மேலும் செய்திகள்
மாணவி பாலியல் கொடூரம் : ஹிந்து முன்னணி கண்டனம்
05-Nov-2025
கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது, தமிழகத்தை தலைகுனிய வைத்திருக்கிறது. ஏற்கனவே, சென்னையில் அண்ணா பல்கலை மாணவி மீது நடந்த குற்றத்தில், பல மாதங்கள் கடந்தும், அதில் உள்ள மர்மங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. பெண்களை போற்றும் தமிழகத்தில், கூட்டு பாலியல் பலாத்காரம் என்ற கொடூரம் நடப்பது எத்தகைய அவமானம். 'நிர்பயா நிதி'யை பெற்று வாங்கிய, பிங்க் மகளிர் ரோந்து வாகனங்கள் என்னவாகின? மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள், பெண்கள் பாதுகாப்பு திட்டங்கள் எல்லாம், ஏட்டளவில் மட்டுமே இருக்கிறதா? தமிழகம் முழுதும் பெருகி வரும் கஞ்சா; பண்பாட்டை சீர்குலைக்கும் இரவு விருந்து, ஹேப்பி ஸ்டீரிட் போன்றவை தான் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு காரணம். திரைப்படங்களும், சமூக பொறுப்புணர்வற்ற சமூக ஊடகங்களும் துாண்டுதலாக உள்ளன. போதையை ஒழிக்க, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற குற்றங்களை தடுக்க, அனைவருக்கும் பொறுப்பு உள்ளது என்பதை உணர வேண்டும். - காடேஸ்வரா சுப்ரமணியம், தலைவர், ஹிந்து முன்னணி
05-Nov-2025