மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
3 hour(s) ago | 5
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
6 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
7 hour(s) ago | 21
சென்னை : அம்பேத்கர் நுால்களை, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், எளிய தமிழில் மொழிபெயர்த்து, மலிவு விலையில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.அம்பேத்கரின் படைப்புகளை, எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் வெளியிட தமிழக அரசு முடிவு செய்தது; அரசாணையும் வெளியானது. இதைத் தொடர்ந்து, நியு செஞ்சுரி புத்தக நிறுவனம், தமிழ் வளர்ச்சித் துறையோடு இணைந்து, 'அண்ணல் அம்பேத்கரின் அறிவுக் கருவூலங்கள்' என்ற தலைப்பில், 60 தொகுதிகளாக வெளியிட முன்வந்துள்ளது.அம்பேத்கர் நுால்களை, எளிய தமிழில் வெளியிடும் திட்டத்தை செயல்படுத்த, சூலுார் பாவேந்தர் பேரவை தலைவர் செந்தலை கவுதமன், எழுத்தாளர் அரசு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன முன்னாள் பேராசிரியர் வளர்மதி, கல்லுாரி கல்வி இயக்கக முன்னாள் துணை இயக்குனர் மதிவாணன், சண்முகம் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவின் முதல் கூட்டம், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வை அருள் தலைமையில், சமீபத்தில் நடந்தது. கூட்டத்தில், அம்பேத்கரின் ஆக்கங்களில், இதுவரை அச்சில் வெளிவராத, நுால் வடிவில் கிடைக்காத, பிற அரிய செய்திகளையும் தொகுத்து, புதிய தொகுதிகளாக வெளியிடுவது; ஒவ்வொரு தொகுதியும், 300 பக்கங்கள் உடையதாக அமைத்து, ஒரு தொகுதியை 100 ரூபாய்க்கு மிகாமல் விற்பது என, முடிவு செய்யப்பட்டது.
3 hour(s) ago | 5
6 hour(s) ago | 5
7 hour(s) ago | 21