தான என்று தெரியும்


GMM
டிச 10, 2025 11:52

இருமுறை திமுக வெற்றிக்கு வழி கொடுக்க எடப்பாடி முக்கிய காரணம். பிஜேபி வளர்ச்சி தடுக்க அண்ணாமலை மாற்றம் செய்து, உள்கட்சி விவகாரத்தில் புகுந்து எடப்பாடி பிஜேபி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டது போதும். தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை வெற்றிக்கு பின் முடிவு சரியாக இருக்கும். அண்ணா திமுக குழுவின் தீர்மானம் தவறு. திமுக நிலை அண்ணா திமுக வில் இல்லை. எடப்பாடி பதவி ஆதிக்க முடிவு கூட்டணிக்கு இடையூறு தரும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை