மேலும் செய்திகள்
சண்டையின் ரகசியம் இது தானா ?
10-Jul-2025
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் நேற்று துவக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் முகாம்களில் பங்கேற்றனர். இத்திட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். வீடுதோறும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்வதற்கும், முகாம்களை ஏற்பாடு செய்வதற்கும், ஒன்றியம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒருங்கிணைப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.சட்டசபை தேர்தல் நெருங்குவதால், விண்ணப்பிக்கும் நபர்களை ஏதாவது ஒரு திட்ட பயனாளியாக சேர்க்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதையறிந்து, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்க துவங்கியுள்ளனர். திட்டத்தை பற்றி பொதுமக்கள் அறியவும், முகாம் நடக்கும் இடங்களை தெரிந்து கொள்ளவும், வழங்கப்படும் சேவைகள் குறித்த விபரம் அறியவும், www.ungaludanstalin.tn.gov.in என்ற இணையதள சேவையும், தமிழக அரசால் துவக்கப்பட்டு உள்ளது.
10-Jul-2025