உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக ஆனந்தன் நியமனம்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக ஆனந்தன் நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பி.ஆனந்தன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் மறைவால், அடுத்த தலைவராக அவரது மனைவியை நியமிக்கலாம் என அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், பதவியை ஏற்க ஆம்ஸ்ட்ராங் மனைவி மறுத்ததாக கூறப்படுகிறது.இதனால் புதிய தலைவரை நியமிக்க தேசிய தலைமை மும்முரமாக ஆலோசித்தது. அதன்படி, உச்சநீதிமன்ற வழக்கறிஞராக இருக்கும் பி.ஆனந்தன் என்பவர் பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Aswath Madhavan
ஜூலை 22, 2024 21:11

பச்சை தமிழன்


தமிழ்நாட்டுபற்றாளன்
ஜூலை 23, 2024 01:23

எல்லோருக்கும் வாரி வழங்கினார் என்கிறார்கள் , வருமானம் எப்படி வந்தது இவர்க்கு இவ்வளவு சொத்து எப்படி சேர்த்தார் தெரிந்தவர்கள் சொல்லவும்


Iniyan
ஜூலை 22, 2024 19:21

எல்லா வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் ஒண்ணாம் நம்பர் கேடிகள்


Rpalnivelu
ஜூலை 22, 2024 19:00

ஆளாளுக்கு அட்ரஸ் இல்லா கட்சிகெல்லாம் தலைவராகிறார்கள். நேற்றைய ரவுடி இன்றைய கட்சித் தலைவன். ஒன்றிரெண்டு நல உதவி செய்து விட்டால் அவன் மிகப் பெரிய தலைவன். அவன் முற்காலத்தில் செய்த கொலைக்கு அவன் எதிரிகள் அவனை பழி வாங்கி விட்டால் எல்லாரும் அவனுக்காக வக்காலத்து வாங்குகிறார்கள். ஒண்ணுமே புரில


Vetriveeran Sakkaravarthi
ஜூலை 22, 2024 17:39

நல்ல மனிதரை கொன்று விட்டார்கள் படு பாவிகள். படிக்க சொன்னார், படிக்க வைத்தார், வேலைக்கு போகச்சொன்னார். தன்னுடைய செலவில் அதிகமான ஏழை மாணவர்களை டாக்டர்களாகவும் என்ஜினீர்களாகவும் வக்கீலாகவும் ஆக்கியிருக்கின்றார். இளைஞர்களை வேலைக்கு போகாமல் வெறும் பேச்சை பேசி நாட்டைக் கெடுப்பவர்கள், கட்டை பஞ்சாயத்து செய்து கோடி கோடியாக சம்பாதித்து கொண்டிருப்பவர்கள் நல்ல பேர் எடுத்தால் விட்டு வைப்பார்களா?


Vetriveeran Sakkaravarthi
ஜூலை 22, 2024 17:30

தமிழகத்தில் நல்ல மனிதர்களை ரொம்ப நாள் வாழ விடமாட்டார்கள். ஆயிரக்கணக்கானவர்களை படிக்க வைத்திருக்கின்றார். எந்த அரசியல்வாதி தமிழ்நாட்டில் தன்னுடைய பணத்தை போட்டு படிக்க வைத்திருக்கின்றார்கள். அவரை வளர விடைக் கூடாது என்று வன்முறையை பேசி இளைஞர்களை வீணாக்கி அரசியல் நடத்துபவர்கள் அவரை ரொம்ப நாளைக்கு விட்டு வைத்திருக்க மாட்டார்கள். நேர்மையாக இருங்கள், படியுங்கள், வேலைக்கு சென்று உங்கள் குடும்பத்தை பாருங்கள் என்று எந்த அரசியல்வாதி தமிழ்நாட்டில் மேடைக்கு மேடை பேசியிருக்கின்றார்கள். வன்முறை மூலம் ஒரு நல்ல மனிதரை கொன்று விட்டார்கள். மனசாட்சி இல்லாத கேவலமான புத்தியைக் கொண்டவர்கள். அவர்கள் ரொம்ப நாள் மறைந்து வாழ முடியாது, உண்மை ஒரு நாள் வந்த தீரும்.


Aswath Madhavan
ஜூலை 22, 2024 21:06

செம்ம காமெடி


Ramesh Sargam
ஜூலை 22, 2024 16:58

புதிய தலைவருக்கு வாழ்த்துக்கள். நீங்களாவது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். தமிழகத்தில் கொலைகாரர்கள் அதிகம். அவர்கள் ஆளும் கட்சியின் ஆதரவு பெற்றவர்கள்.


venugopal s
ஜூலை 22, 2024 16:56

இவர் எந்தக் கும்பல் தலைவர்?


Anand
ஜூலை 22, 2024 16:10

படத்தில் இருப்பது ஆர்ம்ஸ்ட்ராங்கா, ஆனந்தனா?


Naga Subramanian
ஜூலை 22, 2024 15:57

இப்படியொரு கட்சி தமிழ்நாட்டில் இருந்ததென்பது, ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் மறைவிற்குப்பின்தான் தெரியவே செய்தது. அன்னாரது படுகொலை யாவராலும் மன்னிக்கமுடியாதது. அன்னாரை கொலை செய்ய ஏகப்பட்ட நபர்கள் திட்டமிட்டதும், பிறகு ஒன்றன்பின் ஒன்றாக கைது செய்யப்பட்டும் வருகின்றனர். ஆச்சர்யமாகவே உள்ளது. அப்படியொரு வன்மம், ஆர்ம்ஸ்ட்ராங் மீது ஏன் ஏற்பட்டது என்பதுதான் புரியவில்லை. புரியாத புதிராகவே உள்ளது. அரசியல் விளையாட்டு மிகவும் அபாயகரமானதாகவே உள்ளது. எது எப்படியோ, இறந்த நபர், ஆயிரக்கணக்கில் பலரை படிக்க வைத்திருக்கிறார் என்பதை கண்டு சற்றே கலங்கத்தான் செய்கிறது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்


தமிழ்நாட்டுபற்றாளன்
ஜூலை 23, 2024 01:24

விசாரிக்க விசாரிக்க ரவுடி லிஸ்ட் தான் நீளுது அப்போ ?


சுப்பராயன்
ஜூலை 22, 2024 15:30

கட்டப்பஞ்சாயத்தில் பெரிய மாற்றம்.இருக்காது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை