உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்சோ வழக்கில் கைது; பள்ளி முதல்வர், தாளாளருக்கு வந்தது நெஞ்சு வலி

போக்சோ வழக்கில் கைது; பள்ளி முதல்வர், தாளாளருக்கு வந்தது நெஞ்சு வலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி: மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக விசாரித்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் பள்ளி முதல்வர் மற்றும் தாளாளரை கைது செய்தனர். நெஞ்சு வலிப்பதாக கூறியதால், இருவரையும் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சல்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருப்பவர் பொன் சிங். இவர், பள்ளியில் படிக்கும் மாணவியருக்கு மது வாங்கிக் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர். தலைமறைவாக இருந்த பொன் சிங், கோவையில் கைது செய்யப்பட்டார்.இந்த சம்பவம் பற்றி தெரிந்திருந்தும், பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, கிராம மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், பள்ளி தாளாளர் செய்யது அகமது , முதல்வர் சார்லஸ் ஸ்வீட்லி ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட நிலையில் இருவருமே ஒரே நேரத்தில் நெஞ்சு வலிப்பதாக கூறி துடிதுடித்தனர். வேறு வழியில்லாத போலீசார், இருவரையும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.சிகிச்சைக்கு பின்னர் இவர்களை கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைக்க போலீஸ் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Ruban Samuel
நவ 15, 2024 22:49

இந்த பள்ளி அரசு உதவி பெரும் பள்ளி இல்லை. கொஞ்சமும் யோசிக்காமல் குறை கூறிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.


Tetra
நவ 15, 2024 17:28

ஐயா இருவரும் ஹிந்துக்கள் அல்ல. அதனால் வராத நெஞ்சு வலியும் வந்து விடும். அதனால் ஜாமீன் கிடைத்தது . விட்டது வழக்கு. கழகங்கள் ஆட்சியில் எதுவும் நடக்கும். நிர்மலா தேவி ஞாபகம் வருகிறாரா? தீவிர வழக்கு தொடுத்து தண்டனையும் கொடுத்து விட்டார்கள்


Nagarajan Thamotharan
நவ 14, 2024 08:52

அரசு உதவிபெற்று நடைபெறுகிற சிறுபான்மை மத பள்ளிகளில் புனித நூல்களில் உள்ள நல் ஒழுக்க விதிமுறைகளை மீறி திராவிட கொள்கைகளை பயிற்றுவிக்கும் மதமாற்ற கூட்டமாக சிறுபாண்மை பள்ளி கிரிஷிபோ ஆசிரியர்கள் கூட்டம் செயல்படுகின்றனவா என்ற ஐயம் தோன்றுகிறது. திராவிட திருச்சபைகள் முன்னேற்ற கழக 2G அக்கா, கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சர்களும் போதைப்பொருள் விற்பதை ஊக்குவிக்கும் விதமாக அநேக கல்வி நிறுவனங்கள் சுற்றிலும் போதை வஸ்துக்களை விற்க கட்சி நிர்வாகிகள்/தொண்டர்களையே பயன்படுத்தியது பல்வேறு பத்திரிகை செய்திகளில் வருவது வேதனைக்குரிய செயல். விடியல் அரசின் சர்வாதிகாரியின் இரும்புகரம் கொண்ட நடவடிக்கை எப்பொழுது ஆரம்பிப்பார்களோ .......


Ganesun Iyer
நவ 13, 2024 14:14

கூட்டல் குறி உபிஸ்செல்லாம் பக்கத்தை நிரப்பலாம்....


ஆரூர் ரங்
நவ 13, 2024 12:16

சிறுபான்மை காவலர் கனிமொழியின் தொகுதி. அம்புட்டுதான்.


A.Kennedy
நவ 13, 2024 11:24

ஷாநவாசை காணவில்லை கண்டு பிடித்து கொடுப்பவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.


jayaram
நவ 13, 2024 11:06

இவர்கள் நடிப்பதை பார்த்துதான் உலகநாயகன் தன் பட்டத்தை விட்டு கொடுத்தாரோ


Easwar Moorthy
நவ 13, 2024 06:49

ஈராக்கில், பெண்ணின் திருமண வயதை, 18ல் இருந்து 9 ஆக குறைக்க அந்நாட்டு பார்லிமென்ட் முடிவு செய்துள்ளது இவனுக புத்தி அப்படித்தான் இருக்கும்


Matt P
நவ 13, 2024 06:11

ஸ்வீட்ல்லி கொஞ்சம் ஸ்வீட் அதிகம் ஆனவங்க போலிருக்கு. மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்தவரும் ரொம்ப மதுரமானவரா தான் இருக்க முடியும். மங்கையராய் பிறந்திடவே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்று ஒரு புலவர் பாடினமார். மாதவம் செய்து பெறப்பட்டவர்கள் இந்த அளவுக்கு பெருமை பெற்று கொண்டிருக்கிறார்கள்.


Mani . V
நவ 13, 2024 05:42

மொள்ளமாரித்தனம் செய்யும் பொழுது நெஞ்சுவலி வருவதில்லை - நம்ம ஐந்து கட்சி அமாவாசை உள்பட. ஆனால், கைது என்றவுடன் வலி வந்து விடுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை