உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈ.வெ.ரா., பற்றி பேசி ஓட்டு கேட்க தயாரா?: சீமான்

ஈ.வெ.ரா., பற்றி பேசி ஓட்டு கேட்க தயாரா?: சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை பொங்கலன்று அறிவிக்கப் போவதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.அவரது பேட்டி:ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை பொங்கலன்று அறிவிப்போம். ஏற்கனவே, ஆறு தேர்தல்களில் விவசாயி சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம். தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டு, முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் மீண்டும் மீண்டும் தவறு செய்கின்றனர். வள்ளலார், வைகுண்டர் போல ஈ.வெ.ரா., என்ன புரட்சி செய்தார்? ஆதாரத்தை பூட்டி வைத்து, 'ஆதாரத்தை தா' என்றால் எங்கே போவது? ஈ.வெ.ரா., பற்றி பேசி தேர்தலில் ஓட்டு கேட்க எந்த கட்சியாவது தயாரா?மண்ணுக்கும், மக்களுக்கும் நல்வாழ்வுக்கும் பாடுபட்ட மக்கள் இருக்கின்றனர். அந்த அடையாளங்களை ஒற்றை முகத்தை வைத்து மூடி மறைக்க பார்க்கிறீர்கள். பெண்ணிய உரிமை, மொழி மீட்பு, ஜாதி ஒழிப்பு, சமூக நீதி எல்லாவற்றிற்கும் ஆன ஒரே தலைவர் பிரபாகரன். அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில், நாங்களும் தொடர்ந்து போராடுவோம். இந்த விவகாரத்தில் தொடர்ந்து போராடி வரும் அ.தி.மு.க.,வுக்கு வாழ்த்துகள்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Mediagoons
ஜன 13, 2025 01:38

ஈ.வெ.ரா. போல வள்ளலார், வைகுண்டர் என்ன புரட்சி செய்தார்கள். இவர் என்ன புரட்சி செய்தார்?. வள்ளலார், வைகுண்டர் பற்றி பேச இவருக்கு என்ன அருகதை உள்ளது ?


Mediagoons
ஜன 13, 2025 01:36

தமிழினவாதம், இந்துமதவாதத்தை பற்றித்தான் ஓட்டுகேட்பார்கள்.


Priyan Vadanad
ஜன 13, 2025 00:30

சீமான் ஒரு சீரியஸ் காமெடியன்.


Priyan Vadanad
ஜன 13, 2025 00:28

இதே கருத்தை அண்ணாமலை சொல்லியிருந்தால் பக்கம் பக்கமாய் கத்திரி படாமல் பதிவாகியிருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை