உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆவண எழுத்தர் தேர்வுக்கு வயது வரம்பு; அரசின் இன்னொரு அநீதி: ராமதாஸ் குற்றச்சாட்டு!

ஆவண எழுத்தர் தேர்வுக்கு வயது வரம்பு; அரசின் இன்னொரு அநீதி: ராமதாஸ் குற்றச்சாட்டு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் 26 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆவண எழுத்தர் உரிமத் தேர்வை வயது வரம்பு இல்லாமல் உடனடியாக அரசு நடத்த வேண்டும் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்களை தயாரித்து வழங்குவதற்கான ஆவண எழுத்தர் உரிமம் வழங்குவதற்கான தேர்வுகள் 1998ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 26 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. ஆவண எழுத்தர் உரிமம் பெறுவதற்கான தகுதியும், அனுபவமும் பெற்ற 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வுக்காக காத்திருக்கும் நிலையில், அதை நடத்த தமிழக அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதது கண்டிக்கத்தக்கது.

ஆவண எழுத்தர்

தமிழகத்தில் கடைசியாக 1998ம் ஆண்டில் ஆவண எழுத்தர் உரிமத் தேர்வு நடத்தப்பட்ட பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதன் பயனாக சார்பதிவாளர் அலுவலகங்களின் எண்ணிக்கை 589 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களில் எண்ணிக்கை 5,141 ஆகவே உள்ளது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வேறு பணி, வயது முதிர்வு, உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்போது பணி செய்யவில்லை. அதனால் ஒரு பதிவாளர் அலுவலக எல்லையில் சராசரியாக ஐந்துக்கும் குறைவாக ஆவண எழுத்தர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்.

காரணம் என்ன?

தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களில் பதிவு செய்யப்படும் சொத்து மற்றும் பிற ஆவணங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஆனால், அவற்றை எழுதித் தரும் அளவுக்கு ஆவண எழுத்தர்களின் எண்ணிக்கை உயரவில்லை. அதற்கு காரணம் குறிப்பிட்ட இடைவெளியில் ஆவண எழுத்தர் உரிமத் தேர்வுகள் நடத்தப்படாதது தான். போதிய எண்ணிக்கையில் ஆவண எழுத்தர்கள் இல்லாததால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, அரசுக்கு வரவேண்டிய வருவாயும் குறைகிறது. ஆவண எழுத்தர் உரிமத் தேர்வுகளை நடத்தி உரிமம் வழங்குவதால் அரசுக்கு எந்த செலவும் ஏற்படாது. ஆனாலும், ஆவண எழுத்தர் உரிமத் தேர்வுகளை நடத்த தமிழக அரசு தயங்குவதற்கான காரணம் தெரியவில்லை.

அநீதி

ஆவண எழுத்தர்களின் பற்றாக்குறையை உணர்ந்து கொண்ட தமிழக அரசு, அதற்கான தேர்வு விரைவில் நடத்தப்படும்; பத்திரப் பதிவுத்துறை தலைவர் அலுவலகம் மூலம் இந்தத் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த 2022ம் ஆண்டில் அறிவித்தது. ஆனால், அதன்பின் இரு ஆண்டுகள் ஆகியும் அந்தத் தேர்வு நடத்தப்படவில்லை. அதை விட தமிழக அரசு செய்துள்ள இன்னொரு பெரிய அநீதி ஆவண எழுத்தர் தேர்வில் பங்கேற்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பு தான். 26 ஆண்டுகளாக ஆவண எழுத்தர் உரிமத் தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான அதிகபட்ச வயது 35 ஆகவும், பிற வகுப்பினருக்கான வயதுவரம்பு 33 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயன் கிடைக்காது

ஆவண எழுத்தர் உரிமத்திற்காக காத்திருப்பவர்களின் குறைந்தபட்ச வயதே 40 ஆகும். அவர்களில் பலர் 55 வயதைக் கடந்து விட்டனர். இத்தகைய சூழலில் அதிகபட்சம் வயது 33 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டிருப்பதன் மூலம், ஆவண எழுத்தர் உரிமத்திற்காக காத்திருக்கும் எவருக்கும் பயன் கிடைக்காது. எனவே, அனைத்துத் தரப்பினரின் நன்மை கருதி தமிழ்நாட்டில் ஆவண எழுத்தர் உரிமத்திற்கான தேர்வை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்; அதுமட்டுமின்றி, ஆவண எழுத்தர் உரிமத் தேர்வுக்கான வயது வரம்பை நீக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

gmm
ஆக 26, 2024 15:13

பத்திர ஆவணங்கள் ஆன்லைன் மூலம் முக்கிய விவரங்கள் பதிவு செய்யும் போது பிழைகள் குறையும். மூல பத்திர விவரம், முந்தய பத்திர விவரம் சுருக்கம் பதிய வேண்டும். புதிய பத்திர கிரயம், அடமானம் போன்ற உட் பிரிவு விற்பவர், வாங்குபவர், விலை, பட்டா எண் பரப்பு, எல்லை போன்ற முக்கிய விவரங்களுக்கு profile உருவாக்கி, பதிவு செய்து, எண் உருவாக்கி, பத்திர பதிவு மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே பத்திரங்களை 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். அறிவாலயம், சின்னம்மா போயஸ் வீடு, தைலயபுரம் போலி பதிவில் சிக்கிவிடும். இது நடைமுறைக்கு வர மத்திய அரசு கொள்கை வகுக்க வேண்டும். எதிலும் வயது வரம்பு தேவை.


P.G.SURYANARAYANAN
ஆக 26, 2024 15:03

I am more than 20 years workin g in this field i am studied upto MA and also both tamil typewriting higher English high speed and 20 years computer experience I am predating documents both English and tamil please consider my qualification and experience give B license sir


gmm
ஆக 26, 2024 13:37

ஆவண எழுத்தாளர் தேர்வும், வயது வரம்பும் அவசியம். இதில் ஏன் சாதி பிரச்சனை. மேலும் சொத்து வழக்கில் எழுத்தர் சேர்க்க வேண்டும். மூல ஆவண விவரம் இல்லாமல் பதியும் போது வழக்கு வரும். பதிவாளர், விற்பவர் படிக்க முடியாது. பத்திர பதிவில் ஏராள மோசடி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை