உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜனநாயக ரீதியாகப் போராட அனுமதி வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

ஜனநாயக ரீதியாகப் போராட அனுமதி வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஜனநாயக ரீதியாகப் போராட அனுமதி வழங்க வேண்டும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை தொடர்பான நிகழ்வுகளில், ஹிந்து மத விரோதமாகச் செயல்படும் அமைப்புகளைக் கண்டித்தும், பாரபட்சமாகச் செயல்படும் தி.மு.க., அரசைக் கண்டித்தும், ஆலயத்தின் புனிதத்தைக் காக்க இன்று நடைபெறவிருந்த போராட்டத்தைத் தடுக்க, மதுரை மாவட்டம் முழுவதும் திமுக அரசு 144 தடைவிதித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0k7o0rzj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், தமிழகம் முழுவதுமே, 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது போல, பா.ஜ., விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் பென்டகன் ஜி. பாண்டுரங்கன், கோயம்புத்தூர் நகர மாவட்டத் தலைவர் ரமேஷ், தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் கு. சரவணகிருஷ்ணன், சேலம் நகர மாவட்டத் தலைவர் T.V. சசிக்குமார், மற்றும் பா.ஜ., சகோதரர்கள் என பலரையும் கைது செய்தும், வீட்டுக் காவலில் வைத்தும், ஜனநாயக விரோதமாக நடந்து கொள்கிறது தி.மு.க., அரசு.அனைத்துக்கும் ஒரு எல்லை உண்டு. தி.மு.க., அமைச்சருக்கு ஒரு நியாயம், பொதுமக்களுக்கு ஒரு நியாயமா? பொறுமையும், சகோதரத்துவமும் கொண்ட தமிழக மக்களைச் சீண்டிக் கொண்டே இருக்கும் தேவையற்ற நடவடிக்கைகளுக்குத் துணைசெல்வதை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். உடனடியாக, கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிப்பதோடு, ஜனநாயக ரீதியாகப் போராட அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Laddoo
பிப் 04, 2025 21:24

அண்ணே இப்போ நடப்பது ஜனநாயகமே அல்ல. இப்போ நடப்பது பண க்ரோத கட்டு அரசியல். விஷத்தை விஷத்தால் மட்டுமே வேரறுக்க முடியும் நீங்கள் இப்போ போராட்ட அரசியலில் இறங்க வேண்டிய நேரமிது


guna
பிப் 04, 2025 17:53

திராவிடம்...திருட்டு திராவிடம் இரண்டையும் சீமான் ஏற்கனவே கழுவி ஊற்றிவிட்டார்....இது போதாதா கொத்தடி


V வைகுண்டேஸ்வரன்
பிப் 04, 2025 16:40

இப்போது எல்லா "திராவிடர்களும்" இந்துக்கள் ஆகி விட்டீர்களா? திரவிஷம், திருட்டு திராவிட என்று உங்களைத் திட்டி அவமானப் படுத்தியவர்கள் இப்போது திராவிட என்ற வார்த்தை யை சொல்லாமல், இந்துக்கள் என்று சொல்லி உங்களைத் தெருவில் இறக்கும் ஆரியர்களை அடையாளம் தெரிகிறதா? அவர்களின் சதித் திட்டம் புரிகிறதா? நீங்கள் வேண்ணா பாருங்க, "அவங்க ஆளுங்க" யாரும் இன்று ஆர்ப்பாட்டம் செய்ய வர மாட்டார்கள்.


Karthik
பிப் 04, 2025 16:13

ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றினைந்து போராடினால்தான் உண்டு.. இல்லையேல்.. திருப்பரங்குன்றம் இனி சினிமாவில் வந்த அத்திப்பட்டி கதைதான்.


sridhar
பிப் 04, 2025 14:27

அண்ணாமலையும் போராட்டத்தில் இறங்க வேண்டும். வெறும் அறிக்கை போதாது . ஹிந்துக்களுக்கு சோதனையான சமயத்தில் நேரடியாக இவர் களத்தில் இறங்கவேண்டும் என்று எதிர்பார்கிறோம்.


Kasimani Baskaran
பிப் 04, 2025 14:18

இந்து தர்மமான சனாதனத்தை ஒழிக்க வந்த தீம்க்கா ஆட்சியில் ஜனநாயகமா. நல்ல காமடி.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 04, 2025 14:07

16000 கோடி கல்விக்கடனில் வெறும் 48 கோடி ரத்தா ன்னு கிம்ச்சை அரசை கேக்குறீங்களே... மீதியை உங்க பணக்கார தில்லி தலைவர்கள் அடைக்க மாட்டாங்களா ?? மன்னர் குடும்பத்தை ரெயிடு உடக்கூட துணிவில்லை .... மனமில்லை ...


Oru Indiyan
பிப் 04, 2025 13:22

இந்த அரசு ஒரு அரக்கர்களின் அரசு. இப்போது ஒரு சூரசம்ஹாரம் 2.0 தேவை. நவாஸ் கனி போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களை கழுவில் ஏற்ற வேண்டும்.


Madras Madra
பிப் 04, 2025 13:02

முருகனின் பக்தர்களை துன்புறுத்துவது திமுக வின் சாதனை அது விடியலுக்கு வேதனையாக முடியும் மத சார்பற்ற ஜனநாயகம் தீமையை விளைவிக்கும் என்பது நிரூபணம்


ஆரூர் ரங்
பிப் 04, 2025 12:43

முழு திருப்பரங்குன்றம் மலையும் முருகனுக்கே உடைமையானது என்பது கோர்ட் இறுதித் தீர்ப்பல்லவா. எனவே கோர்ட் அந்த சாயபு தர்ஹாவை மலையிலிருந்து வேறிடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும். அயோத்தி போன்ற பெரும் போராட்டம் தேவைப்பட்டாலும் ஒருங்கிணைவோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை