உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக குடும்பத்திற்கு ஊழல் பணத்தை டெலிவரி செய்யும் ஏடிஎம் மெஷின்; செந்தில் பாலாஜியை விமர்சித்த விஜய்

திமுக குடும்பத்திற்கு ஊழல் பணத்தை டெலிவரி செய்யும் ஏடிஎம் மெஷின்; செந்தில் பாலாஜியை விமர்சித்த விஜய்

கரூர்: கரூரில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் நடிகர் விஜய், திமுகவையும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் கடுமையாக விமர்சித்தார். அவரது பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கிய பலர் மயக்கம் அடைந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர்.நாமக்கல்லில் நேற்று பிரசாரத்தை முடித்துக் கொண்ட தவெக தலைவர் விஜய், அடுத்ததாக கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: பேரிச்சை வளர்க்க சிறப்பு திட்டம் கொண்டு வரப்படும், கரூர் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார்கள். ஆட்சியே முடியப் போகுது, இப்போ போய் மத்திய அமைச்சரிடம் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். ஐயா, அமைச்சரே இதுதான் உங்க டக்கா? இங்கு விமான நிலையம் கட்டினால் ஜவுளித் தொழில் எல்லாம் வளர்ச்சியடையும். ஆனால், பரந்தூர் போல் அல்லாமல் மக்கள் பாதிக்கப்படாத வகையில் விமான நிலையம் கட்டினால் சரி. மணல் கொள்ளை கரூரை வறண்ட மாவட்டமாக ஆக்கியது மட்டுமல்லாமல், சட்டவிரோத கல்குவாரிகளால் கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இதுக்கு எல்லாம் யார் பொறுப்பு முதல்வர் சார்? காலை 11 மணிக்கு பதவியேற்றால், 11.05க்கு மணல் கொள்ளையடிக்கலாம் என்று சொன்னவங்க தானே உங்க ஆட்கள். உங்க ஆட்சி வந்தால் பஞ்சபட்டி ஏரிக்கு உயிர் வரும். மக்கள் பாதிக்காத வகையில், ஜவுளி தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை அறிவியல் பூர்வமாக வெளியேற்ற நடவடிக்கை?கரூரில் இருக்கும் முக்கியமான பிரச்னைகளை பார்த்தோம். ஆனால், இன்னொரு முக்கிய பிரச்னைக்கு காரணமானவரை பற்றி பேசாமல் போக முடியுமா? கரூரில் அமைச்சர் அமைச்சர் ஒன்று இருந்தாரே, அவரு இப்போது அமைச்சர் இல்ல. ஆனால், அமைச்சர் மாதிரி தான். ('பாட்டிலுக்கு பத்து ரூபா... என்று பாடலை பாடினார்). கரூரில் அண்மையில் ஒரு விழா நடத்துனாங்களே, 30 பேரு விழாவா? சாரி முப்பெரும் விழா. அந்த விழாவில் முன்னாள் அமைச்சரை (செந்தில் பாலாஜி) முதல்வர் ஸ்டாலின் மெச்சி பேசினார். எதிர்க்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் இங்கு வந்த போது, முன்னாள் அமைச்சரைப் பற்றி என்ன எல்லாம் சொன்னாரு, என்ன எல்லாம் கேட்டாரு. இப்போது, திமுகவில் முன்னாள் அமைச்சர் என்னவா இருக்கிறாரு? என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள் தெரியுமா? திமுக குடும்பத்திற்கு ஊழல் பண்ணும் பணத்தை 24 மணிநேரமும் டெலிவரி செய்யும் ஏடிஎம் மெஷினாக இருக்கிறாராம். அப்படிணு நான் சொல்லலை. ஊருக்குள்ளே பேசிக்கொள்கிறார்கள். இங்கு போலீஸ் பாதுகாப்பு இருக்கிறதா? இல்லையா? போலீஸ் கைகள் எல்லாம் கட்டப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இன்னும் 6 மாதம் தான் ஆட்சி மாறும், காட்சி மாறும். ஆட்சி அதிகாரம் கைமாறும், இவ்வாறு அவர் கூறினார். முடிவில் பிரசாரத்தில் மாயமான 9 வயது பெண் குழந்தையை கண்டுபிடித்துத் தரக்கோரி தொண்டர்களிடம் விஜய் கோரிக்கை விடுத்தார்.40 பேர் உயிரிழப்பு கரூரில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே பயங்கர நெரிசல் ஏற்பட்டது. தள்ளுமுள்ளுவில் சிக்கிய பலர் மயக்கம் அடைந்தனர். அவர்களில் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 10 குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர் முதல்வர் உத்தரவின் பேரில் கரூர் அரசு மருத்துவமனைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்றுள்ளார். மேலும், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மகேஷ் ஆகியோரும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். அதேபோல, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தையும் மருத்துவமனைக்கு நேரில் செல்ல முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும், கரூர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ்களை தயார் நிலையில் வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், கரூர் நிலவரம் குறித்து கலெக்டர் தங்கவேலுவிடம் முதல்வர் கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

ramani
செப் 28, 2025 18:09

முதல் தவறு அரசின் மீதுதான் சொல்ல வேண்டும். காவல்துறையை சரியாக செயல்பட்டிருக்க செய்திருக்க வேண்டும். உள்ளூர் மாஜி உத்தரவின் பேரில் இப்படி சொதப்பினார்களா தெரியவில்லை. நியாயமான சந்தேகம் வருகிறது. இரண்டாவது தவறு விஜய் ரசிகர்கள். மக்கள் சினிமாக்காரன் பின் ஓடுவதை நிறுத்த வேண்டும்.


Veeraputhiran Balasubramoniam
செப் 28, 2025 05:23

There could be a sabotage d by some one as usual . This ai a strategy followed for defaming some one who talk against.


essemm
செப் 28, 2025 03:39

இவனிடம். மக்களும் பணமே மழைப்போல் க்யாவிந்துள்ளது. முழுவத்தையும் அரசு கையகபடுத்தி பொதுமக்களுக்கே திருப்பித்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.


ராஜா
செப் 28, 2025 03:00

நெஞ்சு பொறுக்குதில்லையே என்று இன்னொரு வசனத்தை கூறி இருக்கிறார், அவரது மனைவி மகன் மற்றும் உறவினர்கள் என்று யாரும் இந்த விபத்தில் இல்லை,,,நமக்கு இதெல்லாம் தேவையா? ஆண்டாண்டு அழுதாலும் என்ன பயன்


BHARATH
செப் 28, 2025 02:14

அவனுக்கு கொடுத்த நேரம் என்ன? அவன் எத்தனை மணிக்கு போனான். சாவுக்கு அந்த தற்குறி தலைவன்தான் பொறுப்பு.


R chandar
செப் 27, 2025 22:50

Its a bad planning by TN police vijay got proper permission then only he planned for meeting ruling party ex minister gtoup try to curtail the glory of vijay as he talked and pick up the correct weakness point of ruling party which is affecting the image of the ruling party now they want to gain political mileage by putting blame on vijay


SVR
செப் 27, 2025 21:52

ஆள்பவர்களும் ஆளப்போகிறேன் என்று சொல்பவரும் தான் இந்த பரிதாபத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். பொறுப்பேற்று என்ன செய்வது? போன உயிர் திரும்பி வரப்போகிறதா? இல்லை. இது சினிமா இல்லை. நிஜமான மனிதர்கள். சில வருடங்களுக்கு முன்பு பிஹாரில் மோதி அவர்களின் அரசியல் பிரச்சாரம் செய்த இடத்திலிருந்து பக்கத்தில் குண்டு வெடித்தது கேட்டு மோடியும் பிரச்சாரத்தை உடனே முடித்துக்கொண்டு கூட்டத்தில் உள்ளவர்களை முறையாகவும் ஒழுங்காகவும் வெளியற சொல்லி எந்த அசம்பாவிதமும் நடக்காமல் பார்த்துக்கொண்டார். ஆனால் இந்த சினிமாக்காரர் செட் என்று நினைத்து மக்களப்பற்றி அக்கறை ஏதும் இன்றி இது வரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. அரசாங்கம் தூங்கியிருக்கிறது என்பது அறிய முடிகிறது. இனிமேலும் இந்த சினிமாக்காரரின் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி கொடுப்பார்களா என்பது ஐயமே. இந்த சினிமாக்காரரும் பிரச்சாரத்தை மட்டுப்படுத்த வேண்டும். தானா சேர்ந்த கூட்டம் என்று சொல்லி தப்பித்து கொள்ள முடியாது.


முருகன்
செப் 27, 2025 22:56

உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் எந்த அரசாங்கம் ஒரு கட்சி தலைவரை பார்க்க பல மணிநேரம் வெயிலில் தண்ணீர் உணவு இல்லாமல் நிற்க சொல்லியதா தனிமனிதன் செய்யவும் தவறுக்கு அவரே பொறுப்பு இதில் அரசை குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை உமக்கு இனியாவது எந்த அரசியல் கட்சிக்கும் ரோடு ஷோ நடந்த அனுமதி கொடுக்க கூடாது என தீர்ப்பு வழங்க வேண்டும்


Rajah
செப் 27, 2025 21:52

இந்த துயர சம்பவத்தில் இறந்தவர்களின் கும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த துயரமான சம்பவம் குறித்து ஒரு நேர்மையான விசாரணை வேண்டும். யாராக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். மனச்சாட்சி உள்ளவர்கள் இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்யமாட்டார்கள்.


Veeraputhiran Balasubramoniam
செப் 28, 2025 05:29

அனுமதி அளிப்பதற்கு ஆயிரம் கட்டளை இட்டு அணுமதி கொடுப்பது எதற்காக சட்டம் ஒழுங்கை நிலை நாட்டி மக்கள் உயிருக்கும் உடமைக்கும் பாது காப்பு கொடுக்கத்தான் அப்படி இருக்க ஆளும் அரசு இதில் தப்பிக்க முடியாது மான்சோலை, ஸ்டெர்லிட் யார் மீது பழி போட்டு தேர்தல் லாபம் கண்டனர்


Subburamu K
செப் 27, 2025 21:33

All the political parties leaders are getting ready now to meet the family members of the deceased persons. Our leaders are eagerly waiting for such events for publicity Most of the political netas are highly selfish corrupt crooks It is a great loss to the grieved families, and a gain to political parties exploiting the worst tragedy for their political gains


Palanisamy Sekar
செப் 27, 2025 21:32

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் விஜய் மீது. ஆனால் இதில் விஜய்யை குறை சொல்ல முடியாது. சரியான போலீஸ் பாதுகாப்பினை கொடுக்க தவறியது ஆளும் தரப்பும் அதன் கரூர் தாதாக்களும் தான் காரணமே. அப்பாவி உயிர்களை பலிகொடுத்து விஜய்யை முடக்க பார்ப்பது கண்டிக்கத்தக்கது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை