உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யார் அந்த சார்? ஸ்டிக்கர் பிரசாரத்தை துவக்கிய அ.தி.மு.க.,

யார் அந்த சார்? ஸ்டிக்கர் பிரசாரத்தை துவக்கிய அ.தி.மு.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம், தி.மு.க., அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வரும் நிலையில், 'யார் அந்த சார்?' என்ற, 'ஸ்டிக்கர்' பிரசாரத்தை, அ.தி.மு.க., துவக்கியுள்ளது.பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள சார் யார் என்பதை கண்டறிய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அ.தி.மு.க., சார்பில் தமிழகம் முழுதும், 'யார் அந்த சார்?' என்பதை கேட்டு, 'போஸ்டர்'கள் ஒட்டப்பட்டுள்ளன.அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., - ஐ.டி., பிரிவு நிர்வாகிகள், சென்னையில் உள்ள மால்களில், 'யார் அந்த சார்?' என்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், கடந்த இரண்டு நாட்களாக சட்டசபைக்கு வரும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 'யார் அந்த சார்?' என்ற ஸ்டிக்கரை தங்கள் சட்டையில் வைத்திருந்தனர்.அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க., இளைஞர் பாசறை சார்பில், இருசக்கர வாகனங்கள், கார்களில், 'யார் அந்த சார்?' என்ற ஸ்டிக்கர் ஒட்டும் பிரசாரத்தை துவக்கியுள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவகத்தில், வாகனங்களில், 'யார் அந்த சார்?' என்ற ஸ்டிக்கர்களை நேற்று மாலை ஒட்டினர். தமிழகம் முழுதும் அ.தி.மு.க.,வினர் தங்கள் வாகனங்களில், இந்த ஸ்டிக்கரை ஒட்டி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கேட்டு போராடுவர் என, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

போஸ்டர் யுத்தம்

இந்தாண்டு பொங்கலுக்கு பரிசு தொகை வழங்கப்படாத நிலையில், 'அ.தி.மு.க., ஆட்சியில் பொங்கல் பரிசு, 2,500 ரூபாய்; தி.மு.க., ஆட்சியில் 0' என, அ.தி.மு.க.,வினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தி.மு.க.,வும் தமிழகம் முழுதும் போஸ்டர் ஒட்டி வருகிறது.தமிழக சட்டசபையில் உரையாற்றாமல் வெளியேறிய கவர்னர் ரவியை கண்டித்து, 'அத்துமீறும் கவர்னர்; அவரை காப்பாற்றும் அ.தி.மு.க., -- பா.ஜ., கள்ளக் கூட்டணி; கெட் அவுட் ரவி' என, தி.மு.க.,வினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Mettai* Tamil
ஜன 08, 2025 10:50

யாரு அந்த சாரு ??


Madras Madra
ஜன 08, 2025 10:34

ஈரோடு இடை தேர்தல் வரையில் இது ஒலிக்கும்


ராமகிருஷ்ணன்
ஜன 08, 2025 09:45

ஸ்டிக்கர் அரசுக்கு எதிராகவே ஸ்டிக்கரா. சூப்பர்


andiappan ganesan
ஜன 08, 2025 08:56

யார் அந்த சார்? கொடநாட்டில் மின்சாரம் இணைப்பை துண்டிக்க சொன்னது. யார் அந்த சார்? தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த போது ஒன்றும் தெரியாது, தொலைகட்சி பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்றது. யார் அந்த சார்? பொள்ளாச்சியில் இளம் பெண் மானபங்க படுத்தும் போது அமைதியாக இருந்தது...


R K Raman
ஜன 14, 2025 09:45

பாதிக்கப்பட்ட பெண் உமது மகளாக இருந்தாலும் இந்த கேள்விகள் மட்டுமே கேட்பீர்களா


T.sthivinayagam
ஜன 08, 2025 07:11

2013 ஆண்டில் இருந்து வன்கொடுமையை செய்தவன் மேல் வழக்கு உள்ளது அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகா என்ன செய்தது


veera
ஜன 08, 2025 10:51

பூட்டான் 2013...இவன் தொல்லை தாங்க முடியவில்லை..என்று தமிழக மக்கள் கூறுகின்றனர்


raja
ஜன 08, 2025 06:26

அதிமுக நடத்தும் போராட்டம் தமிழர் நலன் பற்றியது ஆனால் திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டம் நடத்துவது அவர்களின் மடை மாற்றும் சுயநல அரசியல்.. இதை தமிழர்கள் புரிந்து கொண்டு திருட்டு திராவிடர்களை அடித்து விரட்ட வேண்டும்..


D.Ambujavalli
ஜன 08, 2025 06:23

இந்த மாதிரி சாத்தான்குளம், பொள்ளாச்சி கேஸ்களுக்காக அன்று ஸ்டிக்கர் ஒட்டியிருக்கலாமே என்று ஆளும் கட்சியினர் இன்று வருந்தலாம்


Kasimani Baskaran
ஜன 08, 2025 06:20

ஆத்தா தீம்க்கா சிதைய பலரின் ஆணவப்போக்குதான் காரணம். பல கேடிகளை பயிற்சி கொடுத்து அனுப்பியவர்கள் இவர்கள்தான். ஸ்டிக்கர் என்று ஆரம்பித்து தாத்தா தீம்க்காவில் ஐக்கியமாக அதிக வாய்ப்பு இருக்கிறது.


Guna Gkrv
ஜன 08, 2025 05:51

அ இ அ தி மு க ஒன்றும் யோக்யவான்கள் இல்லை. அவர்கலும் இதே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்


R K Raman
ஜன 14, 2025 09:46

அதனால் இந்த சார் யார் என்று தெரிய வேண்டுமா?


J.V. Iyer
ஜன 08, 2025 05:19

இந்த கயவன் கூப்பிட்ட எண்ணை வைத்து அந்த கூட்டாளி சார் கயவனை பிடிக்கமுடியாதா? இந்த ஏவல் துறை கொடியவர்களை காப்பாற்றவா தமிழகத்தில் இருக்கு? சட்டம் என்ன செய்யுது? மத்திய அரசு ஏன் சும்மா இருக்குது?


புதிய வீடியோ