உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தேர்தல் சீசனுக்கு மட்டும் வந்து செல்பவர் அமித் ஷா

 தேர்தல் சீசனுக்கு மட்டும் வந்து செல்பவர் அமித் ஷா

பூரண மதுவிலக்கு என்பது உலகம் முழுக்க தோல்வி அடைந்த திட்டம். இது எங்கேயும் வெற்றியடையவில்லை. மதுவை கட்டுப்படுத்தலாமே தவிர முழுமையாக தடை செய்ய முடியாது. குஜராத்தில் பூரண மதுவிலக்கு என்பது வெறும் பேப்பரில் தான் இருக்கிறது. காந்தி பிறந்த ஊரான போர்பந்தரில் தான் மது இறக்குமதியே ஆகிறது. தமிழகத்தில் தேர்தல் வரும்போது, அமித் ஷா, மோடி உள்ளிட்டவர்கள் அடிக்கடி வரத்தான் செய்வார்கள். தமிழ் உணவு தான் பிடிக்கும் என்பார்கள். தமிழ் மொழி தான் பிடித்த மொழி என்பார்கள். தேர்தல் இல்லாத போது அவர்களுக்கு தமிழகத்தை பற்றி, எந்த கவனமும் இருக்காது. புலம் பெயரும் பறவைகளைப் போல, தேர்தல் சீசனுக்கு, தமிழகம் வந்து செல்பவர்கள் தான் அவர்கள். தமிழகத்தின் எந்த ஒரு உரிமையையும் தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகள், விட்டுக் கொடுக்காது. - கார்த்தி காங்கிரஸ் எம்.பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

கண்ணன்
டிச 14, 2025 11:36

இவரது தகப்பனாரும் இவரும் தொகுதிகளுக்கு ஆண்டிற்கு ஒருமுறையாவது செல்வரா?


Shekar
டிச 14, 2025 10:06

அவங்க தமிழ்நாட்டுக்காரவுங்க கிடையாது, இங்கேயே குடியிருக்க. அது போகட்டும் இவங்களாவது அப்பப்ப வாரங்க, உங்க அன்னை சோனியா, இளவரசர் ராகுல், இளவரசி ப்ரியங்கா யாரும் இந்தப்பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை, பின்னே ஓட்டுமட்டும் போடுங்கன்னு சொன்னிங்கன்னா எவன் ஒட்டு போடுவான்


பாலாஜி
டிச 14, 2025 09:58

அமித்ஷாவின் வருகை கூட்டணி முயற்சி தவிர தமிழ்நாட்டில் வேற எந்த பலனையும் பாஜகவுக்கு ஏற்படுத்தாது.


RAJ
டிச 14, 2025 08:42

டேய்ய்ய்ய்.... இத்தப்ப்பாரா... பேசறது யார்னு தெரியுது.....தெரில...


Raj
டிச 14, 2025 06:49

அவராவது தேர்தல் நேரத்திலாவது தமிழகம் வருகிறார் ஆனால் தமிழகம் பக்கமே வருவது கிடையாது, முழுவதும் வடக்கு பக்கம் தான்.


Gopal
டிச 14, 2025 06:31

உதவக்கரை காங்கிரஸ் எப்போதும் தொகிதியில் தலை வைத்து படுக்காதே. தேர்த்தல் வந்தால் ஓட்டு பிச்சை எடுக்க வந்து விடும் ஜென்மங்கள். சரியான குப்பை கட்சி.


srinivasan
டிச 14, 2025 06:28

தேர்தல் சமயத்தில் மட்டுமே நாங்களும் இருக்கிறோம் என்று காண்பித்துக் கொள்ளும் தந்தையும் மகனும்


Mani . V
டிச 14, 2025 06:26

சரி நொன்னை, உங்கள் கூட்டணிக் கட்சி கடந்த நான்கரை வருடமாக ஒரு எழவு ஆணியும் கழட்டாமல், தேர்தல் நெருங்கும் வேளையில் நாடகக் கம்பனி மாதிரி வெறும் திட்டங்களாக அறிவிக்கிறதே, எங்கே திராணி இருந்தால் கேட்டுப் பார்க்க வேண்டியதுதானே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை