உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உபரி நீர் திறக்கும் போது மக்களை எச்சரிங்க!

உபரி நீர் திறக்கும் போது மக்களை எச்சரிங்க!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க, கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. அணைகளில் இருந்து உபரி நீரை வெளியேற்றும் போது, பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி, அணைகளில் இருந்து உபரி நீரை வெளியேற்றும்படி, நீர்வள ஆதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் தங்கள் புகார்களைப் பதிவு செய்ய, மாநில மற்றும் மாவட்ட அவசர கால செயல்பாட்டு மையங்கள், 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. - ராமச்சந்திரன்வருவாய்த்துறை அமைச்சர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