| ADDED : டிச 23, 2025 03:55 PM
சென்னை: அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் மற்றும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜூன்ராம் மேவல் ஆகியோர் சந்தித்து தமிழக சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினோம், என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.தமிழக சட்டசபை நெருங்கும் நிலையில், அதிமுக - பாஜ கூட்டணி தேர்தல் பணிகளை விரிவுபடுத்தி உள்ளன. தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அர்ஜூன்ராம் மேவல் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் இன்று சென்னை வந்தனர். தொடர்ந்து அவர்கள் அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி ஆகியோரை சந்தித்தனர். அப்போது, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4e623we2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சுமார் 1.5 மணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தைக்கு பின்னர் காரில் கிளம்பும் முன்னர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், '' இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக சென்றது,'' எனத்தெரிவித்தார்.முன்னதாக, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை வந்த பியூஷ் கோயல், அர்ஜூன்ராம் மேவல், இருவரும் அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்களை சந்தித்து, மரியாதை நிமித்தமாக 2026 சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த சந்திப்பின் போது, மத்திய அமைச்சர் முருகன், தமிழக பாஜ தேசிய பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.