அமித் ஷா சொல்வதே கூட்டணியில் இறுதி
மக்கள் விரும்பாத, தி.மு.க., என்ற தீயசக்தி ஆட்சியை அப்புறப்படுத்த அமைந்த கூட்டணி தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கூட்டணியினருக்காக என்ன சொல்கிறாரோ, அதுதான் இறுதி முடிவு. அமித் ஷாவின் கருத்தே கூட்டணியை சேர்ந்த எல்லாருடைய கருத்தாகவும் எதிரொலிக்க வேண்டும். அ.தி.மு.க.,வினரை ஒரே குடைக்குள் கொண்டு வர வேண்டும் என்பது அமித் ஷாவின் விருப்பம். அதற்காகவே, எங்களையும் கூட்டணிக்குள் கொண்டு வந்துள்ளார். தி.மு.க., ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற அமித் ஷாவின் எண்ணத்துக்கு மாறாக, கூட்டணி கட்சித் தலைவர்கள், பொதுச் செயலர்களாக இருப்போர் யாரும் எந்தக் கருத்தையும் கூறக்கூடாது. அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு நடந்தே தீரும். இந்த விவகாரத்தில், நாங்கள் தலையிட மாட்டோம் என்று, அமித் ஷா ஏற்கனவே கூறிவிட்டார்.- தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,