உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அறிவாலயம் முற்றுகை; அண்ணா சாலையில் மறியல் போலீசாரை திணறடித்த துாய்மை பணியாளர்கள் கைது

அறிவாலயம் முற்றுகை; அண்ணா சாலையில் மறியல் போலீசாரை திணறடித்த துாய்மை பணியாளர்கள் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை மாநகராட்சியில் மீண்டும் பணி வழங்க கோரி, அறிவாலயம், கருணாநிதி நினைவிடம், அண்ணா சாலை என, அடுத்தடுத்து இடங்களில் போராட்டம் நடத்திய 1,013 துாய்மை பணியாளர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.சென்னை மாநகராட்சியின் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணி நிரந்தரம், மாநகராட்சியில் மீண்டும் பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, துாய்மை பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.,வின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தை, நேற்று காலை முற்றுகையிட முயன்றனர். போலீசார் தடுத்ததால் அறிவாலயத்தின் பின்புறம் உள்ள ஸ்கீம் சாலை வழியாக திடீரென நுழைந்தனர். தவிர ஏராளமான பெண் பணியாளர்கள் அண்ணா சாலையின் நடுவே அமர்ந்தும், படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீஸ் வாகனத்தின் முன் சக்கரத்தில், தன் தலையை வைத்து, பெண் துாய்மையாளர் படுத்துவிட்டார்.மற்றொரு பெண் திடீரென மயக்கமடையவே, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல் மற்றொரு குழுவினர், மதியம் 2:00 மணிக்கு, மெரினா காமராஜர் சாலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்திலும், அண்ணா சாலை ஓமாந்துாரார் அரசு மருத்துவமனையிலும் அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீசார் அவர்களை கட்டுப்படுத்தவும், போக்குவரத்தை சீர்செய்யவும் திணறினர்.இரவு 10:30 மணி அளவில் ரிப்பன் மாளிகை அருகே துாய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் இறங்கினர். மொத்தம் 1,100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பெண் துாய்மை பணியாளர்கள் கூறியதாவது: இந்த வேலையை நம்பி தான் எங்களுடைய வாழ்க்கையே இருக்கிறது. இந்த வேலையும் எங்களுக்கு இல்லை என்றால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுவோம். ஐந்து மாதங்களாகப் போராடியும், யாரும் எங்கள் மீது துளியும் அக்கறை காட்டவில்லை. தமிழக முதல்வரே ஏழை, எளிய துாய்மை பணியாளர்களின் பிரச்னையை பேசி தீர்க்க முன்வாருங்கள்இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

நாஞ்சில் நாடோடி
டிச 31, 2025 11:37

தூய்மை பணியாளர் என்று பெயர் வைத்தவர் வாய் ஜால வித்தகர் கருணாநிதி ...


தர்மா
டிச 31, 2025 11:25

காம்ரேட்டுகளின் வேலை என்னவென்றால் Nokia, Boxconn, Hyundai, போன்ற அயல் நிறுவனங்களில் தேவையற்ற போராட்டம் செய்து பெட்டி வாங்குவதுதான்.


Rajarajan
டிச 31, 2025 11:07

முதலில் அரசியல் லாபத்துக்காகவும், ஒரு குறிப்பிட்ட கட்சியின் அபிமானி என்பதற்காகவும், அனைவரையும் அரசு ஊழியராக்கவேண்டும், அவர்களுக்கு வாரி வாரி கொடுக்கவேண்டும் என்று நினைப்பதை தவிர்க்க வேண்டும். அப்படியெனில், உலகம் தோன்றிய காலத்திலிருந்து, இன்றுவரை தனியார் நிறுவனங்களே இல்லையா ?? அதில் எவரும் பணி செய்து முன்னேறவில்லையா ?? அவர்களுக்கு மட்டும் வாழ்வாதாரம் எங்கிருந்து வருகிறது ?? அவர்கள் வரி கட்டுவதில்லையா ?? விலைவாசியை சந்திப்பதில்லையா ?? தங்கள் வாரிசுகளை படிக்கவைத்து முன்னேற்றுவதில்லையா ?? நாம் பொருட்கள் வாங்கும் கடைகளை நடத்துபவர்கள் / மருத்துவமனை ஊழியர்கள் / வாகனம் ஓட்டுபவர்கள் / கல்விநிலையம் நடத்துவோர் எல்லாம் தனியார் இல்லையா ??


