மேலும் செய்திகள்
நவம்பர் ரேஷன் பொருட்கள் இம்மாதம் சேர்த்து தர முடிவு
12 minutes ago
தமிழக மின் தேவை சரிவு
14 minutes ago
காசி தமிழ் சங்கமம் பங்கேற்பாளர்களுக்கு அனுபவ பகிர்வு போட்டி
19 minutes ago
சென்னை: சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்குவதை கண்டித்து, ஆட்டோ ஓட்டுநர்கள் கூட்டமைப்பு சார்பில், போக்குவரத்து ஆணையரகம் மற்றும் 100 ஆ ர்.டி.ஓ., அலுவலகங்களில் மனு அளித்து, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்கள், கார்கள், விதிகளை மீறி வாடகைக்கு இயக்கப்படுகின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணை யரக அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. பின்னர், அங்குள்ள வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதேபோல், தமிழகம் முழுதும், 100க்கும் மேற்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அரியலுாரில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரி டம் மனு அளித்தனர். இது குறித்து, தமிழ்நாடு ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜாஹிர் ஹூசேன் கூறியதாவது: மொபைல் போன் செயலி வாயிலாக, போக்குவரத்து வசதி செய்து தரும் தனியார் நிறுவனங்களின் இணைப்பு பெற்று, சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு காரணமான, சம்பந்தப்பட்ட தனியார் செயலி நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக, போக்குவரத்து துறை அமைச்சரும், போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளும் உறுதி அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
12 minutes ago
14 minutes ago
19 minutes ago