உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர்கள் 3 பேர் மீது அ.தி.மு.க., நம்பிக்கையில்லா தீர்மானம்; சபாநாயகர் அனுமதி மறுப்பு

அமைச்சர்கள் 3 பேர் மீது அ.தி.மு.க., நம்பிக்கையில்லா தீர்மானம்; சபாநாயகர் அனுமதி மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, கே.என்.நேரு மற்றும் பொன்முடிக்கு எதிராக அ.தி.மு.க., நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அ.தி.மு.க., சார்பில் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. ''நாங்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது அவையில் விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார்'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார்.டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும், பெண்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடி மீதும், நகராட்சி நிர்வாகத் துறை முறைகேடு தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு மீதும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cqocpqv0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: அவையில் உள்ள அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சபாநாயகர் அப்பாவு இடம் முறையிட்டோம். கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் வெளிநடப்பு செய்துள்ளோம். கோபத்தில் இருக்கும் தமிழக மக்களை மடைமாற்றம் செய்யவே மாநில சுயாட்சி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். இது முழுவதும் ஏமாற்று வேலை. அ.தி.மு.க.,வினரை தொடர்ந்து புறக்கணிப்பதிலேயே சபாநாயகர் நேரத்தை செலவிடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

PARTHASARATHI J S
ஏப் 16, 2025 06:38

நடப்பது அராஜக அரசாங்கம். எதற்கெடுத்தாலும் மத்திய அரசை எதிர்ப்பது கேவலமாக உள்ளது. மறை கழண்டு விட்டது .அவ்வளவுதான்.


மதிவதனன்
ஏப் 15, 2025 20:35

இன்று நாடு முழுவதும் ஸ்டாலின் பற்றி தான் பேசுச்சு , எல்லா மாநிலமும் TN , அது கவர்னர் க்கு வெச்ச ஆப்பு , எப்படி dmk வால் இது சாத்தியம் ஆயிற்று , DMK லீகல் WING வெரி STRONG என்று ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் ஓபன் HALL இல் சொல்லுகிறார் , இந்த அடிமை கூட்டம் என்றால் இந்நேரம் சுருட்டி கொண்டு ஓரமா இருந்திருக்கும் , பயந்தான்கொள்ளி பக்கோடா


M R Radha
ஏப் 15, 2025 21:00

எவ்ளோ கர்த் போட்டீனாலும் அதே 200ரூவா தான்


sridhar
ஏப் 15, 2025 22:28

அப்படியா , நாடு முழுதும் போய் எல்லோரிடமும் கருத்து கேட்டுவிட்டு வந்துவிட்டாயா ? கும்முடிப்பூண்டி தாண்டியதுண்டா ?


K.Ramakrishnan
ஏப் 15, 2025 18:21

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யாருமே சபையில் முறையாக விவாதம் நடத்துவது இல்லை.வெளிநடப்பு செய்வதற்காகவே ஏதாவது ஒரு பிரச்னை கிளப்பி வெளியேறுகின்றனர். இதற்கு அவர்கள் உள்ளே போகாமலேயே இருக்க வேண்டியது தானே...


RAMAKRISHNAN NATESAN
ஏப் 15, 2025 17:54

ஆங்கிலப் புத்தாண்டிற்கு அகிலத்திற்கெல்லாம் வாழ்த்துமடல் எழுதும் முதல்வருக்கு ஆண்டாண்டு காலமாகத் தமிழர்களின் கலாச்சாரக் கொண்டாட்டமான தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்துக் கூற மனம் இல்லையா? தமிழுக்காக உயிரைக் கொடுக்கும் கழகம் திமுக என விளம்பர வசனம் பேசிக் கொண்டு நமது தாய்த் தமிழை வெறும் அரசியல் பிழைப்பு மொழியாக மட்டுமே திமுக பயன்படுத்துகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும். தொடர்ந்து தமிழர்களின் மத-கலாச்சார நம்பிக்கைகளின் மீது சேற்றை வாரி இறைக்கும் திமுக-விற்கு வாக்குச்சாவடிகளில் சவுக்கடி கிடைக்கப் போவது நிச்சயம் என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்


RAMAKRISHNAN NATESAN
ஏப் 15, 2025 17:54

நோக்கம் கொள்ளை மட்டுமே ..... ஆனால் மக்கள் காப்பாற்ற வந்த ஹீரோக்களாக நினைத்துவிட்டனர் ....


என்றும் இந்தியன்
ஏப் 15, 2025 17:38

சே போ நாயகர் தானே அப்படித்தானே இருப்பார்


Barakat Ali
ஏப் 15, 2025 17:08

சபாநாயகருக்கு நடுநிலை தேவை ..... இதுவரை எந்த மன்றத்தின் எந்தக்கட்சி சபாநாயகரும் அப்படி நடந்துகொண்டது இல்லை .... ஆனாலும் கொள்ளையர்களைக் காப்பாற்ற முயல்வது என்பது எக்ஸ்ட்ரீம் ....


என்றும் இந்தியன்
ஏப் 15, 2025 17:07

அப்பாவுக்கு ஏசுவின் பரிபூர்ண ஆசிகள், திராவிட மடியல் அரசின் சித்தாந்தம் இந்து என்று யாரேனும் வந்தால் அவர்கள் என்ன சொன்னாலும் மறுப்பது, தவறு என்று சொல்வது இதனால் தான்


Murthy
ஏப் 15, 2025 16:11

2026 ல் வீட்டுக்கு போகும் திமுக.


என்றும் இந்தியன்
ஏப் 15, 2025 17:09

2026 ல் சிறை வீட்டுக்கு போகும் திமுக.


Murthy
ஏப் 15, 2025 16:11

2026 ல் திமுகவுக்கு வாய்ப்பே இல்ல ராஜா.......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை