உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் உதவி செயற்பொறியாளர்!

மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் உதவி செயற்பொறியாளர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: திருச்சியில், 'இன்டோர் பேட்மின்டன்' மைதானத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்க, 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின் பொறியாளர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கான்ட்ராக்டர் கைது செய்யப்பட்டனர்.திருச்சி, கே.கே.நகரைச் சேர்ந்த சீனிவாசன், அதே பகுதியில் இன்டோர் பேட்மின்டன் மைதானம் அமைக்க, மும்முனை மின்சார வசதி கேட்டு கே.கே.நகர் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். பரிசீலித்த உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர், 58, அவரிடம் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தர விரும்பாத சீனிவாசன், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., மணிகண்டனிடம் நேற்று முன்தினம் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று மதியம், கே.கே.நகர் மின்வாரிய அலுவலகத்தில், சீனிவாசன் லஞ்சப்பணத்தை, காண்ட்ராக்டர் கிருஷ்ணமூர்த்தி, 34, வாயிலாக பெற்ற போது, சந்திரசேகரை லஞ்சப்பணத்துடன் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணமூர்த்தியும் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

R sampath
பிப் 19, 2025 00:07

வரிப்பணத்தில் மந்திரிகள் கொள்ளை அடிக்கிறார்கள். கீழ் மட்டத்தில் லஞ்சம் தராமல் வேலை நடக்காது.


ரஞ்சனா
பிப் 18, 2025 16:23

இந்தப்பூனையும் பாலைக் குடிக்குமாங்கற மாதிரி போஸ் வேற


Ram pollachi
பிப் 18, 2025 15:30

மேல்மட்டத்தில் டிப்ஸ், கீழ்மட்டத்தில் ஊ.கா (ஊற்சாக காசு) இது மட்டும் கொடுக்க வில்லை என்றால் எந்த வேலையும் நடக்காது முதலாளி தலையில் துண்டு போட்டுக்க வேண்டியது தான்.


Ram pollachi
பிப் 18, 2025 15:24

நல்ல லாபம் மற்றும் செல்வாக்கான வணிக நிறுவனங்கள், உணவகம், தொழில் சாலைகள், விடுதிகள் இன்னும் பலவற்றின் பதிவேடுகளை உயர்மட்ட அதிகாரிகள் வைத்துக் கொள்வார்கள் கேட்டால் போதும் சத்தம் இல்லாமல் வேண்டியதை செய்து தருவார்கள்... ஓட்டை ஒடுசல் பஞ்சத்துக்கு பாட்டு பாடிட்டு இருக்கிறவன் ஃபைல் எல்லாம் கீழ்மட்ட அதிகாரி கையில் இருக்கும் எந்த வேலையும் நடக்காது லஞ்சம் பிச்சு பிச்சு கொடுத்தால் ஆமை வேகத்தில் நகரும்... எல்லாம் விதியை நொந்து கொள்ள வேண்டும். சேவை மற்றும் கலால்வரி, வருமானவரி அலுவலகத்தில் டிப்ஸ் கொடுக்காமல் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள் கடவுளின் நேசர்கள்... பாலக்காட்டில் இருந்து இரயில் மூலம் தினமும் கோவை, திருப்பூர், ஈரோடு வந்து பணி செய்பவர் லஞ்சம் வாங்காதவர்கள்? கேரளாவில் அளவு சாப்பாடு, பிற மாநிலங்களில் அளவில்லா சாப்பாடு இது தான் அவர்களின் தந்திரம். தற்போது வருமானவரி ரீஃபைண்ட்க்கு லஞ்சம் கொடுக்காமல் நம்முடைய வங்கி கணக்கிற்கு ஃபைல் செய்த உடனே வருவது மிகப்பெரிய ஆச்சரியம் இதை நினைத்து பார்த்தேன் கடந்த காலம் கண் முன்னே வந்து நின்றது.


Ram pollachi
பிப் 18, 2025 14:49

எனக்கு இது ஆச்சரியமா இல்லை, லஞ்சம் வாங்காதவன் எமதர்ம ராஜா மட்டுமே அந்த நேரம் வந்தால் தூக்கிட்டு போய் விடுவார். நேர்மையான அதிகாரிகள் லஞ்சத்தை பணமாக வாங்க மாட்டார்கள். குடும்பத்துடன் இன்ப சுற்றுலா, நட்சத்திர உணவகத்தில் சாப்பிடுவது, தனது சொந்த வண்டிக்கு எரிபொருள் நிரப்புவது, தனது வீட்டுக்கு மதில் சுவர் கட்டுவது இன்னும் பல விசயங்களை செய்து முடித்தால் நம்முடைய வேலை எல்லாம் கச்சிதமாக முடியும்... சக ஊழியர்களுக்கு இது தெரியாது அவர் ஒரு லஞ்சம் பேர்வழி என்று... லஞ்சம் உருமாறி பல வடிவங்களில் நடக்கிறது இந்த தம்மா துண்டு விஷயத்துக்கு இப்படியா மகிழ்வது?


ponssasi
பிப் 18, 2025 14:33

மின் இணைப்புக்கு பதிவு செய்து இருபது வருடங்கள் கழித்து வந்தது இலவச விவசாய மின் இணைப்பு. இரண்டாயிரம் ருபாய் தராத கோபத்தில் மின்பொறியாளர் வரப்பில் வைக்கவேண்டிய மின் கம்பத்தை இருபது அடி தள்ளி உழும் வயலில் வைத்துவிட்டு சென்றார்.


Kasimani Baskaran
பிப் 18, 2025 13:56

தமிழகத்திலா... இருக்கவே இருக்காது உத்தரப்பிரதேசம் என்றல்லவா இருக்கவேண்டும்... - உடன்பிறப்புக்கள் உறுமல்..


Ramesh Sargam
பிப் 18, 2025 12:25

சிறிய அளவில் லஞ்சம் வாங்குபவர்கள் கடந்த சில நாட்களாக சிக்குகிறார்கள். மகிழ்ச்சி. ஆனால், நாம் எதிர்பார்க்கும் பெரிய அளவில் லஞ்சம் வாங்குபவர்கள் இதுவரையில் ஒருவரும் சிக்கவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறையிடம் பெரிய பெரிய சுறாமீன்களை பிடிக்க போதிய பெரிய வலை கிடைக்கவில்லை போல் தோன்றுகிறது.


Saravan
பிப் 18, 2025 12:15

மின்வாரியம் மொத்தமும் கெட்டவர்கள் அல்ல. நல்லவர்கள் ஆயிரக் கணக்கில் உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் டம்மி பதவியில் அமர்ந்து இருக்கின்றனர். எல்லாம் ஆட்சியாளர்களின் லீலை. பணங்கொடுத்தால் தான் முக்கியப் பதவிகள் வழங்கப் படுகின்றன. 10லட்சம் லஞ்சம் கொடுத்து Transfer ல் வருபவர், மக்கள் சேவை எப்படி செய்வார் ? பொது மக்கள் லஞ்சம் வாங்காமல் வாக்களித்தால் இந்த நிலை நிச்சயம் மாறும்... ஜெய்ஹிந்த்...


mothibapu
பிப் 18, 2025 11:49

அவர்கள் பணம் கொடுத்து வேலை, பணிமாற்றம் வாங்கி பிழைப்பு நடத்துகிறார்கள். பணம் செய்யும் இந்த மின் துறை வருமான துறை ஆர்டிஓ துறை போன்ற முக்கியமான இடம் எல்லாம் பணம் தான் பிரதானம். பணம் கொடுக்கலையெனில் இந்தியன் 1 தாத்தா மாதிரி நஷ்டம் அடைவது தான் மிச்சம். நான் இதனால் மிகவும் அடிபட்டு கொண்டே இருக்கிறேன். எந்த அரசும் இந்த கருமத்தை ஒழிக்க மாற்றங்க . இதில் மத்திய மாநில அரசு எல்லாம் ஒன்று தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை