உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கைதியின் ஜாதி கேட்க கூடாது சிறை விதிகளில் திருத்தம்

கைதியின் ஜாதி கேட்க கூடாது சிறை விதிகளில் திருத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'சிறைகளில் கைதிகளின் ஜாதியை கேட்பது, ஜாதி அடிப்படையில் பணி ஒதுக்குவது போன்றவை கூடாது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, சிறை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:சிறைகளில் புதிய கைதியை அடைக்கும் போது, அவர்களின் ஜாதி தொடர்பான எந்த விபரங்களையும், சிறை அதிகாரிகள் விசாரிக்கவோ, பெறவோ, பதிவு செய்யவோ கூடாது. கைதிகளின் ஜாதி குறித்த விபரங்கள், பதிவேட்டில் பராமரிக்கப்படக் கூடாது.கைதிகள் அவர்களின் ஜாதி அடிப்படையில் வகைப்படுத்தப்படவில்லை என்பதை, சிறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். சிறைகளில் எந்த வேலையையும், கைதிகளின் ஜாதி அடிப்படையில் ஒதுக்கக்கூடாது. சிறைகளில் உள்ள, கழிவுநீர் தொட்டியை, ஆட்கள் வைத்து கைகளால் சுத்தம் செய்யக் கூடாது. இயந்திரங்களை வைத்து சுத்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 21, 2025 13:29

அனைவரும் நம்ப வேண்டும் இந்த ஒரு இடத்தில் தான் ஜாதி பாகுபாடு இருந்தது. இன்றோடு அதுவும் ஒழிந்தது. தமிழகத்தில் இனி ஜாதி என்ற பேச்சுக்கே இடமில்லை.


Raa
மே 21, 2025 12:21

ஆம், ஜாதி அடிப்படையில், கல்லூரி இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு, தேர்தல் வாக்குறுதிகள் போன்றவை மட்டுமே கொடுக்கலாம். இதெல்லாம் சரி... மற்றவையெல்லாம் சரி இல்லை. நண்புங்கள் நண்பர்களே.


lana
மே 21, 2025 11:35

இது ஒன்றில் அரசின் திட்டமிட்ட சதி. இங்கு ஈரோடு ஈர வெங்காயம் ஏற்கனவே சாதி ஐ ஒழித்து விட்டது. இப்படிக்கு விடியா அரசு


haridoss jennathan
மே 21, 2025 11:30

ஐயா இதே போல் அணைத்து பள்ளிகளிலும் சாதி பெயர் கேட்கமால் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவேண்டும். சாதி விதை அங்கு தான் முலை விடுகிறது .அதன் பிறகுதான் வேலை செய்யும் அலுவலகங்களிலும் சாதி தலை தூக்கி செயல்பட வாய்ப்புகள் இருப்பதாக அறிகிறோம் . .


Sivasankaran Kannan
மே 21, 2025 11:03

ஆனால் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்..


vadivelu
மே 21, 2025 10:17

சாதி மதம் பார்த்து நடத்துவார்களோ


m.arunachalam
மே 21, 2025 09:49

சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற சலுகையை நிறுத்த வேண்டும் . சாதிவாரி கணக்கெடுப்பும் கூடாது . குற்றவாளிகளின் சாதியை வெளிப்படுத்த வேண்டும் . அப்போது மக்கள் கொஞ்சம் விலகி வாழ பழகிக்கொள்வர் .


GMM
மே 21, 2025 07:58

சாதி இட ஒதுக்கீடு நீங்கும் போது, சாதிபற்றி பொது வெளியில் கேள்வி வராது. சிறை விதி திருத்தம் கல்விக்கும், வேலைக்கும் பொருந்த வேண்டும்.


Ramaraj P
மே 21, 2025 07:11

கைதிக்கு சாதி சான்றிதழ் இருக்குமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை