உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயத்தில் தான் பா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க., பழனிசாமி மீது பொன்முடி தாக்கு

பயத்தில் தான் பா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க., பழனிசாமி மீது பொன்முடி தாக்கு

விழுப்புரம்: அ.தி.மு.க., பழனிசாமி, முதலில் பா.ஜ.,வோடு சேர மாட்டேன் என கூறிவிட்டு, தற்போது பயத்தில் சேர்ந்துள்ளார் என, பொன்முடி எம்.எல்.ஏ., கூறினார். விழுப்புரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கருணாநிதி ஆட்சியில், கடந்த 2010-2011ம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலையில் இருந்து முதுகலை மையம் என தனியாக விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில் துவங்கப்பட்டது. பின், அண்ணாமலை பல்கலையோடு இணைக்கப்பட்டு, இந்த மையம் செயல்பட்டது. இந்த மையத்தில் மாணவர் சேர்க்கை துவங்கிய போது, 4 பட்ட மேற்படிப்புகள் மட்டுமே இருந்தது.தொடர்ந்து, இடம் மாற்றப்பட்டு, அண்ணாமலை பல்கலையில் வந்தபோது, மாணவர்கள் இங்கேயே தேர்வெழுதும் நடைமுறையும் கொண்டு வரப்பட்டது. இந்தாண்டு விண்ணப்பங்கள் பெறவில்லை என கடந்த ஒருவாரம் முன், இங்குள்ள ஆசிரியர்கள் என்னிடம் தகவல் தெரிவித்தனர். நான், உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன், தமிழக முதல்வரிடம் கூறியதன் பேரில், இந்த மையத்தில் மாணவர் சேர்க்கைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த மையத்தில் 7 பட்ட மேற்படிப்புகள் உள்ளன. விழுப்புரம் அரசு கலை கல்லுாரி மற்றும் இந்த மையம் ஆகிய இரு இடங்களில் மட்டுமே மாவட்டத்தில் முதுகலை பட்ட மேற்படிப்பு மையம் உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்த பின், 4 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட அரசு கல்லுாரிகளை துவக்கியுள்ளார். உயர்கல்வி வளர்ச்சியில் இந்தியாவில் தமிழகம் தான் முதன்மையில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.பா.ம.க.,வில் தந்தை, மகன் பிரச்னையை தீர்த்து கொண்டு வந்தவுடன், தி.மு.க., திட்டத்தை பற்றி அன்புமணி விமர்சிக்கலாம். அ.தி.மு.க., பழனிசாமி, முதலில் பா.ஜ.,வோடு சேர மாட்டேன் என கூறி விட்டு தற்போது சேர்ந்துள்ளார். அவர் சொந்த பயத்தில் தான் பா.ஜ.,வோடு சேர்ந்துள்ளார். தி.மு.க.,விற்கு அது போன்ற பயமில்லை. மகளிர் உரிமை தொகை தி.மு.க.,வில் இருந்து வழங்குகிறார்களா என பழனிசாமி கூறுகிறார். அ.தி.மு.க.,வில் பல திட்டங்களை கட்சியில் இருந்தா செய்தார்கள். அரசு திட்டங்களை அரசு நிதியில் இருந்து தான் செய்வர். பல்கலைக்கழகம் அறிவித்தார்களே தவிர அ.தி.மு.க., ஆட்சியில் நிதியை ஒதுக்க முடியவில்லை. தற்போது வளர்ச்சி பெற்றதால் அண்ணாமலை பல்கலையோடு இணைத்து செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். கல்லுாரிகள் வளர, வளர பல்கலைக்கழகம் தேவைப்படுவதால் அதற்கான முயற்சிகள் செய்யப்படுகிறது. ஆட்சிக்கே வராமல் அ.தி.மு.க., பழனிசாமி வெறும் அறிவிப்பை வெளியிடுகிறார். நிரந்தர முதல்வராக தமிழகத்தில் ஸ்டாலின் தான் இருப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

SIVA
ஜூலை 17, 2025 22:01

அனுபவஸ்தங்க சொன்னா சரியாதான் இருக்கும் , உதாரணம் 2006 திமுக காங்கிரஸ் கூட்டணி , இவர் உச்ச நீதி மன்றத்தில் எனக்கு வயதாகி விட்டது என்று தீர்ப்புக்கு தடை கேட்டது ...


sankaranarayanan
ஜூலை 17, 2025 17:25

அ.தி.மு.க., பழனிசாமி, முதலில் பா.ஜ.,வோடு சேர மாட்டேன் என கூறி விட்டு தற்போது சேர்ந்துள்ளார். அவர் சொந்த பயத்தில் தான் பா.ஜ.,வோடு சேர்ந்துள்ளார். தி.மு.க.,விற்கு அது போன்ற பயமில்லை. பயமில்லாமலா இந்திரா காலத்தில் அவருக்கு பயந்து திராவிட நாடு கொள்கையையே விட்டுவிட்டிர்கள் அப்படி நீங்கள் பயந்து செய்யாவிட்டால் உங்கள் கட்சியே இல்லாமல் போயிருக்கும் தன் மீது ஆயிரம் குப்பைகள் இருக்கும்போது அடுத்தவர்களைப்பற்றி பேச இவருக்கு அருகத்தையே இல்லை


ஜூலை 17, 2025 14:22

நேர்மையின் சிகரமான கோல்டன் ஹேர் ...மாவீரன்... பயமே கிடையாது ...


ponssasi
ஜூலை 17, 2025 13:45

பொன்முடி MLA. இதுகூட கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிகிறது


மோகன்
ஜூலை 17, 2025 13:26

மிஸ்டர் பொன்முடி, நீங்க சைவமா... வைணவமா?... இல்ல ரெண்டுமா? .....


Kjp
ஜூலை 17, 2025 13:01

ஐயா தங்க முடி அவர்களே தங்கள் முந்நாள் தலைவர் கருணாநிதி கூடா நட்பு கேடாய் முடியும் என்று காங்கிரஸை கழட்டி விட்டு பிறகு திரும்பவும் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தது பயம் காரணமாகவா? உடல் நிலையை காட்டி ஜாமீனில் வந்த குத்தாட்டம் போடும் நபர்கள் எல்லாம் விமர்சனம் பண்ண வந்து விட்டார்கள்.


Ramesh Sargam
ஜூலை 17, 2025 12:16

படத்தில் உள்ள பொன்முடியின் முகத்தை உத்துபாருங்கள். பயம் தெரிகிறதா அவர் முகத்தில்.


JANA VEL
ஜூலை 17, 2025 12:13

இவரே இப்போ பயத்தில் இருப்பது முகத்தில் தெரியுது.


sridhar
ஜூலை 17, 2025 11:58

....பேச்சுக்காரா .


samvijayv
ஜூலை 17, 2025 11:51

சரி.., அவர் பயத்தில் கூட்டணி நீங்க?., ஒண்ணுமே தேறாத காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துக் கொண்டு நீ பேசுற முதலில் உன் மீதுள்ள வழக்க முடி அதன் பின் பழனிசாமி பயந்தாரா.. பாய்ந்தார்... என்று பேசலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை