உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கைவினை திட்டத்துக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்

கைவினை திட்டத்துக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்

சென்னை:தமிழக அரசின் கைவினை கலைஞர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்துக்கு, விண்ணப்பிக்கும் வசதி நேற்று துவங்கியது.கட்டட வேலை, நகை செய்தல், தையல் வேலை உள்ளிட்ட, 25 தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர் பயன் பெற, கலைஞர் கைவினை திட்டத்தை, அரசு துவக்கியுள்ளது. இத்திட்டத்தில், பயனாளிக்கு, 3 லட்சம் ரூபாய் வரை பிணையற்ற கடன் வழங்கப்படுகிறது. அதிகபட்சம், 50,000 ரூபாய் வரை மானியமும், 5 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். இது தவிர, திறன் மேம்பாடு பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தில் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் வசதி, தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் இணையதளத்தில் நேற்று துவங்கியது. விண்ணப்பிக்க, 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். நேற்று மாலை, 3:30 மணி வரை, 100 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை