உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  வேன்களுக்கு விதிமீறி உறுதி தன்மை சான்று வழங்கி அரசுக்கு ரூ.3.72 லட்சம் நிதியிழப்பு: ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு

 வேன்களுக்கு விதிமீறி உறுதி தன்மை சான்று வழங்கி அரசுக்கு ரூ.3.72 லட்சம் நிதியிழப்பு: ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 3 வாகனங்களுக்கு விதிமீறி உறுதிச் சான்றளித்து அரசுக்கு ரூ.3.72 லட்சம் நிதியிழப்பு ஏற்படுத்தியதாக வாகன ஆய்வாளர் கே.விஜயகுமார் 56, மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். காரைக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் 2023 ல் ஆய்வாளராக பணிபுரிந்தார். அக்கால கட்டத்தில் 3 பயணிகள் வேன் உரிமையாளர்கள் (வண்டி எண்: டி.என்., 67 பி.ஜெ.,1729, டி.என்., 18 ஏ.கே., 4768, டி.என்., 54 எஸ் 9055) உறுதி தன்மை சான்று கோரி விண்ணப்பித்தனர். இந்த வேன்களை அக்கால கட்டத்தில் ஆய்வாளர் விஜயகுமார் ஆய்வு செய்தார். விதிப்படி பயணிகளை ஏற்றி செல்லும் வேன் டிரைவருடன் சேர்த்து 13 பயணிகள் அமரும் விதத்தில் மட்டுமே சீட் இருக்க வேண்டும். ஆனால் 3 வாகன உரிமையாளர்கள் பஸ் போன்று டிரைவருடன் சேர்த்து 26 பயணிகள் அமரும் விதத்தில் சீட்களை மாற்றியிருந்தனர். இதுபோன்று வேனை மாற்றி அமைக்க அரசு போக்குவரத்துத் துறை கமிஷனரிடம் அனுமதி பெற வேண்டும். தவறியிருந்தால் வேன்களின் உரிமையாளர்கள் மீது ரூ.3.72 லட்சம் வரை அபராதம் வசூலிக்க வேண்டும். ஆனால் 3 வேன் உரிமையாளர்களிடம் அபராதத்தை வசூலிக்காமல் அனைத்து வேன்களுக்கும் உறுதி தன்மை சான்று அளித்துள்ளார் ஆய்வாளர். இதன் மூலம் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ஜான்பிரிட்டோ, இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ் ஆகியோர் ஆய்வாளர் விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர் தற்போது ஓசூரு வட்டார போக்குவரத்து ஆய்வாளராக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Barakat Ali
டிச 13, 2025 12:27

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் .......


JAYACHANDRAN RAMAKRISHNAN
டிச 13, 2025 10:40

தினம் தினம் வரும் இலஞ்சம் செய்திகள் பார்த்தால் திமுக ஆட்சியில் இலஞ்சம் எந்த அளவுக்கு தலைவிரித்து ஆடுகிறது என்று தெரிகிறது. அரசு அலுவலர்கள் யாரும் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. யாரும் தங்கள் கீழ் உள்ள அதிகாரிகளை கட்டுபாட்டில் வைத்திருப்பதாக தெரியவில்லை. அவரவர் அவரவர் இஷ்டம் போல வந்து சம்பாதித்து கொண்டு உள்ளார்கள். ஆக இங்கு ஆட்சி நடப்பதாக தெரியவில்லை. துக்ளக் தர்பார் நடக்கிறது.


G Mahalingam
டிச 13, 2025 09:24

ஒழுங்காக பங்கு கொடுத்து இருந்தால் இந்த பிரச்னை இருந்து இருக்காது. பங்கு வரும் பங்கு வரும் என்று காத்து இருந்தேன். வரவில்லை. அதனால் கைது.


bmk1040
டிச 13, 2025 08:34

மூன்று இலட்சம் புடிச்சுட்டாங்களா? அப்ப மீதி 97000 கோடி?


Kasimani Baskaran
டிச 13, 2025 07:55

லஞ்சஒழிப்புத்துறைக்கு 3.72 லட்சம் பெரியதா அல்லது 1800 கோடி பெரியதா என்று கேட்டால் பதில் தெரியாது போல.


vaiko
டிச 13, 2025 08:33

அப்படியே நாடு பெரிதா இல்ல அதானி முக்கியமா என்றும் கேளுங்க சாமி.


பெரிய குத்தூசி
டிச 13, 2025 09:40

வருடத்திற்கு 7000 கோடி வருமான வரியாய் வருகிறது. அதானி நிறுவனங்கள் இந்தியாவில் 10லடசம் வேலைகளை இந்தியர்களுக்கும், வெளிநாட்டில் உள்ள அதானி நிறுவனங்களால் 2 லட்சம் வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கிறது. மொத்தம் 12 லட்சம் பேருக்கு வேலை அளித்து அவர்களின் குடும்பத்தில் அதானி விளக்கேற்றுகிறது. நீங்கள் 200 க்கும் பிரியாணிக்கும் கூவுவது யாருக்கு பிரயோசனம். கடைசிவரைக்கும் நீங்கள் சுவரொட்டி ஒட்டிக்கிட்டு குவாட்டர் அடிச்சி பிரியாணி சாப்பிடவேண்டியதுதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை