உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சனாதனம் பற்றிய உதயநிதி பேச்சுக்கு எதிரான வழக்கு; சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி

சனாதனம் பற்றிய உதயநிதி பேச்சுக்கு எதிரான வழக்கு; சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி

புதுடில்லி; சனாதன ஒழிப்பு தொடர்பாக உதயநிதி பேச்சுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி, டெங்கு, மலேரியா போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று பேசினார். அவரின் பேச்சு இந்துக்களுக்கு எதிராக இருக்கிறது என்று பா.ஜ., மற்றும் இந்து இயக்கங்கள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்தன. அதே நேரத்தில் தான் பேசியதில் எந்த தவறும் இல்லை, அதற்கான விளைவுகளை சந்திக்க தயார் என்று உதயநிதியும் கூறி இருந்தார். சனாதன பேச்சு குறித்து உதயநிதிக்கு எதிராக உத்தரப்பிரதேசம், பீகார், ஜம்மு காஷ்மீர், மஹாராஷ்டிரா என பல மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டது. ஜெகநாதன் உள்ளிட்ட 3 பேர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி பெல்லா திவேதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறிய அமர்வு, அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

K V Ramadoss
ஜன 29, 2025 01:08

உச்ச நீதி மையம், தன் மதிப்பை இழந்துவிட்டது..


Narayanan
ஜன 28, 2025 13:54

அது என்ன உச்சநீதிமன்றமா அல்லது.... பணம் பதினொன்னும் செய்கிறது .


Mohan
ஜன 28, 2025 09:58

சபாஷ் மொதல்ல உச்ச நீதிபதிகளை விசாரிக்கனும் பூரா பயலும் காசுக்கும், மதத்துக்கும் அடிமை ஆயிட்டாங்க போலயே. ஆளுக்கு ஒரு நீதி ..விளங்குமா ...


Ksridharan
ஜன 27, 2025 23:38

is it possible to appeal for a higher bench? if not let some legal practitioner explain why ?


venugopal s
ஜன 27, 2025 22:51

கடைசியில் இதுவும் புஸ்வாணம் ஆகிவிட்டதே!


Thiyagarajan S
ஜன 27, 2025 21:40

வேறு மதங்களை ஒழிக்கிறேன் என்று சொல்லி இருந்தால் இந்நேரம் காவல்துறை ராணுவம் நீதித்துறை எல்லாம் ஒன்று சேர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கும். நாட்டில் கலவரமும் நிகழ்ந்திருக்கும். அப்படி நிகழவில்லை என்பதால் தான் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது போல் இருக்கிறது. வரவர நீதிமன்றம் கூட ஹிந்துக்களை வன்முறையாளராக்க முயன்று கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்...


RAMAKRISHNAN NATESAN
ஜன 27, 2025 19:46

விக்டிம் தரப்பு மனுவாகக் கொடுத்த பிறகு செந்தில் பாலாஜி எப்படி மந்திரியாகப் பொறுப்பேற்றார் என்று இரண்டுமுறை கேட்ட உச்சநீதிமன்றம் அதன் பிறகு அமைதி காக்கிறது ..... கொலீஜியம் முறை, ஹிந்து விரோத, தேசவிரோத கொள்கைகளைக் கொண்டுள்ளதா ?


sridhar
ஜன 27, 2025 19:42

விந்தையான நீதி . சனாதனத்துக்கு பதில் வேறு மதத்தை ஒழிப்போம் என்று சொல்லி இருந்தால் தீர்ப்பு என்னவாக இருந்திருக்கும். சபரி மலையில் ஆணும் பெண்ணும் சமம் , பெண்கள் போகலாம் என்று சொன்ன உச்சா நீதிமன்றம் மசூதிக்கு பெண்கள் போகலாமா என்ற கேள்விக்கு பதில் சொல்லாது . நீதி எல்லோருக்கும் பொது அல்ல.


kantharvan
ஜன 28, 2025 09:22

மசூதிக்குள் பெண்கள் செல்ல எங்கே எப்போது தடை இருந்தது??


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 27, 2025 19:34

வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி பெல்லா திவேதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. தள்ளுபடி செய்து திராவிடர்குலத்த தோன்றலைக் காப்பாற்றிய பிராம்மண நீதிபதிக்கு நன்றி .... த்விவேதி என்பதே சரியான வம்சப்பெயர் .... அதற்கு மூன்று வேதங்களைக் கற்றவர்கள் என்று பொருள் .... நன்றி இணையத்தகவலுக்கு ...


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 27, 2025 22:21

மூன்றல்ல ...... இரண்டு ......


VENKATASUBRAMANIAN
ஜன 27, 2025 19:00

நீதிமன்றம் என்ன செய்கிறது. விசாரிக்காமல் தள்ளுபடி செய்ததா. விசாரணை பொதுவெளியில் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை உருவாகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை