உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபை கூட்டத்தொடர்: கவர்னர் உத்தரவு

சட்டசபை கூட்டத்தொடர்: கவர்னர் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : கடந்தாண்டு துவங்கிய தமிழக சட்டசபை கூட்டத்தொடரை முடித்து வைத்து கவர்னர் ரவி உத்தரவிட்டு உள்ளார்.தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் கவர்னர் உரையுடன் துவங்குவது வழக்கம். அதன்படி 2023 ஜன., 9 ம்தேதி சட்டசபை கூட்டம் நடந்தது. இதில் அரசு அச்சிட்டு தந்த உரையுடன் சில வார்த்தைகளை கவர்னர் ரவி சேர்த்து பேசியதால், சர்ச்சை எழுந்தது. சபையில் இருந்து பாதிலேயே கவர்னர் வெளியேறினார்.இதையடுத்து, கவர்னருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தாண்டு சட்டசபை கூட்டத்தொடர், பிப்., மாதம் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக, கடந்தாண்டு துவங்கிய சட்டசபை கூட்டத்தொடரை கவர்னர் முடித்து வைப்பதாக அறிவிக்கவேண்டும். புத்தாண்டு துவங்கியும், கவர்னரிடம் இருந்து அறிவிப்பு எதுவும் இல்லை. இந்நிலையில், 2023ல் துவங்கிய சட்டசபை கூட்டத்தொடரை முடித்து வைப்பதாக கவர்னர் ரவி நேற்று அறிவித்துள்ளார்.இதுகுறித்த விவரம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. நடப்பாண்டு முதல் கூட்டத்தை கூட்டுவதற்கு கவர்னரின் ஒப்புதல் பெறவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rengaraj
ஜன 25, 2024 17:46

சட்டசபை மரபு என்று சொல்லி தேவையில்லாத அலுவல்களை குறைக்க வேண்டும். சட்டசபை அலுவல் நேரத்தை கூட்ட வேண்டும். விவாத நேரங்களை அதிகப்படுத்த வேண்டும். அவற்றை முழுவதுமாக நேரடியாக மக்களுக்கு ஒளிபரப்பு செய்யவேண்டும். ஒட்டுமொத்த பிரச்சினைகள் தவிர மாவட்ட ரீதியாக பிரச்சினைகளை பட்டியலிட்டு அவற்றை விவாதிக்கலாம். அனைத்து மாவட்ட பிரச்சினைகளையும் பரீசீலிக்கவேண்டும். மாவட்ட பிரச்சினைகளை சபையில் விவாதிக்கும் சமயம் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் தலைநகரில் இருந்தால் மிகவும் நல்லது.


Narayanan
ஜன 25, 2024 16:07

சேலம் மாநாட்டில் கவர்னர் வேண்டாம் என்று தீர்மானம் இயற்றிவிட்டார்கள் . இப்போ எப்படி கவர்னர் இல்லாமல் செய்துவிடுவார்களா?பொறுத்திருந்து பார்ப்போம் .


rsudarsan lic
ஜன 25, 2024 11:33

இதுபோன்ற அபத்தமான பிரிட்டிஷ் கால சடங்குகளை விட்டுவிட்டு ஒவ்வொரு எம்எல்ஏ சட்டசபையில் என்ன செய்தார் சட்டசபை இல்லாத போது என்ன செய்தார் என்று அறிக்கை தாக்கல் செய்யச்சொன்னால்?


ஆரூர் ரங்
ஜன 25, 2024 10:50

இப்படிச் செய்யாவிட்டால் பழைய கூட்டத்தொடரையே தொடருவார்கள்.. ஆண்டின் முதற் கூட்டம் என்றானால் கவர்னரை உரை நிகழ்த்த அழைக்க வேண்டியிருக்குமே.???? ( பொன்முடி வேறு இல்லை). இப்போ திமுகவுக்கு தர்மசங்கடம்.


வீரபத்திரன்,கருங்காலக்குடி
ஜன 25, 2024 09:22

திமுக உபிஸ்களே போன தடவை மாதிரி ஒங்களோட விடியல் ஆட்சியை புகழ்ந்து பேசுவது போன்ற கதையும், கவிதைகளையும் இந்த முறையும் ஆளுநர் ரவிகிட்ட எழுதி கொடுத்துடாதீங்க அந்த மனுஷன் உங்களை போட்டுத் தாக்குவதற்கு எப்ப எப்பன்னு காத்துக்கிட்டு இருக்காரு இந்த நேரத்தில போயி நானும் ரவுடிதான்னு சொல்லி நீங்களா வாண்டடா வண்டியில ஏறாதீங்க.


sankaranarayanan
ஜன 25, 2024 08:30

ஆளுநர் மாளிகை சென்று தொங்குங்க அவரை சிரம் தாழ்ந்து கைகளைக் கூப்பி நல்ல வார்த்தைகள் கூறி வரவேற்பு செய்யுங்கள் முடிந்தால் இரண்டு காதுகளையும் பிடித்துக்கொண்டு இருவர் இருவராக வரிசை வரிசையையாக சென்று தோப்புக்கரணம் போட்டு வரவேற்பு செய்யுங்கள்


குமரி குருவி
ஜன 25, 2024 08:26

எழுதி கொடுத்ததை படிக்க வேண்டிய ஆளுநர் எழுதி கொடுக்காத விடியல் சீர்கேடுகளை சட்டசபையில்பேசினால் நன்றாக இருக்கும்


raja
ஜன 25, 2024 06:33

ஹா ஹா... திருட்டு திராவிடர்கள்லுக்கு சரியான ஆப்பை செருகுகிறார் ஆளுநர்...


Kasimani Baskaran
ஜன 25, 2024 05:58

கவர்னர் இல்லாமல் கூட்டினால் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்... மா.மி. செபாவை உள்ளே வைத்து பாதுகாக்க முடியாது.. பெரிய சிக்கலாகிவிடும். ஸ்பெயினிலோ அல்லது ஆஸ்த்ரேலியாவில் இருக்கும் பொழுது சிக்கல் வந்தால் என்ன செய்வது...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை