உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம்: சிவகாசியில் ரூ.500 கோடி பட்டாசு விற்பனை

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம்: சிவகாசியில் ரூ.500 கோடி பட்டாசு விற்பனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகாசி: அயோத்தியில் இன்று ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிவகாசியில் ரூ.500 கோடிக்கு பட்டாசு வியாபாரம் ஆகியதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.பிரதமர் மோடி முயற்சியால் இன்று அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த விழாவை தீபம் ஏற்றி தீபாவளி போல் கொண்டாட வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.இதன் எதிரொலியாக பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள், மக்கள் சிவகாசி வந்து பட்டாசு வாங்கி சென்றுள்ளனர். ரூ.500 கோடிக்கு பட்டாசு வியாபாரம் ஆகி உள்ளது.2023 நவ. ல் தீபாவளி முடிந்த ஒரு வாரத்தில் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி துவங்கியது. ஆனால் சீதோஷ்ண நிலை காரணமாக 25 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. தீபாவளிக்கு தயாரிக்கப்பட்டிருந்த பட்டாசுகள் ஓரளவிற்கு இருப்பு இருந்தன.அயோத்தி கும்பாபிஷேகத்திற்காக வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து பட்டாசு வாங்க வந்தவர்களுக்கு பற்றாக்குறை இன்றி விற்பனை செய்ய முடிந்தது. இதனால் பட்டாசு உற்பத்தியாளர்கள் வியாபாரிகள் ஒரே ஆண்டில் இரு தீபாவளி என மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்பாமா) தலைவர் கணேசன் கூறியதாவது: இந்தியா முழுவதும் இருந்து பட்டாசு வாங்கி சென்றுள்ளனர். பல மாநிலங்களில் பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் வழங்கி உள்ளார்கள்.ரூ.500 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனை ஆகி உள்ளது. பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறோம். ராமர் கோயில் கும்பாபிஷேக நாளான ஜன. 22 ஐ தேசிய திருவிழாவாக அறிவித்து தீபாவளி போல ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட மத்திய அரசை கேட்டு கொள்கிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

mrsethuraman
ஜன 22, 2024 14:52

சிவகாசி மக்களுக்கு தீபாவளி தான் .


jayvee
ஜன 22, 2024 11:07

இருந்தாலும் திராவிட குடும்ப வெடி உற்பத்தியாளர்கள் இந்த வியாபாரத்தில் ஈடுபடவில்லை என்ற செய்தியும் வருமா ? அவ்வளவு சூடு சுரணை ரோஷம் உள்ளதா ?


Venkateswaran V
ஜன 22, 2024 08:17

Magilchi. Lord Rama made the livelihood to the millions. Jai Sriram


அப்புசாமி
ஜன 22, 2024 07:43

பொல்யூஷன்.. பொல்யூஷன்...


Duruvesan
ஜன 22, 2024 10:01

சரிங்க, நீ போயி இதை ராணி பேட்டைல வருஷம் முழுக்க செய்யும் உங்க ஆட்களுக்கு சொல்லு


Bharathi
ஜன 22, 2024 14:47

ஏத்துற மெழுகுவத்தியிலிருந்து தான் அதிக பொல்யூஷன் வருது.


Indhuindian
ஜன 22, 2024 07:15

ஏதோ அவங்களுக்கு நல்ல காலம் இல்லேன்னா பட்டாசு தோஷிற்சாலைகளையெல்லாம் ஜனவரி 22 வரிக்கும் மூட சொல்லியிருப்பாஙக போஷச்சு போங்க


Ramesh Sargam
ஜன 22, 2024 07:05

திருட்டு திமுக அரசு பட்டாசு விற்கக்கூடாது என்று தடை எதுவும் விதிக்கவில்லையே...??


தமிழ்வேள்
ஜன 22, 2024 12:24

அந்த அளவுக்கு திருட்டு திமுக கும்பலின் மூளை வேலை செய்யாது ..அந்த அளவுக்கு ஒர்த் கிடையாது .....[இப்படி நடக்கும் என்று திருட்டு சபையில் சொல்லவில்லை -அதனால் ஒன்றும் செய்யவில்லை -கிறிஸ்டினா மைண்ட் வாய்ஸ் ]


T.Senthilsigamani
ஜன 22, 2024 06:54

மிக நல்ல செய்தி ரகுகுல வம்ச ராமனின் புகழ் பாட இந்த நாளை தேசிய திருநாளாக அனைவரும் கொண்டாடுவோம்


Duruvesan
ஜன 22, 2024 06:46

நமக்கு நல்லது செய்பவருக்கு நாம் ஓட்டு போடுவதில்லை.... விடியலுக்கு தான் காசு வாங்கிட்டு ஓட்டு போடுவோம்


N SASIKUMAR YADHAV
ஜன 22, 2024 06:26

ஆனால் தமிழகத்தில் வெலங்காத விடியாத மனநல குன்றிய திமுக தலைமையிலான மனநல குன்றிய விடியாத திமுக அரசு அனைத்துவிதமான பூஜைகளுக்கு தடைபோட்டுவிட்டதாம் . தமிழகத்தில் திமுக ஆயிஅதிமுக என்றைக்கு ஒழிகிறதோ அன்றைக்குத்தான் உண்மையான தீபாவளி


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை