உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீட் தேர்வர்களுக்கு தமிழகத்திற்குள்ளேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு

நீட் தேர்வர்களுக்கு தமிழகத்திற்குள்ளேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு, தமிழகத்திலேயே தேர்வு மையங்களை, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் ஒதுக்கியுள்ளது.நாடு முழுதும் அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருந்துவ படிப்புகளுக்கான சேர்க்கை, நீட் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்கான நீட் தேர்வை, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் ஆக., 11ம் தேதி நடத்த உள்ளது. தமிழகத்தில் இருந்து 25,000 பேர் உட்பட நாடு முழுதும், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத உள்ளனர்.இந்நிலையில், தமிழக தேர்வர்களுக்கு அவர்கள் கேட்டிருந்த நான்கு விருப்ப தேர்வு மையங்களை ஒதுக்காமல் 750 கி.மீ., - 1000 கி.மீ., தொலைவில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில், மையம் ஒதுக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, தேர்வர்களுக்கு அந்தந்த மாநிலத்திலேயே மையங்களை ஒதுக்க கோரிக்கை வைத்தார். அதைத் தொடர்ந்து, 75 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, தமிழகத்திலேயே தேர்வு மையங்களை, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் மறு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தகவல், மின்னஞல் வாயிலாக, தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Manickavasagam Shanmugasundaram
ஆக 11, 2024 14:04

இதுவும் பொய்.


Apposthalan samlin
ஆக 06, 2024 11:57

40/40 எதற்கு என்று keateerkale இதற்கு தான்


S BASKAR
ஆக 06, 2024 09:38

மந்திரி சொன்னாத்தான் தேர்வு வாரியம் கேட்கும் போல


S BASKAR
ஆக 06, 2024 08:02

இப்பல்லாம் எல்லாத்தையும் போராடி தான் பெற வேண்டியிருக்கு


மேலும் செய்திகள்









புதிய வீடியோ