Rajagopalan Narasimhan
டிச 31, 2025 11:23

மிகவும் சரி ஆனால் இங்கு சம்பளம் குறைக்கப்படுகிறது


T.Senthilsigamani
டிச 31, 2025 10:57

தொழிலாளர்கள் போராட்டம் என்றாலே காலம் காலமாக தமிழக மக்களின் நினைவுக்கு வருவது - எரிமலை எப்படி பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம் நாம் கண்ணீர் விற்கும் ஜாதி இனி அழுதால் வராது நீதி ரத்தம் இங்கே வேர்வையாக சொட்டி விட்டது உயிர் வற்றி விட்டது என்ற புரட்சி பாடலை பாடியபடி சிவப்பு சட்டை தோழர்களாய் தோளோடு தோள் கோர்த்து அரசை எதிர்த்து கோஷம் போடும் கம்யூனிஸ்ட்களை தான். நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகிய பிரதமர்கள் ஆட்சியில் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளை கண்டித்து போராட்டங்கள் நடத்திய புரட்சி வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள். ஏன் எம்ஜியார், ஜெயலலிதா, கருணாநிதி முதல்வர்கள் ஆட்சிக்காலங்களில் ஊழலை எதிர்த்து கோஷங்கள் எழுப்பி கண்டன ஊர்வலம் நடத்திய இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம். இந்த மாதம் தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய நூறாவது ஆண்டுவிழாவை சென்னையில் பாலன் இல்லத்தில் கொண்டாடியது .ஐயகோ ஐயகோ ஐயகோ ஐயகோ அப்பேர்ப்பட்ட பாரம்பரியத்துக்கு சொந்தக்கார கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் நிற்க என்று திமுகவிடம் கோடிகளில் பெட்டி வாங்கியதோ அவர்களே நூறு முறை ஒப்புக்கொண்டு விட்டனர் அதன் கொள்கை /கீர்த்தி / போராட்ட குணம் அதல பாதாளத்தில் சென்று விட்டது .திமுகவின் ஊது கோலாய் சாம்சங் தொழிலாளர் பிரச்சனையில் தொடங்கி எந்த தொழிலாளர் போராட்டத்திற்கும் வலுவான கண்டனங்கள் தெரிவிப்பது இல்லை .இப்போது கூட தூய்மை பணியாளர்கள் பிரச்சனையில் ,வளவள கொழகொழ உப்புக்கு சப்பாணியாய் அறிக்கை விட்டு திமுகவை மயிலிறகால் சாமரம் வீசுகிறார்கள். இந்த சிவப்பு தாலிபான்கள் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என கூற மட்டுமே நேரம் உள்ளது .தமிழகத்தின் சாபக்கேடு இந்த போலி மதச்சார்பின்மை ,போலி தொழிலாளர் உரிமைக்குரல் கொடுக்கும் இந்த கம்யூனிஸ்ட்கள் .இதனை உழைக்கும் வர்க்கம் உணரும் காலம் வரும் .அப்போது கம்யூனிசம் தமிழகத்தில் காணாமல் போகும் .இது நடக்கும் .நடந்தே தீரும்


ஜனனி
டிச 31, 2025 10:24

சிறுபான்மையினர் பிரச்சினை ஓட்டு மொத்த திமுக அரசாங்கமே ஓடி ஓடி வேலை செய்வார்கள்.


Haja Kuthubdeen
டிச 31, 2025 10:54

இதான் மத சிந்தனை ...பாவப்பட்ட அந்த மக்களின் பசி போராட்டம் முதலில் உங்களை போன்றோரை பாதித்து உள்ளதா.. அவனும் நம் ரத்தம் என்ற உணர்வாவது வருதா..மத விசயம்னா கொடி பிடிக்க கோர்ட் ஏற ஆயிரம் இயக்கத்து காரன் ஓடோடிவரான்.இன்றைக்கு அந்த மக்கள் மட்டுமே தெருவில் இறங்கி போடுறான். நீங்களெல்லாம் எங்கே.. செய்தி படிப்பதோடு சரி...இருக்கும் மணிதனை பற்றி போராட எவன் வரான் இங்கே...


நான்சி
டிச 31, 2025 10:20

துப்பு கெட்ட அரசாங்கம். இவர்களுடைய சிறு பிரச்சினை தீர்க்க கூட முடியவில்லை.


Haja Kuthubdeen
டிச 31, 2025 10:16

அழிவின் ஆரம்பம்...தூய்மை பணியை தனியார்களிடம் கொடுத்து இதனால் அரசுக்கு என்னதான் லாபமோ? அந்த பணத்தை இந்த கடை நிலை பணியாளர்களுக்கே கொடுக்கலாமே. ஒரு சிறிய விசயத்தை அரசு கவுர பிரட்சினையா நினைக்குதா. அவர்களின் பணி மகத்தான ஒன்று என்பதை நாம் ஏன் நினைப்பதே இல்லை. பாதிக்கப்படும் அவர்களுக்கு நாம் என்ன செய்றோம். அந்த மக்களுக்கு ஆதரவாக சென்னையில் ஒருத்தனுமே இல்லையா. மத பிரட்சினை என்றால் உடனே ஆர்பாட்டம் போராட்டம் நீதிமன்றம்.. மறியல்.. என்று எத்தனை இயக்கம் முண்டியடித்து வருகிறார்கள்.. மனசாட்சியே இல்லையா நமக்கு.. அரசுக்கும் அக்கரை இல்லை மாக்களாகிய நமக்கும் அக்கரை இல்லை...எவனோ சாகட்டும் வேடிக்கை பார்ப்போம் என்ற மனநிலையை விட்டு மனிதனா மாறுங்கள்.


sundarsvpr
டிச 31, 2025 09:56

இதனை புரிந்துகொள்ளும் நிலையில் காவல் துறை ஏன் இல்லை?


Haja Kuthubdeen
டிச 31, 2025 10:56

காவல் துறையா அரசு...அவர்கள் என்ன செய்ய முடியும்.


sampath, k
டிச 31, 2025 09:23

All groups of employees are threatening the Government to get more benefits aiming election


Amar Akbar Antony
டிச 31, 2025 10:06

ஏன் கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் இப்போ நீங்க சொல்கிற குற்றம் கூறுகிற குரூப்ஸ் யீ பி எஸ் முதல்வரை மிரட்டியபோது உங்க சுடாலின் விடியல் தருவதாக உருட்டினாரே?


Kumar Kumzi
டிச 31, 2025 09:23

இந்துமத ஜென்ம விரோதி


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி