உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆவின் பொருள் விலையை குறைக்காமல் ஏமாற்று நாடகம்; அன்புமணி குற்றச்சாட்டு

ஆவின் பொருள் விலையை குறைக்காமல் ஏமாற்று நாடகம்; அன்புமணி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட நிலையில், ஆவின் பொருட்களின் விலையை குறைக்காமல், அதன் அடிப்படை விலையை உயர்த்தியுள்ளதாக தமிழக அரசு மீது அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். அவரது அறிக்கை; ஜிஎஸ்டி வரிக் குறைப்புக்குப் பிறகும் தமிழகத்தில் ஆவின் நிறுவனம் அதன் பால் பொருள்களின் விலைகளை குறைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி இன்று காலை நான் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அரசின் சார்பில் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவை செய்தியாக ஒலிபரப்பாகி வருகின்றன. ஆவின் பால்பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை; இது மக்களை ஏமாற்றும் முயற்சி என்பது தான் உண்மை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ynjnn0z9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

விலை குறைப்பில்லை

ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்றவாறு பால் பொருள்களின் விலை குறைக்கப்பட வேண்டும். ஆனால், ஆவின் நிறுவனம் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, ஆவின் பால் பொருள்களின் அதிகபட்ச விற்பனை விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாமல், வரி எந்த அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதோ, அதற்கு ஏற்றவாறு அடிப்படை விலையை உயர்த்தியுள்ளது.எடுத்துக்காட்டாக ஒரு கிலோ நெய்யின் அதிகபட்சம் விற்பனை விலை ரூ.700. இதில் அடிப்படை விலை ரூ.625. 12% ஜிஎஸ்டி வரி ரூ.75 ஆகும். ஆவின் நெய் மீதான ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மதிப்பு ரூ.31 மட்டும் தான். அதன்படி ஆவின் நெய் ஒரு கிலோ ரூ.656க்கும் மட்டுமே விற்கப்பட வேண்டும். அமுல் , நந்தினி போன்ற பொதுத்துறை பால் நிறுவனங்கள் இந்த அடிப்படையில் தான் விலைக்குறைப்பு செய்துள்ளன. ஆனால், ஆவின் நிறுவனமோ ஒரு கிலோ நெய்யின் அடிப்படை விலையை ரூ.625லிருந்து ரூ.669 ஆக உயர்த்தி அத்துடன் ரூ.31 ஜிஎஸ்டி விலை சேர்த்து அதிகபட்ச விலையாக ரூ.700 நிர்ணயித்துள்ளது.

கூடுதல் விலை

அதே நேரத்தில் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் இந்த நாளில் விலையை குறைத்ததாகக் கணக்கு காட்டும் நோக்குடன் இன்று முதல் நவம்பர் 30 வரை ஒரு கிலோ நெய்க்கு ரூ.40 தள்ளுபடி வழங்குகிறது. இந்த தள்ளுபடியும் கூட ஆவின் நெய், பனீர் ஆகியவற்றுக்கு குறைந்த அளவில் தரப்படுகிறதே தவிர, பிற பால் பொருள்களுக்கு தரப்படவில்லை. அவை அதிக விலைக்குத் தான் விற்பனை செய்யப்படுகின்றன.

திருட்டுத்தனம்

நவம்பர் மாதத்துடன் இந்த தள்ளுபடி ரத்து செய்யப்படும் நிலையில், டிசம்பர் மாதம் முதல் ஆவின் நெய், பனீர் ஆகியவற்றின் விலை மீண்டும் உயர்த்தப்படும். திமுக அரசின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் நடத்தும் இந்த நாடகங்கள் அப்பட்டமான திருட்டுத்தனம் ஆகும். இதன் மூலம் மக்களை ஏமாற்றி விடலாம் என்று திமுக அரசு நினைத்தால், அவர்களுக்குத் தான் தோல்வி கிடைக்கும். வரும் தேர்தலில் திமுக அரசின் திருட்டுத்தனத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 23, 2025 10:49

சிறுபான்மையின மக்கள் பால் பொருட்கள் அதிகமாக பயன்படுத்த மாட்டார்களோ என்னவோ. அதனால் கூட விலையை குறைக்காமல் இருக்கலாம்.


பாலாஜி
செப் 23, 2025 08:43

மருத்துவ தொழிலை செய்யாமல் தினமும் பல நாடகங்களை நடத்துகிறார் அன்புமணி.


Anantharaman Srinivasan
செப் 22, 2025 23:00

ஆவின் பொருள் விலையை குறைக்காமல் ஏமாற்று நாடகம். உடனே 1915 போன் போட்டு புகார் கொடுங்க..


Vasan
செப் 22, 2025 21:46

அட போங்க அன்புமணி சார், ஏன் இந்த விஷயத்தை இப்பவே போட்டு உடைச்சீங்க ? இந்த விஷயத்தை அப்படியே கண்டுக்காம இருந்து, தேர்தல் நேரத்துல வெளிய எடுத்து உட்ருந்தா அப்படியே திமுக எதிர்ப்பு வோட்டு ஒங்களுக்கு வந்து விழுந்திருக்கும். அது நீங்க எந்த கூட்டணியில ஒட்டிக்கிட்டு இருக்கீங்களோ அவங்களுக்கு உபயோகமா இருந்திருக்கும்.


raj
செப் 22, 2025 21:19

22 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வரும் போது பால் விலை குறைப்பதற்கு உண்டான அறிவிப்பை இன்று மாலை வெளியிட்டுள்ளனர்.


V Venkatachalam
செப் 22, 2025 21:06

இதெல்லாம் நடைமுறையில் சின்ன விஷயம். ஒண்ணுக்கும் கவலைப்பட மாட்டான்கள். பொதுமக்களும் தலை விதியே ன்னு போய்டு வாங்க. இன்னும் ஏதாவது புரட்சிகரமான திட்டங்களை அறிவித்து மக்களை குஷிப்படுத்திடலாம். நாளைக்கு உ.பீஸ் எல்லாம் கோரஸ் பாட்டு. ஜமாய்ச்சுடுவானுங்க..விலை யேற்றமாவது மண்ணாங்கட்டியாவது.


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 22, 2025 20:52

4.5 சதவீத கொழுப்பு சத்து கொண்ட பால் சென்னையில் லிட்டருக்கு 44 ரூபாய் . 3.5 சதவீத கொழுப்பு கொண்ட பால் கோவையில் லிட்டருக்கு 44 ரூபாய்


duruvasar
செப் 22, 2025 20:04

திருடுற இந்த கூட்டம் இதை தொடர்ந்து செய்யும்.


gopalakrishnan
செப் 22, 2025 20:00

உண்மை. ஆவின் பொருள்கள் ஒன்றின் விலையும் குறைக்கப்படவில்லை. ஏமாற்று வேலை.


sankaranarayanan
செப் 22, 2025 18:25

ஆவின் பால் விலை குறைக்கப்படுமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை